Published:Updated:

``ஐந்து போட்டோ... அதுக்குப் பின்னாடி இருக்கிற சுவாரஸ்யம்!' - சஞ்சிதா ஷெட்டி

``ஐந்து போட்டோ... அதுக்குப் பின்னாடி இருக்கிற சுவாரஸ்யம்!' - சஞ்சிதா ஷெட்டி
``ஐந்து போட்டோ... அதுக்குப் பின்னாடி இருக்கிற சுவாரஸ்யம்!' - சஞ்சிதா ஷெட்டி

நடிகை சஞ்சிதா ஷெட்டி பேட்டி

`அழுக்கன் அழகாகிறான்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தாலும், `சூதுகவ்வும்' படம்தான் இவருக்கு ஹிட் கொடுத்தது. பிறகு பல படங்களில் நடித்து வந்தாலும், சில சர்ச்சைகளின் காரணத்தால் பெரிதும் பேசப்படாமலேயே இருந்தார். தற்போது, `பார்ட்டி', `ஜானி' ஆகிய படங்களில் நடித்துவருகிறார் சஞ்சிதா ஷெட்டி. அவரிடம் பேசினேன். 

`` `பார்ட்டி' பட வாய்ப்பு எப்படி வந்தது?"  

`` `சூதுகவ்வும்' வெளிவந்த சமயத்துல ஒரு சேனலுக்குப் பேட்டி கொடுக்க சென்னையில உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலுக்குப் போயிருந்தேன். அங்கே `பிரியாணி' பட ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்தது. அங்கேதான் வெங்கட் பிரபு சாரை முதன்முதலா சந்திச்சேன். `சூதுகவ்வும்' படத்தைப் பாராட்டியவர், கொஞ்ச நாளைக்கு அப்புறம் `பார்ட்டி' படத்துல நடிக்கிறீங்களானு கேட்டார். கதை பிடிச்சிருந்தது, ஓகே சொல்லிட்டேன்." 

``பெரும் நடிகர் பட்டாளமே இருக்கிற `பார்ட்டி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருந்தது, படத்துல உங்க கேரக்டர் என்ன?" 

``இந்தப் படத்துல நான் `மாஸ்டர் மைண்ட்' கேரக்டர். எல்லாத்தையும் நுணுக்கமா செய்ற கதாபாத்திரம். `சென்னை 28' படத்துல பல நடிகர்களை ஒருங்கிணைச்சுப் படம் எடுத்த மாதிரி, `பார்ட்டி'யையும் எடுத்திருக்கிறார், வெங்கட் பிரபு சார். பிஜி தீவுக்கு முதன்முறையா `பார்ட்டி' பட ஷூட்டிங் அப்போதான் போனேன். இந்தத் தீவை கோவாவோட பெரிய வெர்ஷன்னு சொல்லலாம். படம் பார்க்கும்போது நாங்க எப்படி அந்தத் தீவுல ஜாலியா இருந்தோமோ, அதை ரசிகர்களும் உணர்வாங்க. 

சிவா, சத்யராஜ் சார், ஜெயராம் சார் மூணு பேரும் ஸ்பாட்ல செம காமெடி பண்ணுவாங்க. ஜெயராம் சார் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்னு எனக்குத் தெரியாது. ரஜினி சார், கமல் சார், மோகன்லால் சார், விக்ரம் சார் இவங்களை மாதிரியெல்லாம் ஜெயராம் சார் மிமிக்ரி பண்ணதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சிவா, `ஜெயராம் சார் ஒரு நல்ல மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். உனக்கு இதுகூடத் தெரியாதா?'னு கலாய்ச்சார். 

ரம்யா மேடம் இருக்காங்களே... சின்ன ஜோக் சொன்னாக்கூட ரொம்ப நேரம் சிரிப்பாங்க. நடிப்பு குறித்து நிறைய டிப்ஸ் எங்களுக்குக் கொடுத்தாங்க. வயசானாலும் இளமையாவே இருக்கிற அவங்களைப் பார்க்க ஆச்சர்யம்தான். இந்தப் படம் மூலமா, எனக்குக் கிடைத்த பெஸ்ட் ஃப்ரெண்ட், ரெஜினா. இப்போ, ரெண்டுபேரும் சேர்ந்து ஷாப்பிங் போற அளவுக்கு ஃப்ரெண்ட் ஆகிட்டோம்!." 

``உங்க இன்ஸ்டாகிராம் போட்டோக்களுக்குப் பின்னாடி இருக்கிற சுவாரஸ்யங்களைச் சொல்லுங்களேன்?" 

``இதோ, இந்த போட்டோதான் என் முதல் இன்ஸ்டா போஸ்ட். இப்போவரை இந்த போட்டோவைப் பார்த்துட்டு பலரும், 'சிம்பு உங்க பெஸ்ட் ஃப்ரெண்டா?'னு கேட்குறாங்க. இது ஒரு விருது விழாவுல எடுத்தது. சிம்புகூட நிறைய பேச வாய்ப்பு கிடைச்சது, அந்த விழாவுலதான்." 

இந்த போட்டோ, ஹிமாலயா டிரிப் போயிருந்தப்போ எடுத்தது. எனக்கு உலகம் முழுக்க டிராவல் பண்ண ஆசை. உள்ளூர்ல சுத்தும்போது நிறைய பேருக்கு நம்மளை அடையாளம் தெரியும்; ஃப்ரீயா இருக்க முடியாது. வெளியூர்ல இப்படி சுத்தும்போது எந்தப் பிரச்னையும் இருக்காதா... அதனால, அடிக்கடி வெளியூர்களுக்கு எஸ்கேப் ஆயிடுவேன்.

இது என் பிறந்தநாளில் எடுத்த போட்டோ. ஒவ்வொரு பிறந்தநாளையும், சொந்த ஊர்ல கொண்டாட மாட்டேன். இந்தப் போட்டோ தர்மசாலாவுல பிறந்தநாளை கொண்டாடும்போது எடுத்தது. அங்கே என்கூட சிம்பு இருந்தார்." 

சச்சின் டெண்டுல்கர் சாரைப் பார்க்கணும்னு சின்ன வயசுல இருந்தே ஆசை. செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில சென்னை ரைனோஸ் அணி சார்பா அவர் வந்திருந்தார். சச்சின் சார்தான் போட்டியைத் தொடங்கி வெச்சார். அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, யாரோ எனக்குத் தெரியாம இப்படியொரு போட்டோவை எடுத்து, எனக்குக் கொடுத்தாங்க. அவர்கிட்ட என்னைப் பற்றி, என் படங்களைப் பற்றிச் சொன்னேன். இன்னொரு முறை இந்த மொமென்ட் என் லைஃப்ல வராதானு இருக்கு."   

இரண்டு மாதங்களுக்கு முன்னாடி `ஜானி' பட டீசரை மணிரத்னம் சார் ரிலீஸ் பண்ணார். படக்குழு மொத்தமும் சார் வீட்டுக்குப் போயிருந்தப்போ, எடுத்த போட்டோ இது.  

``உங்ககூட டிராவல் பண்ண நடிகர்களைப் பற்றிச் சொல்லுங்க?" 

பிரசாந்த்

``செம ஜாலி டைப். நடிக்கிறதுக்கு முன்னாடி நானும் எல்லா 90'ஸ் கிட்ஸ் மாதிரி, அவரோட ரசிகைதான். ஆனா, `ஜானி'யில அவர்கூட நடிச்சதுக்குப் பிறகு, நல்ல நண்பர் ஆகிட்டார்."  

ரெஜினா

``சேர்ல உட்கார்ந்தபடியே தூங்குற பழக்கம் ரெஜினாவுக்கு இருக்கு. நைட் ஷூட் பண்ணும்போது அவங்களால தூக்கத்தைக் கன்ட்ரோல் பண்ண முடியாது. நானும் அப்படித் தூங்க முயற்சி பண்ணேன், முடியல!." 

சத்யராஜ் 

``சார்தான் எங்க எல்லோரையும் ஸ்பாட்ல ஊக்கப்படுத்துபவர். எந்தவொரு இடத்துல தப்பு நடந்தாலும், `டேக் இட் ஈஸி'னு சொல்லி பிரச்னையை முடிச்சு வைப்பார்." 

நாசர் 

``இவர் தியேட்டர் ஆர்டிஸ்ட்ங்கிறதுனால, கதுக்கவேண்டிய விஷயங்கள் நிறைய இருந்துச்சு. எக்ஸ்பிரெஷன்களை எப்படி ஸ்க்ரீன்ல வெளிப்படுத்துறதுனு அழகா கத்துக்கொடுப்பார்." 

ஷாம் 

``என் அண்ணன் மாதிரி. சின்ன வயசுல இருந்தே இவர் எனக்குப் பழக்கம். `தில்லாலங்கடி' படத்துல சேர்ந்து நடிச்சதுக்குப் பிறகு, இன்னும் நல்ல பழக்கம் ஆகிட்டோம்."  

சுரேஷ் 

``எந்த நேரத்துல ஷூட்டிங் நடந்தாலும், மறக்காம சாப்பிடுறது சுரேஷ் சார் ஸ்பெஷல். ஒரு முறை கேரவேன்ல சாப்பாடு இல்லை. உடனே, கார் எடுத்துக்கிட்டு ஹோட்டலைத் தேடிக் கண்டுபிடிச்சு சாப்பிட்டுட்டுத்தான் ஷூட்டிங்குக்கு வந்தார்."

வெங்கட் பிரபு  

``வெங்கட் பிரபு சார் படத்துல ஸ்க்ரிப்ட்தான் காமெடியா இருக்கும். நடிக்கிறவங்களை ஒருபோதும் அவர் காமெடி ஆர்டிஸ்ட்டா மாத்த மாட்டார்."

`` `பல்லு படமா பார்த்துக்கோ' படத்தோட ஸ்பெஷல் என்ன?"

``அட்டக்கத்தி தினேஷுக்கு இந்தப் படம் பெரிய பிரேக் கொடுக்கும். அடல்ட் காமெடிப் படம் என்பதைத் தாண்டி, ஹியூமர் அதிகமா இருக்கும். படத்தோட பாதி ஷூட்டிங் போயிட்டு இருந்தப்போதான், நான் இதுல கமிட் ஆனேன். தீனா, ரிஷி, மொட்டை ராஜேந்திரன் சார் இன்னும் பலரும் நடிச்சிருக்காங்க. நடிப்புனு வந்தா, நல்ல கதைகள் எப்படி இருந்தாலும் நடிக்கலாம். என் நோக்கமும் அதுதான்." என்கிறார், சஞ்சிதா ஷெட்டி. 

அடுத்த கட்டுரைக்கு