``வீட்டில் பூச்செடிக்குத் தண்ணி ஊத்திக்கிட்டிருக்கேன். பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு பேசட்டுமா?’’ - காலா ரிலீஸ் தினத்தின் எந்தப் பரபரப்பும் இல்லாமல் அமைதியாகக் கேட்கிறார் ஈஸ்வரி ராவ்.

`கரிகாலன்' (ரஜினி) மனைவி `செல்வி'யாகவே வாழ்ந்து அனைவரின் பாராட்டுகளையும் அள்ளியிருக்கிறார் இந்த சகல `காலா' ஈஸ்வரி. பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்த இவர், `காலா'வின் துணையோடு கலக்கலாக ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்.

‘`ரொம்ப சந்தோஷமா இருக்கு. காலையிலே இருந்து நிறைய பிரபலங்கள் போன் பண்ணி வாழ்த்து சொல்றாங்க. இந்த நாள் ரொம்ப ஸ்பெஷலான நாள்’’ என்கிறவர், தன் வாழ்க்கையின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளுக்குள் நுழைகிறார்.

``பிறந்தது ஆந்திராவில். படிப்பு ஸ்கூல் வரைக்கும்தான். பிறகு சென்னை வந்துட்டோம். அப்பாவுக்கு பிசினஸ். கறுப்பாயிருந்தாலும் நான் களையாயிருக்கேன்னு நிறைய பேர் சொல்வாங்க. சினிமாவில் நடிக்கவும் கேட்டாங்க. எனக்கு சினிமாவுல அவ்வளவு விருப்பமில்லாத காலம் அது. ஆனா, அம்மாவுக்கு ஆசையிருந்தது. என் முதல் படம் ‘கவிதை பாடும் அலைகள்’. அப்புறம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு சில படங்களில் நடிச்சேன். அப்போதான் அந்த மேஜிக் நடந்துச்சு. பாலுமகேந்திரா சாருடைய `ராமன் அப்துல்லா' படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்தது. அவர் கையால் ஒரு போட்டோ எடுக்க ஆசைப்பட்டு, கடைசில முழு நீளப் படத்தில் நடிச்சுட்டேன். பிறகு சில படங்களில் செகண்டு ஹீரோயினா தமிழில் நடிச்சேன். பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியா நடிக்கணும்னு ஆசைப்பட்டதே கிடையாது. ஆனா, அம்மா எனக்காக ஆசைப்பட்டாங்க. அவங்க ஆசை ‘காலா’ மூலமா நிறைவேறிடுச்சு.

என் கணவர் ராஜாவும் நடிகர்தான். அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘சங்கர் குரு’ படத்தை இயக்கியதும் அவர்தான். `சினிமாவுக்கு இடைவெளி விடு'னு என்னிக் கும் அவர் சொன்னதே இல்லை. குழந்தைகளை வீட்டிலே இருந்து பார்த்துக்குவோம்னு நான்தான் முடிவு பண்ணேன்.

என் பசங்க, ‘அம்மா, திரும்ப எப்போ நடிப்பீங்க... உங்க படத்தை தியேட்டரில் பாக்கணும்’னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்க ஆசை இப்போ நிறைவேறிடுச்சு. ‘காலா’ வாய்ப்பு எனக்கு வந்தப்போ ரஜினியின் அம்மா கேரக்டரில் நடிக்கத்தான் கூப்புடறாங்கனு எங்க வீட்டிலே எல்லாரும் நினைச்சாங்க. ஆனா, ரஜினியின் மனைவி கேரக்டர்னு ரஞ்சித் சொன்னவுடனே ஆச்சர்யம் தாங்கல.

‘காலா’ படத்தின் கதை எதுவுமே தெரியாமதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனேன். ‘ரொம்பத் தெனாவெட்டா இருக்கிற மனைவியா நடிங்க. யதார்த்தமா இருக்கும்’னு ரஞ்சித் சொன்னார். முதன்முதலா ‘காலா’ படத்துக்காகத்தான் டப்பிங் பேசினேன். அதுவும் திருநெல்வேலித் தமிழ். இப்போ வீட்டிலேயும் திருநெல்வேலித் தமிழ் எட்டிப் பார்க்குது. இந்தப் படத்துக்காகக் கொஞ்சம் வெயிட்டும் போட்டேன். அதிக மேக்கப் இல்லாமல் நடிச்சேன். ஹேர் கலரிங் பண்ணக்கூடாதுனு ரஞ்சித் முன்னாடியே ஆர்டர் போட்டுட்டார்.

ரஜினி சார், முழுப் படத்தையும் பார்த்துட்டு, `ஸ்கோர் பண்ணிட்டீங்க ஈஸ்வரி'னு பாராட்டினார். எனக்கு இதுவே பெரிய பாராட்டு!'' என்கிற `தங்கச்சிலை' ஈஸ்வரி இப்போது இயக்குநர் பாலாவின் ‘வர்மா’ படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.

``பாலா சார் உதவி இயக்குநரா இருந்தப்பவே தெரியும். ஆனா, அவ்வளவா பேசியதில்லை. இதுக்கு முன்னாடியே அவருடைய படங்களில் நடிக்கக் கேட்டாங்க. பசங்களைப் பார்த்துக்கணும்னு நான் தவிர்த்துட்டேன். இப்போ பசங்க வளர்ந்துட் டாங்க. அதனால ஓகே சொல்லிட்டேன். அதுவும் பாலா சாரே நேரடியா போன் செய்து கூப்பிடும்போது எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும். இந்தப் படத்துல வேற ஈஸ்வரி ராவைப் பார்ப்பீங்க!’’ - சிரிக்கிறார் காலாவின் செல்வி.