`சதிலீலாவதி பார்ட் 2' வெற்றிகரமா ஓடிட்டிருக்கே. அந்த டைரக்டர் ஆனந்த், என் ஃப்ரெண்டு தெரியுமா? அவனுடைய அப்பா-அம்மா கதையைத்தான் எடுத்துவெச்சிருக்கான்" என சந்தோஷ் பார்ப்பவரிடமெல்லாம் பெருமையடித்துக்கொண்டிருந்தான். ``நாமதான் அடுத்த வாரம் கோயம்புத்தூர் போறோமே. அப்படியே அவரைப் பார்த்தால் என்ன?'' என என் விருப்பத்தைச் சொன்னேன்.

கோவை போய் இறங்கி, வந்த வேலையை முடித்துக்கொண்டு ஆனந்த்திடம் அலைபேசியில் வாங்கிய முகவரியைத் தேடினோம். கொங்கு மண்டலத்தின் சிறப்பு என்னவென்றால், உதவி செய்யச் சொல்லி சாலையில் யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம். நாங்கள் இளநீர்க் கடைக்காரர் ஒருவரைக் கேட்க, அவர் சீவிக்கொண்டிருந்ததை அப்படியே வைத்துவிட்டு வந்து சொன்னார். ``சக்திவேல் டாக்டர் வூடுதானுங்கோ? அப்படிக்கா போவோணும்.''

`ஆஹா, கொங்குத் தமிழ் வரவேற்பு கிடைத்து விட்டது' என நான் நினைத்ததுபோலவே சந்தோஷும் நினைப்பது அவன் முகத்தில் தெரிந்தது.

வீட்டைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமாக இல்லை. மூட்டுவலி அதிகரித்த உலகில், அதற்கான மருத்துவரே இப்போது கடவுள். சென்னையில் பல அறைகள்கொண்ட அவர் வீடு எப்படிப் பயன்பட்டது என்பதைத் தமிழ்நாடே அறியும். அவரைவிடவும் பழனியம்மா சக்திவேல் ஏரியாவில் இன்னும் பாப்புலர். யாரைக் கேட்டாலும், ``நம்ம பழனி வூடு தெரியாம இருக்குமுங்களா?'' என்று புன்னகைத்தனர்.

பழனி, துளிகூட மாறாமல் இருந்தார். அட்டிகையும், ஜிமிக்கியும், தலை நிறைய பூவும், நெற்றியில் குங்குமம், திருநீறு துலங்க மங்கலகரமாக சாமி சிலைபோல வந்தமர்ந்த அவரை விட்டுப் பார்வையை விலக்க முடியவில்லை.

``என்ன சாப்பிடுறீங்கம்மணி?"

``நான்... காபி, டீ எதுவானாலும் ஓகே!'' என்று சொல்ல, பழனி உள்ளே பார்த்துக் குரல்கொடுத்தார். ``ரண்டு டீ போட்டு எடுத்தா.'' அட, உள்ளிருந்து வந்தது ஆனந்தின் தங்கையாகத்தான் இருக்கணும். அப்படியே குட்டிப் பழனி!

``எங்க பொண்ணுதான். பேரு வள்ளி.''

``எடுத்துக்கோங்க்கா. என்ற கையால டீ குடுச்சா மறுக்கா எங்கிட்டும் குடிக்க மாட்டீங்க.''

அம்மாவுக்குச் சளைக்காமல் கொங்கு பாஷை பேசிய சின்னப்பெண்ணை ஆச்சர்யமாகப் பார்த்தோம். பழனியிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை..

பழனி படபடவெனப் பொரிந்து தள்ளிவிட்டார். ``நம்ட பாஷையை எதுக்கு விட்டுக்கொடுக்கோணும்? அதானுங் நம்ம அடையாளம். சின்னப்புள்ளீய மெட்ராஸுக்குப் போகாங்காட்டி மத்த புள்ளீங்க கிண்டல் பண்ணுவாங்கன்னு மாத்திக்குதுங். அது தப்புங்கம்ணீ.''

அவர் சொல்வது சரிதான். தமிழின் உச்சரிப்பைவைத்தே அவர் சார்ந்த மண்ணைக் கண்டுபிடித்துவிடலாம். மெட்ராஸ் பாஷையோ, கொங்குத் தமிழோ, தூத்துக்குடி வட்டார மொழியோ, பிராமண பாஷையோ... தமிழ் தமிழ்தான். கிளைக்குக் கிளை பழத்தின் சுவை மாறுபடும் பெரிய மாமரத்தைப்போல தமிழை நினைத்துக் கொள்வேன்.

``டாக்டர் வீட்ல இல்லீங்களா?''

``அவரு டூட்டிக்குப் போயிருக்காருங். கவுண்டரு இப்ப பெருசா க்ளீனிக்கெல்லாம் கட்டிப்போட்டுட்டாருங். என்ற பேர்லதான். பழனி ஆர்த்தோ'' என்று வாய்கொள்ளாத சிரிப்புடன் வெட்கப்பட்டார்.

`` `கவுண்டச்சிக்கு கார் கத்துக்கொடுத்தது தப்பாயிடுச்சு'னு சொன்னாரே டாக்டரு, நீங்களும் அதேமாதிரி காரைக்கொண்டு கோர்ட் சுவத்துல பார்க் பண்ணீங்க'' என்று சந்தோஷ் சும்மா இல்லாமல் அவரை வம்புக்கிழுத்தான்.

ஏற்கெனவே ரோஜா நிறத்தில் இருந்த அவர் முகம், வெட்கத்தில் இன்னும் அழுத்தமான இளம் சிவப்பில் மாறிவிட்டது. ``ஃபைன கட்டச் சொல்லிட்டு விட்டாங். அப்ப மாசமா வேற இருந்தனில்ல!''

``அது சரி. அப்படியா சந்தேகப்படுவீங்? கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்

லோ?'' என்று தன்னையும் அறியாமல் நண்பன் கொங்குத் தமிழ் பேசிக்கொண்டிருந்தான்.

``உங்கூர்லதான் ஆம்புள பொம்பள கட்டிப்புடிச்சா தப்பில்லீங். நமக்கு அதெல்லாம் தெரியாது. கட்டிப்புடிச்சாலே லவ்வர்ஸ்தானுங். கவுண்டரு இப்பலாம் யாரையும் கட்டிப்புடிக்கிறதில்லீங். அவரு ஹீரோ கணக்கா இருக்காரு. நாம சாக்கிரதையா இருக்கணுமில்லோ?"

அவரின் கொங்குத் தமிழையும் வெள்ளந்தித் தனத்தையும் ரசித்துக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. கிளம்புவதற்கு முன் மனதை அரித்துக்கொண்டிருந்த கேள்வியைக் கேட்டேன்.

``இப்ப டாக்டர் ஃப்ரெண்ட் அருண், அவங்க மனைவி லீலாவதி, பழைய தோழி பிரியா எல்லாரும் எங்கே இருக்காங்க?''

``அவரு, லீலாக்கா எல்லாரும் நல்லா இருக்காங். ஒழுங்கா குடித்தனம் பண்றாருங். அதான பின்ன முக்கியம். அந்தப் பொண்ணு அதும் ஃப்ரெண்டு ராஜாவைக் கட்டிக்கிருச்சு. நாங்கதானுங் கண்ணாலத்த முடிச்சு வெச்சோம்.''

நாங்கள் கிளம்ப ஆயத்தமானோம். ``ஒரு பாட்டு பாடுவீங்களே, கவுண்டரோடு சேர்ந்து. ரெண்டு வரி பாடுங்களேன்.''

``எது? திருவையாத்துல தொடையில தட்டித்தட்டிப் பாடுவாங்கல்லோ... அதுவா?" என்றபடி ஆரம்பித்தார்.

``மாருகோ, மாருக்கோ மாருகயி...''

சதிலீலாவதி

வெளியான ஆண்டு: 1995

நடிப்பு: கமல்ஹாசன், கோவை சரளா, ரமேஷ் அரவிந்த், ஹீரா

இயக்கம்: பாலு மகேந்திரா