Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

• ‘தெலுங்கு பேசத் தெரிந்த நடிகைகளுக்கு தெலுங்கு இயக்குநர்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நீங்களே எங்களைப் புறக்கணித்தால் எப்படி?’’ என்று வெளிப்படையாகக் கேட்டிருக்கிறார் ஸ்ரீதிவ்யா. ‘நான் கிளாமராகவும் நடிக்க ரெடி’ என புது போட்டோஷூட் நடத்தி படங்களையும் வெளியிட்டிருக்கிறார் அவர்.

மிஸ்டர் மியாவ்

• ‘எங்கள் செல்ல இளவரசிக்கு உடல்நிலை சரியில்லை. விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று தன் நாய்க்குட்டியுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. ரசிகர்கள்  Get well soon போன்ற கமென்ட்கள் மூலம் தங்கள் ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

• கெளதம் கார்த்திக்கு ஜோடியாக ‘தேவராட்டம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மஞ்சிமா மோகன். தமிழில் அவருக்கு சரியான வாய்ப்பு அமையாததால், இந்தப் படத்தில் தனது சம்பளத்தைக் குறைத்துள்ளார்.

• ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட ஷூட்டிங், விரைவில் சென்னை, மும்பை என லொகேஷன் மாறுகிறது. ஸ்டன்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் இந்தப் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

• ‘காலா’ படத்தில் ரஜினி பயன்படுத்திய ஜீப்பை, மஹேந்திரா நிறுவனம் கேட்டதற்கிணங்க பரிசாகக் கொடுத்துள்ளாராம் தனுஷ். சென்னையில் உள்ள மஹேந்திரா நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த ஜீப்பில் பலரும் ரஜினி ஸ்டைலில் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொள்கின்றனர்.

மிஸ்டர் மியாவ்

• தெலுங்கில் சாய் பல்லவி நடித்து வெளியான படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அவரது மார்க்கெட் எகிறியுள்ளது. இப்போது வேணு உடுகலா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சாய் பல்லவி. ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

மிஸ்டர் மியாவ்

• தெலுங்கு, தமிழ் என பிஸியாக இருக்கும் நந்திதா, வைபவுடன் இணைந்து ஒரு காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சமந்தாவுக்கு இந்த வருடம் எல்லாப் படங்களுமே ஹிட். அந்த உற்சாகத்துடன் விஜய்சேதுபதியுடன் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு தனது டப்பிங் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

மிஸ்டர் மியாவ்

• தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரகுல் ப்ரீத் சிங் பிஸி. அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கும் ரகுல், ‘‘எனக்கு இந்த வேலை பிடிக்கிறது. பல மணி நேரம் ஷூட்டிங் என்றாலும் அலுப்பதில்லை’’ என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism