Published:Updated:

`முதல்முறையாக இணையும் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண்!’ - ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் #RRR

அலாவுதின் ஹுசைன்
`முதல்முறையாக இணையும் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண்!’ - ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் #RRR
`முதல்முறையாக இணையும் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண்!’ - ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் #RRR

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திர பட்டாளமே நடித்து சர்வதேச அளவில் பட்டையக் கிளப்பிய படம் 'பாகுபலி 2'. எல்லா மொழிகளிலும் வெளிவந்து சூப்பர் ஸ்டார்களின் ரெக்கார்டுகளை தகர்த்து எறிந்த திரைப்படமாக அமைந்தது. இதுவரை ரூ 1,600 கோடிக்கு மேல் வசூலித்த 'பாகுபலி 2', சீனாவிலும் மாற்றம் செய்து  6,000 -க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை தொடர்ந்து ராஜாமௌலியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் வைத்து ‘ஆர்ஆர்ஆர்’ (RRR) எனத் தற்காலிக டைட்டிலுடன் இருக்கும் படத்தை இயக்கவுள்ளதாக ராஜமௌலியும் உறுதிப்படுத்தினார் .  இன்று அப்படம் பூஜையுடன் தொடங்கியது. பாகுபலி போன்றே அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் இப்படம், அவற்றில் இருந்து மிகவும் மாறுபட்டு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத்தில்  இன்று நடந்த விழாவில் சிரஞ்சீவி, இயக்குநர் ராகவேந்திர ராவ், பிரபாஸ், ராணா  ஆகியோர் கலந்துகொண்டனர்.