Published:Updated:

`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி !

`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி !
`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி !

`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி !

`அசுரவதம்' படத்தைத் தொடர்ந்து, சமுத்திரக்கனி இயக்கத்தில் 'நாடோடிகள் 2', கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷுடன் 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'பேட்ட' ஆகிய படங்களை நடித்து முடித்த நடிகர் சசிகுமார், 'கொம்புவெச்ச சிங்கம்டா' எனும் புதிய படத்தில் கமிட்டாகி இருந்தார். இதை 'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.  

'குற்றம் 23', 'தடம்' ஆகிய படங்களைத் தயாரித்த இந்தர் குமார் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோன செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும், கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குநர் மகேந்திரன் அகியோர் நடிக்க உள்ளனர். காரைக்குடியில் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பை நடிகர் சமுத்திரக்கனி கிளாப் அடித்து தொடங்கிவைத்தார். 

அடுத்த கட்டுரைக்கு