Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

facebook.com/ திருப்பூர் குணா:

அவர்கள், நம்மைக் கண்களை மூடி யோகா செய்யச் சொன்னார்கள். நாம் கண்களைத் திறந்தபோது நமது நிலங்களைக் காணவில்லை; காற்றையும் குடிநீரையும்கூடக் காணவில்லை. பதறி நாம் கேட்டபோது அவர்களின் கையில் துப்பாக்கி முளைத்திருந்தது. துப்பாக்கி களின் மத்தியில் எப்படி யோகா செய்வது?

facebook.com/Karki Bava:

`நாடு வளர, நிலத்தைக் கொடுத்தா என்ன?’ன்னு ஷோல்டரை உயர்த்துற ஆளுங்களை நோட் பண்ணிப்பாருங்க. `ராமர் பாலம் இடிக்கப்படும்’னு, `சேது சமுத்திரத் திட்டத்தை வேணாம்’னு சொன்ன ஆளுங்கதான் கணிசமா இருப்பாங்க. இல்லாத ஒண்ணை இடிக்கக் கூடாது; ஆனா, இருக்கிறதை அவுத்துக் கொடுக்கணும். Very good fellows!

வலைபாயுதே

facebook.com/senthil.nathan.372:

தமிழன் என்று நிரூபிக்க, இன்னும் எத்தனை விஷயங்களை ஷேர் செய்ய வேண்டியிருக்குமோ, தெரியலையே!

facebook.com/ ஜெ.வி.பிரவீன்குமார்:

ஆக்சுவலி அனந்த் வைத்தியநாதன் `பிக் பாஸு’ல கலந்துக்கலை. அவர் இருந்த இடத்துல போயிதான் இவங்க செட் போட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

twitter.com/madurai_jinna: 

வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியில் சிந்தாமல் டீ குடிப்பதும் `யோகா’வில் சேரும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வலைபாயுதே

twitter.com/MJ_twets:

அம்மாவுக்குப் பழிவாங்கத் தெரிவதில்லை, மனைவி அப்படியல்ல... ஏதாவது சமைத்து வைத்துவிடுகிறார்!

twitter.com/abuthahir707


அவ்வளவு நேரம் நின்று வரும்போது நாம் இறங்க வேண்டிய இடத்தில்தான் பஸ்ஸில் சீட்டும் காலியாகும்.

twitter.com/kumarfaculty


ரயில்வே ஸ்டேஷனில்...

மனைவி: ஏங்க இப்புடி கடுகடுன்னு முகத்தை வச்சிட்டிருக்கீங்க?  பக்கத்தில இருக்கிறவரைப் பாருங்க..  பொண்டாட்டி யோட எவ்வளவு சந்தோஷமா இருக்காரு?

புருஷன்: வெவரம் கெட்டவளே...  அந்தாளு வழியனுப்ப வந்திருக்கான்டி... நான் உன்னைய அழைச்சுட்டுப் போக வந்திருக்கேன்.

வலைபாயுதே

twitter.com/indupriya911

மழை கனமா பெய்ய ஆரம்பிச்சுது. சட்டுனு நின்னுடுச்சு.... யாரோ கவிதை எழுத ஆரம்பிச்சுருப்பாங்க போல!

facebook.com/Mathimaran V Mathi:

இதுவேதான் அது!

வேகமாகப் போகவேண்டும் என்பதால், எதிரில் வரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என எல்லோரையும் ஏற்றிக் கொன்றுவிட்டுக் கொடூரமாகப் போகிற காருக்கும், சேலத்திலிருந்து சென்னைக்கு விரைவாக வரவேண்டும் என்பதற்காக விவசாய நிலங்கள், மரம், செடி கொடிகள், இயற்கைவளங்களை அழித்து சாலை அமைப்பதும் ஒன்றுதான்.

வலைபாயுதே

twitter.com/Kozhiyaar

பெரிய அறிவெல்லாம் எனக்குத் தேவையில்லை. வருகிற ஃபார்வர்டு செய்தி உண்மையா பொய்யா என்று உணரும் அறிவு இருந்துவிட்டால் போதும்.

facebook.com/ Bogan Sankar:

`பிக் பாஸ்’ பதிவுகளை மட்டும் தடை செய்யக் கூடிய ஒரு செயலி இருந்தால் நன்றாக இருக்கும்’ என எழுதப்படும் பதிவுகளை மட்டும் தடைசெய்யக்கூடிய ஒரு செயலி இருந்தால் நன்றாக இருக்கும்.

வலைபாயுதே

twitter.com/Araikurai

தலயும் இப்டிதான் சுருட்டெலாம் குடுச்சுக் கிட்டு கெத்தா போஸ் குடுத்திருந்தாரு. கடைசியில டொட்டடொய்னு ஸ்கூல் யூனிஃபார்ம்ல ஆட விட்டானுக. பார்ப்போம்.

twitter.com/Raittuvidu


`பிக் பாஸ்’ல சிம்புவை இறக்கியிருக்கணும். ஹரீஷ் கல்யாணை மறுபடியும் சேர்த்திருக் கணும்.  சிம்பு காலையில பூரா தூங்குவாப்ல! நாய் குரைக்கும்! லக்ஸூரி பட்ஜெட் கட்டாகும்! மஹத்/சிம்பு/ஹாரீஸ் மட்டும் ஒரு குரூப்! மத்தவங்க எல்லாரும் எதிர்ப்பக்கம் ஒரு குரூப்! நல்ல என்டர் டெயின்மென்ட்டா இருந்திருக்கும்!

twitter.com/CreativeTwitz


மோடிதான் எனக்கு ராமர் - யசோதா பென். உங்க ராமரைக் கூட்டிட்டு வனவாசம் போயிடுங்க, புண்ணியமாப் போவும்!

வலைபாயுதே

twitter.com/CreativeTwitz

ஆனந்த் வைத்தியநாதன்: சல சல சல ரெட்டைக்கிளவி, தக தக தக ரெட்டைக் கிளவி..!

எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒன்லி தாய்க்கிழவிதாங்க - பொன்னம்பலம்

twitter.com/ArunkumarTNR


தமிழக வளர்ச்சிக்கு எதிராக இருப்பவர்கள்தான் சமூக விரோதிகள்.

-  தமிழிசை.

தமிழிசை மேடம், அது கண்ணாடி!

twitter.com/manipmp:

பாத்ரூம் என்பது பல்லியறை!