விழுப்புரம் வழியா ஒண்ணு, ராணிப்பேட்டை-தர்மபுரி வழியா இன்னொண்ணுன்னு சென்னையில இருந்து சேலத்துக்குப் போக ஏற்கெனவே இரண்டு வழிகள் இருக்கு. இந்த இரண்டு சாலைகளையும் விரிவாக்கம் பண்ணலாமே, எதுக்குப் புதுச்சாலை? அப்படிப் புதுச்சாலை போடுற அளவுக்கு சேலத்தில் அப்படி என்ன தேவை இருக்கு? விவசாய நிலங்களையும், 30 கிலோமீட்டருக்குக் காட்டையும் அழிச்சு இந்தச் சாலையை அமைக்கிறதா சொல்றாங்க. அது அவசியமே இல்லை!’’

பசுமை வழிச்சாலைத் திட்டம் குறித்துக் கோபமாகப் பேசுகிறார் கார்த்தி. கிராமத்து நாயகனாக `கடைக்குட்டி சிங்கம்’ படத்தை முடித்துவிட்டார். அதன் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தவரோடு உரையாடினேன். ரஜினி-கமல் அரசியலில் தொடங்கி, தமிழ்நாட்டுப் போராட்டங்கள், நடிகர் சங்க சவால்கள், இயற்கை விவசாயம், சூர்யா, கடைக்குட்டி சிங்கம் என முறுக்கு மீசையோடு நிறைய பேசினார்.

“ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு நடக்கும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பற்றி ஒரு கலைஞனா என்ன நினைக்கிறீங்க?”

“நான் அரசியலைத் தொடர்ச்சியா ஃபாலோ பண்ற ஆள் கிடையாது. ஆனால், இங்க நடக்குறதெல்லாம் என்னை ரொம்பவே பாதிக்குது. எனக்கே அப்படி இருக்குன்னா நேரடியா பாதிக்கப்படுகிற மக்களுக்கு எப்படி இருக்கும்? தூத்துக்குடியில் மக்களைச் சுட்டுக்கொன்னதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அது காலாகாலத்துக்கும் கண்ணுக்குள்ளேயே நிற்கிற வேதனை.”

“உங்க சூப்பர் சீனியர்கள் கமல், ரஜினி அரசியலுக்கு வந்திருப்பதை எப்படிப் பார்க்கறீங்க?”

“16 படங்கள் பண்ணியிருக்கிற எனக்கே ஷூட்டிங்குக்காக கிராமம், நகரம்னு போகும்போது அவ்வளவு அன்பும் அனுபவமும் கிடைச்சிருக்கு. அப்படின்னா அவ்வளவு படங்கள் பண்ணியிருக்கிற அவங்களுக்கான வரவேற்பைப் பற்றிக் கேட்கணுமா என்ன? தவிர, அவங்க சம்பாதிக்காத காசில்லை, அடையாத புகழ் இல்லை. அரசியலுக்கு வந்துதான் இனிமே புகழ் அடையணும் என்பதும் கிடையாது. அரசியல் என்பது முள்கிரீடம் என்பதும் அவங்களுக்குத் தெரியும். அவங்க வந்தா நிச்சயம் நல்லது பண்ணுவாங்கன்னு நம்புறேன். 2019 நாடாளுமன்றத் தேர்தல்ல ரெண்டுபேரும் போட்டி போடுவாங்களான்னு எதிர்பார்த்துக் காத்திருக்கோம்.”

“சினிமா டு அரசியல் பயணத்தில் கமல், ரஜினி, விஷால்... இந்தப் பட்டியலில் சேரணும்னு உங்களுக்கும் ஆர்வம் இருக்கா?”

‘‘ ‘அகரம்’ அமைப்பைத் தொடர்ந்து பண்ணினாலே மிகப்பெரிய பணியா இருக்கும். இன்னைக்கு அதில் இரண்டாயிரம் பசங்க படிச்சிட்டிருக்காங்க. படிச்சு வர்ற பசங்க தங்களோட வாழ்க்கையையும் கவனிச்சிட்டு அடுத்த வங்க வாழ்க்கையையும் பார்த்துக்கிற மாதிரியான பாதை உருவாகியிருக்கு. இதுவே பெரிய பொதுச்சேவைதான். இதைத் தாண்டி, தனியா அரசியலுக்கு வரணுமா என்ன?”

“இயற்கை விவசாயத்தில் இறங்கிட்டீங்களாமே?”

“ஆமாங்க, பெரியம்மா பசங்க, சித்தி பசங்களோட சேர்ந்து பண்றேன். காத்திருந்து சரியா ஃபாலோ பண்ணினா இயற்கை விவசாயம் நல்ல மகசூல் தரும். ஆனா அதுக்கு நிறைய தெம்பு தேவைப்படுது. எங்களை மாதிரி வேற தொழில்ல சம்பாதிச்சதைக் கொண்டுபோய் விவசாயத்துல போட்டாதான் பண்ணமுடியும். ஆனால், விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறவங்களுக்கு இயற்கை விவசாயம் பெரும் சவாலா இருக்குங்கிறது உண்மைதான்.”

``கடைக்குட்டி சிங்கம்...?’’

“ ‘விவசாயின்னாலே கஷ்டப்படுறவங்கனு காட்ட வேணாம். நிறைவா விவசாயம் பண்ணிட்டு மகிழ்ச்சியா இருக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களை எடுத்துக்காட்டுவோம்’னு பாண்டிராஜ் சார் ஒரு கதை சொன்னார். ‘இதை 2டி தயாரிப்பில் பண்ணினா நல்லா இருக்கும்’னு அதன் நிர்வாகி ராஜசேகரன் சார் சொன்னார். இதோ, படத்தை முடிச்சிட்டோம். விவசாயம், ஆக்ஷன்னு வாழ்வியலும் கமர்ஷியலும் சேர்ந்து உருவாகியிருக்கும் படம். எல்லாருக்கும் பிடிக்கும்.”

“குழந்தைப் பருவத்துல இருந்தே உங்களுடன் பழகிட்டிருப்பவர் சத்யராஜ். அவருடன் நடிச்ச அனுபவத்தைச் சொல்லுங்க?”

“ஒவ்வொரு ஷாட் முடிஞ்சதும், ‘என்ன கார்த்தி, ஓகேவா’னு கேட்பார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு ரீல்லயும் ஒவ்வொருத்தர் ஸ்கோர் பண்ணுவாங்க. அதைத்தான் சத்யராஜ் சார், ‘கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பழைய படங்கள்ல இப்படித்தான் இருக்கும்’னு சொன்னார். அண்ணனிடம், ‘இது பெரிய ஹிட்டு சூர்யா.ரொம்ப நாளைக்குப்பிறகு சந்தோஷமா குடும்பத்தோடு பார்க்கிற படமா இருக்கும்’னு சொல்லியிருக்கார்.”

“படம் பார்த்துட்டு, சூர்யா என்ன சொன்னார்?”

“அப்படியெல்லாம் அவர் பெருசா சொல்லிட மாட்டார். ‘நல்லா வந்திருக்குப்பா’னு சுருக்கமா இரண்டு வார்த்தைகள்ல முடிச்சிட்டார். எனக்கு அண்ணனோட பேனர்ல பண்றதுல சின்ன தயக்கம் இருந்துச்சு. ஏன்னா அவர் ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘பசங்க-2’னு சமூகத்துக்குத் தேவையான படங்களை எடுத்துட்டிருக்கார். நாம அதைக் கெடுத்துடக் கூடாதுனு கவனமா இருந்தேன். தவிர, இது கமர்ஷியலான தீமா இருந்தாலும் வாழ்வியல் இருக்கிறதால சரியாதான் இருக்கும்னு நம்பிப் பண்ணியிருக்கேன்.”

“சினிமா, குடும்பத்துக்கு இடையில் நடிகர் சங்கப் பொருளாளர் வேலைகள் எப்படி இருக்கு?”

“முகம் தெரிஞ்ச நடிகர்கள் பலர் சிரமத்தில இருக்காங்க. ஒரு நாடக நடிகர், ‘சார், நான் நல்ல சட்டை போட்டிருக்கிறதால நல்லா இருக்கேன்னு நினைச்சிடாதீங்க. இது ஒண்ணை மட்டும்தான் பத்திரமா வெச்சிருக்கேன்’னார். சங்கக் கட்டடம் கட்டுவதற்கான முயற்சிகள், 60 வயசுக்கு மேல இருக்கிற சங்க உறுப்பினர்களுக்கு உதவித்தொகைனு மனசுக்கு நிறைவான வேலைகள் பண்ணிட்டிருக்கோம். இந்தப் பொருளாளர் பொறுப்பு, தனிப்பட்ட முறையில் எனக்கு நிறைய அனுபவங்களைக் கொடுத்திருக்கு!”