Published:Updated:

``நம்மை ஓரங்கட்ட முடியாது... பொங்கலுக்கு வர்றோம்!’’ - ரசிகர்களுக்கு சிம்பு மெசேஜ்#VRV

``நம்மை ஓரங்கட்ட முடியாது... பொங்கலுக்கு வர்றோம்!’’ - ரசிகர்களுக்கு சிம்பு மெசேஜ்#VRV
``நம்மை ஓரங்கட்ட முடியாது... பொங்கலுக்கு வர்றோம்!’’ - ரசிகர்களுக்கு சிம்பு மெசேஜ்#VRV

`எந்த ஒரு தனி நபரும் நம்மை அடக்க முடியாது' என சிம்பு தெரிவித்துள்ளார். 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' சர்ச்சை இன்னும் முடியவில்லை. சிம்புவை வைத்து படம் எடுக்கக் கூடாது எனத் தயாரிப்பளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் மணிரத்னம் தயாரித்து இயக்கிய `செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்பு நடித்திருந்தாலும் அப்படம் சொன்ன தேதியில் வெளிவந்தது. 

இதனிடையே, சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு  ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க மேகா ஆகாஷ், கத்ரீன் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மஹத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 2.0, இந்தியன் 2 படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' பிரச்னை தீர்ந்தாலே ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’  வெளியாகும் எனத் தயாரிப்பாளர் சங்கம் படக்குழுவினருக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது. இச்செய்தியை அறிந்த சிம்பு ரசிகர்கள் சிலர் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராகவும் மிரட்டல் விடும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தனர்.  

ரசிகர்களை சமாதானப்படுத்தும் வகையில் சிம்பு பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``அண்மையில் நடந்து வரும் பிரச்னைக்கு யாரும் கவலைப்படத் தேவையில்லை. எந்த ஒரு தனி நபரும் நம்மை ஓரங்கட்ட முடியாது. சங்கமாக அனைவரும் சேர்ந்தே முடிவு செய்வார்கள். இப்பிரச்னையை அனைவரும் சுமுகமாகத் தீர்வு காணலாம். இப்பிரச்னையில் எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் தாக்கிப் பேச வேண்டாம். நம் கடமையை நாம் செய்வோம். முடிவுகள் நமக்கு சாதமாக இருக்கும் #பொங்கலுக்குவர்றோம்" என்று கூறியுள்ளார்.