Published:Updated:

பாலிவுட்டில் அறிமுகமாகும் பா.இரஞ்சித்! - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு #BirsaMunda

பாலிவுட்டில் அறிமுகமாகும் பா.இரஞ்சித்! - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு #BirsaMunda
News
பாலிவுட்டில் அறிமுகமாகும் பா.இரஞ்சித்! - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு #BirsaMunda

பாலிவுட்டில் அறிமுகமாகும் பா.இரஞ்சித்! - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு #BirsaMunda

இயக்குநர் ரஞ்சித் இயக்கும் புதிய படத்துக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின்மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

பாலிவுட்டில் அறிமுகமாகும் பா.இரஞ்சித்! - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு #BirsaMunda

'கபாலி', 'காலா'திரைப்படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் பா. இரஞ்சித் பாலிவுட்டில் களமிறங்குகிறார் என்ற பேச்சு கோலிவுட்டை கலக்கிக்கொண்டிருந்தது. இந்திய சுதந்திரப்போராட்ட காலகட்டத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகப் போராடிய சமூகப் போராளி, பிர்சா முண்டாவின் வாழ்க்கையைப் படமாக்கப்போவதாகத் தகவல் பரவியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பாலிவுட்டில் அறிமுகமாகும் பா.இரஞ்சித்! - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு #BirsaMunda

Photo Credit: Namah Pictures

பாலிவுட் சினிமா விமர்சகர் மற்றும் பத்திரிகையாளரான தரன் ஆதர்ஷ், `` 'கபாலி', 'காலா'  திரைப்படங்களைத் தொடர்ந்து, சமூகப் போராளி பிர்சா முண்டாவின் பயோபிக்கை இந்தியில் இயக்குகிறார் பா. இரஞ்சித். இதை 'பியாண்ட் தி க்ளவுட்ஸ்' திரைப்படத்தைத் தயாரித்த நமா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், நடிகர்  நடிகையர் இன்னும் தேர்வுசெய்யப்படவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இந்தத் தகவலை பா.இரஞ்சித் உறுதிசெய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,  ``மஹாஸ்வேதா தேவி எழுதிய `ஆரன்யெர் அதிகர்’ நாவலை மையமாகக்கொண்டு பிர்ஷா முண்டாவின் வாழ்க்கைக் கதை படமாகத் தயாராக உள்ளது. இந்தப் படம் மூலம் பாலிவுட்டில் நான் இயக்குநராக அறிமுகமாகிறேன். இந்தப் படத்தை நமா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர் தயாரிக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்தத் தகவலை தயாரிப்பு நிறுவனமும் உறுதிசெய்துள்ளது.

பாலிவுட்டில் அறிமுகமாகும் பா.இரஞ்சித்! - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு #BirsaMunda

இதே பயோஃபிக்கை தமிழில் இயக்கவிருப்பதாகக் கூறிய 'அறம்' திரைப்படத்தின் இயக்குநர் கோபி நயினார், பா. இரஞ்சித்தின் கதைக்கும் என்னுடைய கதைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  ஜெயலலிதா, என்.டி.ஆர் பயோஃபிக்கைத் தொடர்ந்து, தற்போது பிர்ஷா முண்டாவின் பயோஃபிக்குக்கும் தயாராக உள்ளது.