சினிமா
Published:Updated:

அவர் அப்படித்தான்!

அவர் அப்படித்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
அவர் அப்படித்தான்!

ர.சீனிவாசன்

தீவிரவாதி, ஆயுதம் வைத்திருந்தவர்... என சஞ்சயின் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களுக்குப் பதில் சொல்வது போல் வெளியாகியிருக்கிறது ‘சஞ்சு.’ 

சஞ்சய் தத்தின் உடல்மொழியை அப்படியே நகலெடுத்து அட்டகாசப்படுத்தியிருக்கிறார் ரன்பீர். விருதுகள் காத்திருக்கின்றன ரன்பீர்!

அவர் அப்படித்தான்!

நட்புக்காக அனுஷ்கா ஷர்மா, தாய் நர்கிஸ் தத்தாக மனிஷா கொய்ராலா, தந்தை சுனில் தத்தாக பரேஷ் ராவல், நண்பனாக விக்கி கௌஷல் எனப் பலர் நடித்திருக்கிறார்கள். நேர்த்தியான திரைக்கதையும், அற்புதமான நடிப்புமே தேவையான தாக்கத்தை ஏற்படுத்திவிட, ரஹ்மானின் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும், ரவி வர்மனின் ஒளிப்பதிவிற்கும் பெரிய வேலையில்லை.

சஞ்சய் தத்தை ஒரு மகாத்மாவாக உருவகப்படுத்துவதில் அவருக்கே உடன்பாடில்லை என ஆரம்பிக்கும் படம், அவரின் இன்னொரு பக்கத்தை நம் முன்னே விரிக்கிறது. போதையால் வீழ்ந்தது, ‘350 பெண்களுடன் படுத்திருக்கிறேன்’ என்று மனைவி முன்னிலையிலேயே ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுவது, நண்பனின் காதலியுடனே படுக்கை யைப் பகிர்ந்தது, தொழிலில் ஈடுபாடே இல்லாமல் இருந்தது என, சஞ்சயைப் புனிதப்படுத்தாமல், ‘அவர் அப்படித்தான்’ என்கிறது படம். “நான் கெட்டவனா என்றால், இல்லை, ஆனால் தவறு செய்திருக்கிறேன்” என்பதுதான் ‘சஞ்சு’வின் வாதம். ஆனால், ஆர்.டி.எக்ஸ் வண்டி தன் வீட்டில் நிற்கவேயில்லை, தவறான நபர்களுடன் தொடர்பு என்பது பயத்தால் ஏற்பட்ட நட்பு மட்டுமே போன்ற வாதங்களை இன்னும் சற்று அழுத்தமான காட்சிகளால் பதிவு செய்திருக்கலாம்.

இறுதிக்காட்சியில், சிறையிலிருந்து வெளிவந்தவுடன், தன்னை ‘டெரரிஸ்ட்’ என்று அழைக்கும் ரசிகரைப் பார்த்து ஒரு நொடி சஞ்சு தடுமாற, பின்பு ‘அவர்கள் பேசட்டும்’ என்று தலைப்பிட்ட தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்துடன் அவர் அங்கிருந்து நகர்வது ஹிரானி டச்!

படத்தில் வரும் ஒரு வசனம், “தவறான முடிவுகள்தான், நல்லதொரு கதையை உருவாக்கும்!” ‘சஞ்சு’ அப்படித்தான்!