சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

குவான்டின் டாரன்டினோ அடுத்து இயக்கும் படம் ‘ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட்.’   இந்தப் படத்தில் பிராட்பிட், லியனார்டோ டிகாப்ரியோ, அல்பசினோ, கர்ட் ரஸ்ஸல் என ஹாலிவுட்டின் முன்னணிகளில் பாதிப்பேர் நடிக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை, சென்றவாரம் வெளியிட்டார் டாரன்டினோ. பிராட்டும் லியனார்டோவும் 60களின் நாயகர்களைப்போலத் தோன்றும் இந்தப் போட்டோ, வெளியிட்ட சில நிமிடங்களில் உலக வைரல் ஆனது. இரண்டுபேரும் ஹாலிவுட் தல-தளபதிகளாச்சே! 

இன்பாக்ஸ்

1998-ல் ‘காதல் கவிதை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார், இஷா கோபிகர். தமிழ் கடந்து, இந்தியிலும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தவர் திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். இந்நிலையில், 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழுக்கு வருகிறார் இஷா. சிவகார்த்திகேயன் நடிக்க, ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கவிருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் இஷாவுக்கு முக்கியமான வேடமாம். வெல்கம் பேக் இஷா! 

கிராமத்து நாயகனாகவே பார்த்துப் பழகிய சசிகுமாரை, தனது படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க வைத்திருக்கிறார், கெளதம் மேனன். ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தில், சசிகுமார் தனுஷுக்கு அண்ணன். கூல் ப்ரோ!

இன்பாக்ஸ்

1950-களில் நடந்த கொரியப் போரில் ஐந்து வயது சிறுமி கிம் யூன் ஜாவின் ( Kim Eun-ja ) குடும்பம் கொல்லப்பட்டது. அதில் பேசும் திறனை இழந்த கிம்மை, துருக்கி ராணுவ வீரர் சுலைமான் தில்பிர்லிகி (Suleyman Dilbirligi) தன் முகாமுக்கு எடுத்துச்சென்று, ‘அய்லா’ எனப் பெயரிட்டு கிம்மை வளர்த்து வந்தார். அய்லாவைத் சொந்த மகளைப்போலவே அரவணைத்து வளர்த்த சுலைமான், போருக்குப் பிறகு அய்லாவைக் கொரியாவிலேயே விட்டுவிட்டு நாடுதிரும்பினார்.  அதற்குப் பிறகு, 60 ஆண்டுகள் கழித்து இஸ்தான்புல் பகுதியில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். இந்த உண்மைச் சம்பவத்தை ‘அய்லா: தி டாட்டர் ஆஃப் வார்’ (Ayla: The Daughter of War) என்ற பெயரில் படமாக்கி, கொரியாவில் வெளியிட்டுள்ளனர். இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. சென்டிமென்ட் ஜெயிக்கும்!

இன்பாக்ஸ்

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் டிரைலரில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் வில்லத்தனமான ரோல் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.  `தமிழ் சினிமாவின் மீது எப்போதும் ரகசியக் காதல் உண்டு. மிகப்பெரிய திறமைசாலிகளை வைத்திருக்கும் இடம் இது. வெற்றிமாறன், கௌதம் மேனன், வசந்தபாலன், பாலா ஆகியோர் டிரைலர் பார்த்துவிட்டுப் பாராட்டினார்கள். இப்போதே மூன்று பேர் நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். இனி தமிழில் நடிக்கலாம் என்று இருக்கிறேன்!’ என்கிறார். வர்லாம் வர்லாம் வா!

கிறிஸ்டியன் பேல் அடுத்து நடிக்கும் படம் ‘ஃபோர்டு வெர்ஸஸ் ஃபெராரி’. கார் வடிவமைப்பாளர்களுடன் இணைந்து உலகின் அதிவேகக் காரான ஃபெராரியைத் தோற்கடிக்கப் போராடும் கார் ஓட்டுநராக இதில் நடிக்கிறார் பேல்.  நிச்சயம் கெட்டப் சேஞ்ச் இருக்கும்!

இன்பாக்ஸ்

மிழைவிடத் தெலுங்கு சினிமாவில் முதல்வர் வேட்பாளர்கள் அதிகம். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு சமீபத்தில் நடித்த ‘பரத் அனே நேனு’ படத்திலேயே தன்னுடைய அரசியல் என்ட்ரிக்கு அச்சாரம் போட்டிருந்தார். இப்போது தன் அடுத்த படத்தில் அதைவிடவும் பவர்ஃபுல்லான அரசியல் பேசியிருக்கிறாராம். ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி இயக்கத்தில் 25-வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் மகேஷ்பாபு. இப்படம் விவசாயிகளின் தற்கொலைப் பிரச்னையையும் ஆந்திராவின் ஊழல் அரசியல்வாதி களையும் மையப்படுத்திய படமாக இருக்குமாம். தூக்கி அடிங்க!

லேடி காகாவின் ஆடை ஆர்வத்துக்கு அணை போட்டிருக்கின்றன அவரின் ஆல்பங்களை ரிலீஸ் செய்யும் நிறுவனங்கள். அவர்களின் வேண்டுகோள், ஆடைக்குறைப்பு தொடர்பானதல்ல. அவற்றைத் தேர்ந்தெடுப்பதில்... சென்றவருட எம்டிவி விருது நிகழ்ச்சிக்கு விலங்குத்தோலுக்குப்பதில் இறைச்சியையே ஆடையாக அணிந்து வந்து அனைவரையும் மிரளவைத்து அழகு பார்த்தார் காகா. அப்போதிருந்து பயமுறுத்தும் அவுட்பிட் ஆசை அவரைப் பிடித்து ஆட்ட... ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வீடியோவிலும் கிறுக்குத்தனமான உடைகளில் வலம்வர... ஆல்பங்களைவிட சர்ச்சைகள் அதிகமாக.... `போதும் இத்தோட நிறுத்திக்கோங்க’ எனக் கொடி பிடித்திருக்கிறார்கள். பாருங்க உங்க போட்டோகூடப் போட முடியலை!