Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

பி
ரபல நடிகையைக் கடத்திப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்ட நடிகர் திலீப், மலையாள நடிகர்கள் கூட்டமைப்பான ‘அம்மா’விலிருந்து அப்போது நீக்கப்பட்டார். இப்போது அவரை மீண்டும் ‘அம்மா’ அமைப்பில் சேர்த்திருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் உள்பட சில நடிகைகள் ‘அம்மா’விலிருந்து விலகியுள்ளனர். கேரளாவை ஆளும் இடதுசாரிக் கூட்டணி இந்த நடிகைகளின் நியாயக் குரலுக்கு வலுச் சேர்த்துள்ளது. ஆனால், இடதுசாரிக் கட்சிகளில் இருக்கும் நடிகர்களான முகேஷ், கணேஷ்குமார் போன்றவர்கள் இந்த நடிகைகளை விமர்சனம் செய்துள்ளனர். இதனால், ‘‘கட்சி, இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்ற குரல் இப்போது வலுக்க ஆரம்பித்துள்ளது.

மிஸ்டர் மியாவ்

சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானர் படத்துக்கு நடன இயக்குநராக பாலிவுட்டில் இருந்து பரேஷ் சிரோத்கர் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கிரீஸ் தேசத்துக்குச் சுற்றுலா போயிருக்கிறார் காஜல். கிரேக்க அழகிகள் நடமாடிய வரலாற்றுச் சின்னங்களின் எதிரில் நின்று போட்டோக்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் மியாவ்

ஹைலைட்

தெ
லுங்கில் டாப் வரிசையில் இருந்த ரகுல் ப்ரீத் சிங், திடீரென ஒரு வாய்ப்பும் இல்லாமல் தவித்தார். அவருக்குக் கைகொடுத்திருக்கிறார் ராம் சரண். பொயபடி சீனு இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். 

மிஸ்டர் மியாவ்

ஜெய் நடிக்கும் ‘நீயா 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கேத்ரீன் தெரஸா,
ராய் லட்சுமி, வரலட்சுமி நடிக்கும் இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்களில் வருகிறார் ராய் லட்சுமி.

மிஸ்டர் மியாவ்

வைரல்

சோ
னம் கபூர் - ஆனந்த் அஹுஜா திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இவர்களின் திருமணப் புகைப்படங்களை சோனமின் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

மிஸ்டர் மியாவ்

றிமுக இயக்குநர் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. படத்தின் டீஸர் மற்றும் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘டிங் டாங் பெல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சந்தோஷ் ஜெயக்குமார் இயக்குகிறார்.

யன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட் ஆனதைத் தொடர்ந்து, ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.