சினிமா
Published:Updated:

“அம்மா வேலை செய்வதைக் குழந்தைகள் பார்க்க வேண்டும்!”

“அம்மா வேலை செய்வதைக் குழந்தைகள் பார்க்க வேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அம்மா வேலை செய்வதைக் குழந்தைகள் பார்க்க வேண்டும்!”

அழகுசுப்பையா ச.

யக்குநராக இண்டாவது படம் ‘மன்டோ.’ கேன்ஸ் திரைப்பட விழா, சிட்னி திரைப்பட விழாவில் சிறப்புத் திரையிடல் எனப் பாராட்டுகள் குவிய, பெருமகிழ்ச்சியில் இருந்த நந்திதா தாஸிடம் பேசினேன்.

“அம்மா வேலை செய்வதைக் குழந்தைகள் பார்க்க வேண்டும்!”

“சதக் ஹசன் மன்டோ போன்ற சர்ச்சைக்குரிய கதாபாத்திரம் பற்றிப் படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?”

“அவர் வாழ்ந்த கால கட்டத்தில் இருந்த அரசியல் சூழல், மக்களைப் பற்றிய தன் பார்வையை எளிமையான விவரணைகளில் பதிவு செய்துள்ள விதம் என்னை பாதித்தது. மன்டோவின் தைரியமும் மனிதர்கள்மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் எனக்கும் அவருக்குமிடையில் பெரிய இணைப்பு இருப்பதாக உணரச் செய்தது.  71 ஆண்டுகள் கழித்து இப்போதாவது அவரையும் அவருடைய கருத்துகளையும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் நம்மால் கொண்டாட முடிவதே பெரிய சந்தோஷம்தான். எதற்கும் அடிபணியாத மன்டோவின் சுயமும் பழைமைவாதத்திற்கு எதிரான அவருடைய செயல்பாடுகளுமே அவரைப் பற்றிப் படமெடுக்கத் தூண்டியது.”

“ ‘மன்டோ’ திரைப்படத்தை உருவாக்குவதில் சந்தித்த பிரச்னைகள், கற்றுக்கொண்ட விஷயங்கள்?”

“ ‘மன்டோ’ படம் இயக்குவதில் இருந்த ஒரு மிகப்பெரிய சவால், நவீனமாகிவிட்ட மும்பை மற்றும் லாகூர் ஆகிய இரண்டு நகரங்களிலும் அந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் இடங்களைக் கண்டு பிடிப்பதுதான். விஷுவல் எஃபெக்ட்ஸ், செட் ஆகியவற்றுக்கான போதுமான பட்ஜெட் இல்லை. இந்தப் படத்திற்கான லொக்கே ஷன்களைத் தேடியலைந்தது எனக்கு நல்ல அனுபவம். அதேநேரத்தில் ஒரு அம்மாவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் என் குழந்தையைக் கவனித்துக்கொள்வதும் எனக்குச் சவாலாக இருந்தது. நம்மைப்போன்ற ஆணாதிக்க மனநிலை கொண்ட சமூகத்தில் அம்மா வேலை செய்வதைக் குழந்தைகள், குறிப்பாக ஆண் குழந்தைகள் பார்ப்பது என்பது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கிறேன்.

இந்தப் படத்தின் ஒவ்வொரு துறையின் வேலைகளிலும் முழுதாக என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். என்னைப் பொறுத்தவரை இதில் வேலை செய்ததை அடுத்தடுத்து எடுக்கப்போகும் படங்களுக்கான ரிகர்சலாகவே பார்க்கிறேன்.”

“அம்மா வேலை செய்வதைக் குழந்தைகள் பார்க்க வேண்டும்!”

“கருத்து சுதந்திரத்திற்கு எதிராக மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவும் சூழலில் ‘மன்டோ’ மாதிரியான படங்களுக்கு எந்தளவு வரவேற்பு இருக்குமென்று நினைக்கிறீர்கள்?”

“இன்று, கருத்து சுதந்திரம் என்பது சமரசம் செய்துகொள்வது என்றாகிவிட்டது. மன்டோ தான் கண்ட உண்மையைப் பற்றிப் பேசுவதற்காகப் போராடினார். அதற்காக ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டார். எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டார். ஆனால், இன்று நாம்  அவரைக்கொ ண்டாடிக்கொண்டி ருக்கிறோம். மன்டோ கதையின் முக்கிய அம்சமே, ஓர் எழுத்தாளனுடைய தைரியம், நம்பிக்கை, கோபம், தனிமை ஆகியவையே ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக, நினைத்ததைப் பேசவும் சுதந்திரமாக வாழவும் வேண்டும் என்ற எண்ணம் இப்போது எல்லோரிடமும் இருக்கிறது என்றால் அதற்கு மன்டோ போன்ற முன்னோடிகள்தான் காரணம்.”

“மன்டோ கேரக்டரில் நவாஜுதீன் சித்திக்கி எப்படிப் பொருந்தியிருக்கிறார்?”


“`மன்டோ’ கதை எழுதும்போதே, நவாஜுதீன் சித்திக்கிதான் என் மனதில் இருந்தார். நான் இயக்கிய முதல் படத்தில் அவர் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். ஒரு படத்திற்கான நடிகர்கள் சரியாக அமைந்துவிட்டால், 70% வேலைகள் முடிந்துவிட்டதாக எல்லோரும் சொல்வார்கள். நவாஜுதீன் விஷயத்திலும் அதுதான் நடந்தது. அவருடைய கண்களின் எங்கோ ஒரு மூலையில் மன்டோ இருப்பதாகவே பட்டது. நான் என் ஸ்கிரிப்ட்டோடு போனால், நவாஜுதீன் அவருடைய வாழ்க்கை அனுபவங்கள், திறமையோடு வந்து நிற்கிறார். ரெண்டுபேரும் சேர்ந்து மன்டோவின்  சில நுட்பமான விஷயங்களைக் கொண்டுவந்திருக்கிறோம் என்றே நினைக்கிறேன். நவாஜுதீன், மன்டோ போலவே பல குணங்களைக் கொண்டிருக்கிறார். எனவே அவரால் எளிதில் மன்டோவைத் திரையில் கொண்டுவர முடிந்தது. நடிகராகவும் இயக்குநராகவும் இருவருக்குள்ளும் மிகப்பெரிய இணைப்பு இருப்பதாக நினைக்கிறேன்.” 

“அம்மா வேலை செய்வதைக் குழந்தைகள் பார்க்க வேண்டும்!”

“சினிமாத்துறை பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர்களை சமமாக நடத்துவதாகவும் நீங்கள் நம்புகிறீர்களா?”

“சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இன்னும் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. ‘#MeToo’, ‘Equal Means Equal’ போன்ற உரையாடல்கள் மூலமாக, மூடிய கதவுகளுக்குள் பேசிக்கொள்வதிலும், ரகசியங்களை முணுமுணுப்பதிலேயுமே நாம் திருப்திபட்டுக்கொள்கிறோம்.

இந்தியாவில் பெண் சுதந்திரம் தொடர்பாக ஒரு கள்ள மௌனம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால், இந்தியச் சமூகம் இன்னமும் ஆணாதிக்கச் சமூகமாகவே இருக்கிறது. பெண்கள் இன்னும் பாதுகாப்பில்லாமல்தான் உணர்கிறார்கள். சினிமாவும் அந்த ஆணாதிக்கத்தில்தான் இருக்கிறது. ஒரு திரைப்படைப்பை ஒருவரிடம் காட்டும்போது, முதல் கேள்வியாக ‘யார் ஹீரோ?’ என்றுதான் கேட்கிறார்கள். முன்னணி நடிகையாக இல்லாத ஒரு பெண் முக்கியமான கதாபாத்திரமாக நடிக்கும்போது, அப்படத்தில் முன்னணி நாயகனாக இருக்கும் நடிகர், அவருக்கு ஜோடியாக நடிப்பதில்லை. ஆனால், ஆண்கள் விஷயத்தில் அப்படியே தலைகீழாக நடக்கிறது. இதெல்லாம் மாறுவதற்குப் பல காலம் தேவைப்படும்.

அதேநேரம், கேமராவுக்குப் பின்னால் பல பெண்கள் வேலை செய்யத் தொடங்கிவிட்டார்கள். பெண்கள் பற்றிய பார்வையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சில படங்கள் பெண்களை செக்ஸியாகக் காட்டி இன்னமும் ஆண்களின் கண்களுக்குக் கிளர்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, பெண்களை மையப்படுத்திய கதைகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுவே இப்போதைய ஆறுதல்; எதிர்காலத்துக்கான நம்பிக்கை.”