Published:Updated:

ஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்லணுமா? - இசையமைப்பாளர் சிவாத்மிகா

ஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்லணுமா? - இசையமைப்பாளர் சிவாத்மிகா
பிரீமியம் ஸ்டோரி
ஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்லணுமா? - இசையமைப்பாளர் சிவாத்மிகா

எவர்கிரீன் இசைஉ.சுதர்சன் காந்தி, படங்கள் : வீ.நாகமணி

ஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்லணுமா? - இசையமைப்பாளர் சிவாத்மிகா

எவர்கிரீன் இசைஉ.சுதர்சன் காந்தி, படங்கள் : வீ.நாகமணி

Published:Updated:
ஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்லணுமா? - இசையமைப்பாளர் சிவாத்மிகா
பிரீமியம் ஸ்டோரி
ஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்லணுமா? - இசையமைப்பாளர் சிவாத்மிகா

ப்பா அம்மா மலையாளி. ஆனா, நான் படிச்சு, வளர்ந்தது எல்லாமே கோவையில்தான். 11-ம் வகுப்பு படிக்கும்போது என்னை ஸ்கூல்ல இருந்து தூக்கிட்டாங்க. காரணம், நான் தொடர்ந்து ஃபெயில் ஆகிட்டே இருப்பேன். ஒருமுறை பிசிக்ஸ் எக்ஸாம்ல நாலு மார்க்தான் வாங்குனேனா, பார்த்துக்கோங்க. பதில் எழுதுறதைவிட கேள்வித்தாள்ல பாட்டு வரிகள் எழுதுறதுதான் அதிகம். பரீட்சை எழுதுறது செம போர். அதிலும் நான் படிச்சது சி.பி.எஸ்.இ. என்னைச் சுற்றி படிப்ஸா இருப்பாங்க.  அதனால, டீச்சர்ஸ், கூடப்படிக்கிறவங்கனு எல்லாருமே என்னை விசித்திர ஜீவியாத்தான் பார்ப்பாங்க.

எனக்கு ஃப்ரெண்ட்ஸுனு யாரும் கிடையாது. வீட்லயும் நான் ஒரே பொண்ணு. என்டர்டெயின்மென்ட்டுக்கு வழியே இல்லை. அதனாலயே போட்டோகிராபி, கதை எழுதுறது, பெயின்டிங், ஸ்கெட்சிங்னு எக்கச்சக்க விஷயங்களை நானாவே கத்துக்க ஆரம்பிச்சேன். மியூசிக்கும் அப்படி வந்ததுதான். ஆமாம், மியூசிக்ல எனக்கு இன்ஸ்பிரேஷனே என் லைஃப்தான். என் சந்தோஷம், கஷ்டம் எல்லாத்தையும் வெளிப்படுத்த இசையைத் தேர்ந்தெடுத்தேன்.

மூணு வயசுலயே விஜயஜெயா மேடம்கிட்ட கர்னாட்டிக் மியூசிக் கத்துக்க சேர்த்துவிட்டாங்க. ஆறாவது படிக்கும்போது நானே பாட்டு எழுதி மியூசிக் கம்போஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அதுவும் நான் முதல்ல கம்போஸ் பண்ணினது நாயைப் பற்றிய பாடல். நாய்தான் இருக்கறதிலேயே நல்ல உயிரினம்னு சொல்லுவேன்...” - பேசப்பேச உற்சாகமாகிறார் சிவாத்மிகா.  இவர், `ஆண்டனி’ என்ற படத்தின் மூலம் இளம் வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார்.

ஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்லணுமா? - இசையமைப்பாளர் சிவாத்மிகா

“ ‘நீ பப்ளிக் எக்ஸாம்ல நல்ல மார்க் எடுத்தா, ஒரு கீபோர்ட் வாங்கி தரேன்’னு அப்பா சொன்னார். ராப்பகலா படிச்சு நல்ல மார்க் வாங்கினேன். ‘இது நீ எழுதி வாங்கின மார்க்கா?’னு அப்பாவுக்குப் பயங்கர சந்தேகம். ஆனா, ப்ளஸ் டூல நல்ல மார்க் எடுத்தா இன்ஜினீயரிங் சேர்த்துவிட்ருவாங்கன்னே நல்ல மார்க் வாங்கலை” - கண்சிமிட்டி சிரித்தவர் தொடர்கிறார்...

“ரஹ்மான் சார் காலேஜ்ல ஆறு மாசங்கள் எலெக்ட்ரானிக் மியூசிக் புரொடக் ஷன் கத்துகிட்டேன். நிறைய டைரக்டர்களுக்கு நான் கம்போஸ் பண்ணின மியூசிக் டியூனை ஃபேஸ்புக் மூலமா அனுப்பிவைப்பேன். அதுல ஒருத்தர் கேட்டுட்டு குட்டி குமார் சார்கிட்ட சொல்லியிருக்கார். குமார் சார் என்னை சந்திச்சு, ‘இதுதான் சிச்சுவேஷன். இதுக்கு ஒரு ட்யூன் கம்போஸ் பண்ணுங்க’னு சொன்னார். அதுதான் ‘காற்றின் காதல்’ பாடல். ‘உன்னை நம்பி எப்படி ஒரு படத்துக்கு மியூசிக் போட சொல்லுவாங்க’னு அப்பா நம்பவே இல்லை. அவர் கேட்டதுமே எனக்கும் லைட்டா டவுட்டுதான்” என்று சிரிக்கிறார்.

“என் ஃப்ரெண்டு ஒருத்தர்தான் என் வாழ்க்கையை மியூசிக் பக்கம் திருப்பிவிட்டவர். உடனே பாய் ஃப்ரெண்டு, லவ்னு நினைச்சிடாதீங்க. அப்ரஜித், என் நல்ல நண்பர். நான் ஸ்கூல் முடிச்சு புராடெக்ட் டிசைனிங் பண்ணப்போறேன்னு சொன்னதுக்கு, ‘உனக்கு மியூசிக்தானே பிடிக்கும். மியூசிக் பண்ண வேண்டியதுதானே’னு கேட்டார். ‘அதிர்ஷ்டம் இல்லைனா அங்கே ஜெயிக்க முடியாதே’னு சொன்னேன். ‘நீ ஹார்டுவொர்க் பண்ணிட்டே இரு. ஒருநாள் எல்லாமே சரியா அமையும்’னு சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்லணுமா? - இசையமைப்பாளர் சிவாத்மிகா

என்ன நடந்தாலும் மியூசிக்தான் என் லைஃப்னு அப்பதான் முடிவு பண்ணினேன். அப்படி எடுத்த ரிஸ்க்தான் என்னை இந்தளவுக்கு கூட்டிட்டு வந்திருக்கு. ஆனா, இந்தப் பட வாய்ப்பு வந்தபோது, அப்ரஜித்கிட்ட தொடர்பிலேயே இல்லை. ஃபேஸ்புக்ல தேடி அலைஞ்சு, ஒரு வழியா அப்ரஜித்தைப் பிடிச்சு, மியூசிக் பண்ண தகவலைச் சொன்னேன். அவர் செம ஹேப்பி...'' என்கிற சிவாத்மிகா, தான் இசையமைத்த படம் பற்றிச் சொல்கிறார்.

“த்ரில்லர் ஜானர் படம்னாலே மியூசிக் டைரக்டருக்கு பெரிய சேலஞ்ச் இருக்கும். இந்தப் படத்துல த்ரில்லரோடு நிறைய  உணர்வுகளும் இருக்கும். கம்போஸ் பண்ண உட்காரும்போது பதற்றமாவும் பயமாவும் இருந்துச்சு. அதனால், மியூசிக் டைரக்டர் ஆகிட்டோம்னு சந்தோஷப்படவே தோணலை.  ஹீரோவின் எக்ஸ்ப்ரஷனையும் எமோஷனையும் வெச்சுதான் மியூசிக் பண்ணேன்'' என்கிறவருக்கு எந்த மியூசிக் டைரக்டர் பிடிக்குமாம்?

``இந்தக் கேள்விக்கு உலகமெங்கும் ஏதோ ஓர் ஆண் பேரைத்தான் சொல்வாங்க. இந்த ஸ்டீரியோ டைப் பதிலை உடைக்கணும். என் பேட்டியைப் பார்த்து, பெற்றோர் தன் குழந்தைகளை அவங்களுக்குப் பிடிச்ச துறையில் சாதிக்க அனுமதிக்கணும். அதன்மூலம் இரண்டு பெண்கள் மியூசிக் டைரக்டரா ஆனாங்கன்னா, அதுதான் என் ரியல் சக்சஸ். நான் இந்த உலகத்துல இல்லைன்னாலும் காலம் கடந்தும் என் இசை எவர்கிரீனா இருக்கணும். அது போதும் எனக்கு'' என்று அவர் சொல்லும்போது, அந்த உற்சாகம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது.

வெல்கம் சிவாத்மிகா!