Published:Updated:

`அப்போ நம்ம பணம்!’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்

`அப்போ நம்ம பணம்!’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்
`அப்போ நம்ம பணம்!’ - பிரசாந்த் நடிக்கும் 'ஜானி' படத்தின் டிரெய்லர்

வெற்றிச்செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வெளிவர இருக்கும் இந்தி ரீமேக் திரைப்படம், 'ஜானி'. 2007-ம் ஆண்டு, இந்தியில் 'ஜானி கடார்' திரைப்படம் நீல் நிதின் முகேஷ் நடித்து வெளியானது. இக்கதையை 'ஜானி' என்கிற பெயரில் தமிழில் படமாக எடுத்திருக்கின்றனர். இதன் ட்ரெயிலர் யூ-டியூபில் நடிகர் பிரசாந்த் வெளியிட்டிருக்கிறார். இதில் பிரஷாந்த், பிரபு, சஞ்சிதா ஷெட்டி, ஆனந்தராஜ், சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர். ஜெய் கணேஷ் என்பவர் இதற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர் வெற்றிச்செல்வன் ஜீவா ஷங்கரிடம் உதவியாளராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் சென்னை மலையாளி க்ளப்பில் நடைபெற்றது. தியாகராஜன் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.