பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

முன்னாள் மத்திய அமைச்சரான சசி தரூருக்கு மனைவி சுனந்தா புஷ்கர் இறப்பு வழக்கில் ஏற்கெனவே இமேஜ் டேமேஜ் ஆகிக் கிடக்கிறது. தற்போது  பாலிவுட் இயக்குநர் ஓம்பிரகாஷ் ஜா, சுனந்தா மரணத்தை மையமாக வைத்து த்ரில்லர் சினிமா ஒன்றை எடுத்துவருகிறாராம். காங்கிரஸில் இப்போதே படத்துக்கு எதிராக சர்ச்சைகள் கிளம்ப, பா.ஜ.க தரப்பில் சசி தரூரை வில்லனாக்கிப் படமெடுக்க இயக்குநர் தரப்புக்கு ஐடியா கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. படம் வந்தால்தான் தெரியும். பாவம்யா அந்த மனுஷன்!

இன்பாக்ஸ்

யிரோடு இருப்பவர்களை மையமாக வைத்தே ‘சஞ்சு’ ஸ்டைலில் பயோபிக் எடுப்பதில் பாலிவுட் உலகம் இப்போது பிஸி. அடுத்தது யாருடைய கதைகளை எடுக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டது ஓர் இணையதளம். வாசகர்களின் தேர்வில், ஃபைனல் லிஸ்டை டிக் அடித்தார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. டாப் லிஸ்டில் இருப்பவர்கள், அமிதாப், கபில் தேவ், வித்யா பாலன், மாதுரி தீட்சித், ஏ.ஆர்.ரஹ்மான். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கெனவே பலமுறை இதற்காகத் தன்னை அணுகியவர்களுக்கு நோ சொல்லிவிட்டதால், அமிதாப் வாழ்க்கை படமாக்கப்படலாம் என்ற பேச்சு உலவிக் கொண்டிருக்கிறது. BIGPIC!

று வருடங்களுக்கு முன் எழுத்தாளர் அவதாரம் எடுத்தார் நடிகை கேமரூன் டயஸ்.  இளம்பெண்களுக்கான டயட், ஸ்லிம் ரகசியங்களைப் புத்தகமாக்கினார். அது வெற்றிபெற, அடுத்து The Body Book, The Longevity Book என்று எழுதிய நூல்களும் ஹிட் அடிக்க, நடிப்புக்கு மொத்தமாக முழுக்கு போட்டார். இப்போது தன் சுயசரிதையை எழுதுவது என்று முடிவெடுத்திருக்கிறார். சிறுவயதில் நிகழ்ந்த பாலியல் ரீதியான தாக்குதல்களைப் பற்றி அதில் எழுதவிருப்பதாகச் சொல்லிப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.  பயோபிக் ரெடி!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

தெலுங்கில் ‘யூ-டர்ன்’, தமிழில் `சீமைராஜா’, `சூப்பர் டீலக்ஸ்’ எனப் படங்கள் லைனில் இருக்க, இவற்றையெல்லாம் முடித்துக்கொடுத்துவிட்டுத் திரையுலகிற்கு டாட்டா காட்டப்போகிறார் சமந்தா என்றொரு செய்தி தெலுங்குதேசத்தில் பரபரப்பாக ஓடுகிறது. சமந்தா ரசிகர்கள், இந்தச் செய்தியால் வருத்தத்தில் இருக்க, அந்தச் செய்தியை மறுத்திருக்கிறது சமந்தா தரப்பு. நாக சைதன்யாவுடன் ஒரு படம், அர்ஜுன் ரெட்டியின் உதவி இயக்குநர் இயக்கும் படம் என்று இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேடம் பிஸி என்கிறார்கள்! போகாதே போகாதே 

டத்தல் கும்பலிடமிருந்து 26 சிறுமிகளைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது . ஒரு ட்வீட். உத்தரப்பிரதேசம் கோரக்பூர் அருகே ஆவத் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்5 கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்தார் ஆதர்ஷ் ஸ்ரீவத்சவா என்ற இளைஞர். `என் கோச்சில் சந்தேகத்துக்கிடமான ஒரு கும்பல் 26 சிறுமிகளைத் துன்புறுத்தி அழைத்துச்செல்கிறது. ரயில் ஹரிநகரிலிருந்து பாகாவுக்குப் போய்க்கொண்டி ருக்கிறது. விரைந்து வந்தால் காப்பாற்றலாம்’ என டைப் செய்து பியூஷ் கோயல், ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளம், பிரதமர் முதலானவர்களை டேக் செய்து ட்வீட்டாகப் போட்டிருந்தார் ஆதர்ஷ். உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தலைமையில் மாநில போலீஸும் இணைந்து ஆக்‌ஷனில் இறங்க, 26 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒரே ட்வீட்டில் ஹீரோவாகி யிருக்கிறார் ஆதர்ஷ். வாழ்த்துகள் ப்ரோ!

இன்பாக்ஸ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய, தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருக் கிறார்கள். படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்க, ‘மாநாடு’ எனப் படத்திற்குப் பெயர் வைக்க இருக்கிறார்களாம்.  எ வெங்கட்பிரபு ஈவன்ட்!

இன்பாக்ஸ்

கேரளத்தின் முதல் ஆதிவாசி இயக்குநர் லீலா இயக்கத்தில் ‘கரிந்தண்டன்’ என்ற படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. போஸ்டரே மிரட்டு கிறது.  பிரிட்டீஷ் ஆட்சியில் ஆரம்ப காலத்தில் வயநாட்டு மலைக்காட்டில் வாழ்ந்தவர் கரிந்தண்டன். ஆங்கிலேயர்கள் கேரள நிலத்தில் சாலைகள் அமைக்க உதவியவர், பின் அதே ஆங்கிலேயர்களால் பலி கொடுக்கப்பட்டவர். மலை கிராமத்து மக்கள் இன்றும் வழிபடும் கரிந்தண்டனைத் தான் காவியமாக்கி யிருக்கிறார் லீலா. கரிந்தண்டனாக நடித்திருக்கிறார் ‘கம்மட்டிப்பாடம்’ விநாயகன். கறுப்புச் சரித்திரம்.

பிரபலங்கள் ட்விட்டரில் பண்ணுகிற அலப்பறைக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் கிரிக்கெட் வீரர்கள் அலும்பு தாங்கலை! ஹர்பஜனின் தமிழ் ட்வீட்டுகள் அகில உலக பிரசித்தம். சென்றவாரம் ஹர்பஜனுக்கு டெண்டுல்கர் தமிழில் வாழ்த்து சொல்லி ட்வீட் போட, ஷேரிங் அள்ளியது. தல தோனி பிறந்தநாளான ஜூலை 7-ம் தேதி வீரேந்தர் சேவாக் போட்ட குறும்பு வாழ்த்து லைக்ஸ் அள்ளியது. ரன் அவுட் ஆகாமல் இருப்பதற்காகக் காலை அகட்டி கிரீஸுக்குள் தோனி வைத்திருக்கும் ஒரு போட்டோவைப்போட்டு,  `உங்கள் வாழ்க்கை இந்த அளவுக்கு நீண்டதாய் இருக்கட்டும். உங்கள் ஸ்டம்பிங்கைவிட வேகமாக உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கட்டும்!’ என்று வாழ்த்தியிருந்தார் சேவாக். குறும்பு டீம் ஃபார்ம் பண்ணுங்க பாய்ஸ்!