பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

MR. சந்திரமௌலி - சினிமா விமர்சனம்

MR. சந்திரமௌலி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
MR. சந்திரமௌலி - சினிமா விமர்சனம்

MR. சந்திரமௌலி - சினிமா விமர்சனம்

MR. சந்திரமௌலி - சினிமா விமர்சனம்

தொழிற்போட்டியில் மோதிக்கோள்ளும் இரண்டு கால் டாக்ஸி நிறுவனங்கள், இடையில் சிக்கிச் சின்னா பின்னமாகும் ஓர் அப்பாவி அப்பாவும் பாக்ஸர் மகனும்தான் `மிஸ்டர்.சந்திரமௌலி.’

அப்பா, மகனாக கார்த்திக்கும் கௌதம் கார்த்திக்கும்.

MR. சந்திரமௌலி - சினிமா விமர்சனம்கார்த்திக் தூக்கலாக நடித்துக் கண்கலங்கவைக்கிறார் என்றால், கௌதம் கார்த்திக் கொஞ்சமாகக்கூட நடிக்காமல், கதிகலங்கவைக்கிறார்.  கார்த்திக் `மௌனராகம்’ மனோகரை மீண்டும் திரையில் கொண்டு வர முயற்சி செய்து, தன்னைத்தானே இமிடேட் செய்வது அயர்ச்சிக்கெல்லாம் அயர்ச்சி.

`மிஸ்டர் சந்திரமௌலி’க்கு ரெஜினா கஸான்ட்ராவின் பங்களிப்பு மிகப்பெரியது. `ஏதேதோ ஆனேனே’ பாடலால் மிஸ்டர்.சந்திரமௌலி அடிக்கடி நினைவுகூரப்படுவார்.

சதீஷ் தான் இருக்கும்  ஃப்ரேம்களில் எல்லாம் கவுன்டர்களை வீசிக் கொண்டேயிருக்கிறார். `நண்டு’ ஜெகன் ஒரேயொரு காட்சியில் வந்து காமெடி பண்ணுகிறார், சிரிப்பு வருகிறது. மகேந்திரன், சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, வரலெட்சுமி, அகத்தியன் என எல்லோருமே தனக்குக் கொடுத்த கதாபாத்திரத்தில் குறைவின்றி நடித்திருக்கிறார்கள்.

MR. சந்திரமௌலி - சினிமா விமர்சனம்

படம் முழுக்க, வீடியோ கேமில் வருவதுபோல, நினைத்தவர்களை எல்லாம் பொட்டுப் பொட்டெனப் போட்டுத்தள்ளுகிறார்கள் வில்லன் குழுவினர். ஆனால், அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கதாநாயகனை மட்டும் ஒன்றும் செய்யாமலேயே இருக்கிறார்கள். ஒரு கேப் நிறுவனத்தின் முதலாளி சம்பந்தப்பட்டுள்ள குற்றத்தை, ஏதோ முதல்வர், ஆளுநரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிற விஷயம் போல `பெரிய ஆளுங்க எல்லாம் சம்பந்தப்பட்ருக்காங்க’ என ஒட்டுமொத்தக் காவல்துறையுமே பம்முவதெல்லாம் என்னப்பே?

ஐந்து நிமிடத்தில் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை எல்லாம் வாய் வலிக்க அரைமணி நேரம் உட்கார்ந்து பேசுகிறார்கள். நீளமான, கதைக்குத் தேவையில்லாத வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். திரைக்கதையும் அடுத்தடுத்த காட்சிகளைக் கணிக்கக்கூடிய அளவில்தான் இருக்கிறது.
சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசையும் படத்திற்குக் கைகொடுக்கவில்லை. ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளைத் தவிர மற்ற காட்சிகளில் பெரிதாய் ஆச்சர்யப்படுத்தவில்லை. டி.எஸ்.சுரேஷின் படத்தொகுப்பு ஓகே.

நீங்க கொஞ்சம் இயல்பாகவும் இருந்திருக்கலாம் மிஸ்டர். சந்திரமௌலி!

- விகடன் விமர்சனக் குழு