Published:Updated:

விஜய் தேவரகொண்டாவுக்கு இன்னுமொரு காரமான தெலுங்கு என்டெர்டெய்னரா இந்த #Taxiwala

டாக்ஸியில் ஒன்றை கூடவே கூட்டிச் செல்கிறார் விஜய் தேவரகொண்டா. அது நன்மையா இல்லை தீமையா என்பது தான் இந்த டாக்ஸிவாலா.

விஜய் தேவரகொண்டாவுக்கு இன்னுமொரு காரமான தெலுங்கு என்டெர்டெய்னரா இந்த #Taxiwala
விஜய் தேவரகொண்டாவுக்கு இன்னுமொரு காரமான தெலுங்கு என்டெர்டெய்னரா இந்த #Taxiwala

வேலை தேடி புது இடத்துக்கு வரும் சிவாவுக்கு (விஜய் தேவரகொண்டா) எந்த வேலையும் செட்டாகவில்லை. குறைவான விலைக்கு ஒரு காரை வாங்கி, டாக்ஸிவாலா ஆகிறார். காதலி முதல் வில்லன் வரை எல்லாம் காரின் மூலமாகவே வந்து சேர்கிறது. எல்லாவற்றையும் எப்படி இறுதியில் சமாளித்து தப்பிக்கிறார் என்பதே டாக்ஸிவாலா படத்தின் கதை. Taxiwala

விஜய் தேவரகொண்டாவுக்கு இன்னுமொரு காரமான தெலுங்கு என்டெர்டெய்னரா இந்த #Taxiwala
வசூல்ராஜா கமலுக்கு முதல் பேஷன்ட் பேதி பேபி என்பது போல், சிவாவுக்கு முதல் கஸ்டமரே பப்பில் இருந்து வரும் போதை பேபி அனு (பிரியங்கா ஜவல்கர் ) . அழுக்கு ஜெர்கினை துவைத்தே இருவருக்கும் காதல் வந்துவிடுகிறது. ஹாரர் காமெடி பழிவாங்கல் கதை என்பதால் காதலுக்கெல்லாம் லாரென்ஸ் பட பேய்க்கதைகளைப் போல் கொஞ்ச நேரம் மட்டும் தான் இடம் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.


விஜய் தேவரகொண்டா படு ஸ்டைலாக இருக்கிறார். 'அஞ்சான்' ஸ்டைலில் வாயில் குச்சி, ஜெர்கின், கூலர்ஸ் என 'நீங்க நெசமாலுமே கார் டிரைவரா ' டோனில் இருக்கிறார். அவருக்கு ஈடு இணையாக ரிச் லுக்கில் இருக்கிறது அந்த கறுப்பு நிற கான்டெஸ்ஸா கார். விஜய் தேவரகொண்டா தங்கியிருக்கும் கேரேஜின் ஓனரான சித்தப்ஸும் ( மது நந்தன் ), அங்கு வேலை செய்யும் நபரான 'ஹாலிவுட்டும்' (விஷ்ணு ) காமெடியில் கதகளி ஆடியிருக்கிறார்கள். ஒரு காட்சியில், “அப்போ இது நல்ல பேய்” என விஜய் தேவரகொண்டா சொல்ல, “ஹோலி கோஸ்ட்” என டைமிங்கில் கவுன்டர் தரும் ஹாலிவுட்டின் வசனங்களுக்கு பயங்கர க்ளாப்ஸ். Night Of The Hunter, ரேடியம் பவுடர், மார்ச்சுவரி என 'ஹாலிவுட்' வரும் ஒவ்வொரு காட்சியுமே அமர்க்களம். விஜய் தேவரகொண்டாவின் அண்ணனாக வரும் ரவி பிரகாஷுக்கும், அண்ணி காவேரிக்கும் பெரிய வேலையில்லை. ஆனால், படத்தின் முதல் காட்சியும் இறுதி காட்சியும் இவர்களை வைத்துத்தான். (ஸ்பாய்லர் தான் யூகிக்க முடிந்தால் செய்து கொள்ளவும் ) . படத்தின் இன்னுமொரு சர்ப்ரைஸ் பேக்கேஜ் 'குக்கூ' பட புகழ் மாளவிகா . 

விஜய் தேவரகொண்டாவுக்கு இன்னுமொரு காரமான தெலுங்கு என்டெர்டெய்னரா இந்த #Taxiwalaநோட்டாவில் விட்ட வாக்குகளையும் சேர்த்து, இதில் விஜய் தேவரகொண்டா எடுக்க நினைத்துவிட்டாரோ என்னவோ, படத்தில் எல்லாமே இருக்கிறது. அம்மா - மகள் சென்டிமென்ட், ஹாரர், காமெடி, த்ரில்லர், சயின்ஸ் பிக்ஸன் , அம்மா - குழந்தை சென்டிமென்ட் என 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்' பாடல் போல் எல்லா ஜானரையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். அது ஓரளவுக்கு க்ளிக்கும் ஆகியிருக்கிறது. படத்தில் வரும் ஹாரரும், காமெடியும் லாஜிக் அத்துமீறல்களைத் தாண்டி ரசிக்க வைக்கிறது. சிச்சுவேஷனுக்கு ஏற்ற பாடல்களில் ரசிக்க வைத்த ஜேம்ஸ் பிஜாய் ஏனோ பின்னணி இசையில் மட்டும் ஏற்கெனவே கேட்ட 'பீதி அலறல்கள்'. தெலுங்கு சினிமாவில் வரும் வழக்கமான குத்துப்பாடல், ஸ்லோ மோஷன் அடிதடி காட்சிகள் இல்லாததற்கு இயக்குநர் ராகுல் சங்கிர்த்யனுக்கு பாராட்டுக்கள். சென்டிமென்ட் காட்சிகளில், நீளமான வசனங்களைத் தவிர்த்து படத்தின் நீளத்தை குறைத்தது, திரைக்கதைக்கு ப்ளஸ். துருவங்கள் பதினாறு படப்புகழ் சகோதர ஜோடி தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு (சுஜித் சாரங்) எடிட்டிங் ( ஸ்ரீஜித் சாரங் ). ஹாரர் காட்சிகளில் ஒளிப்பதிவும், எடிட்டுங்கும் பக்கா.சித் ஸ்ரீராமின் குரலில் மாடே வினதுகா பாடல் இன்ஸ்டன்ட் ஹிட் மெலடி.

பழிவாங்கும் பேய் என்ற கான்செப்ட் எடுத்ததும், மர்டர் இல்லாமல் எப்படி என்பதற்காகவே நடக்கும் கொலைகள், ஃப்ளாஷ்பேக் கதைகள் என வழக்கமான திசையில் சென்றாலும், குறிப்பிட்ட சில திகில் காட்சிகள் கொண்டு சூப்பரான ரைடாக மாற்றியுள்ளது இந்த டாக்ஸிவாலா. ஹாரரை சயின்ஸ் பிக்ஷன் நோக்கி நகர்த்தியிருப்பது , 'அட போங்கடா டேய்' ரீதியில் படத்தின் வேகத்தைக் குறைத்துவிடுகிறது. அதிலும் நல்ல பேய் என அதோட ஃபிரெண்டாவது எல்லாம் 'முனி' லெவல். 

விஜய் தேவரகொண்டாவுக்கு இன்னுமொரு காரமான தெலுங்கு என்டெர்டெய்னரா இந்த #Taxiwalaமொத்தத்தில், இந்த வார இறுதிக்கு காமெடி சயின்ஸ் பிக்சன் ஹாரர் கதை விரும்பிகளுக்கு இந்த டாக்ஸிவாலாவில் ஜாலி ரைட் நிச்சயம்.