முதல் படத்துக்கும் (2012), இரண்டாம் படத்துக்கும் (2015) மூன்று ஆண்டுகள் இடைவெளி விட்டதைப்போல, இந்த முறையும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாதம் வெளியாகிறது ஹோட்டல் டிரான்ஸில்வேனியா 3.

காலம் காலமாகக் குழந்தைகளுக்குச் சாப்பாடு ஊட்ட, “மூணு கண்ணன் வாரான்; பேய் வந்துடும்’’ என மிரட்டித்தான் ஊட்டுவார்கள். அதன் உல்ட்டாதான் ஹோட்டல் டிரான்ஸில்வேனியாவின் கதை.

மனிதர்களுக்கு பயந்து பயந்து வாழ்கின்றன பூதங்கள். கௌன்ட் டிராகுலாவின் மனைவி மார்த்தாவை மனிதர்கள் கொலை செய்துவிட, மனிதர்களை வெறுக்கிறார் கௌன்ட் டிராகுலா. டிராகுலாக்கள் நிம்மதியாக இருக்கவே ஹோட்டல் ஒன்றை நடத்துகிறார் கௌன்ட். டிராகுலாக்களும் பூதங்களும் அங்கு வந்து ஜாலியாக டைம்பாஸ் செய்கிறார்கள். டிராகுலாவின் மகள் மேவிஸுக்கு 118 வது (ஆம் 118) பிறந்தநாள். அதை விமர்சையாகக் கொண்டாட நினைக்கிறார் டிராகுலா. மகளுக்கோ ஹோட்டலைவிட்டு வெளியே சென்று, மனிதர்களை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என்று ஆசை. மகள் முன் பூதங்களையே மனிதர்களாகச் சித்தரித்து ஏமாற்றிவிடுகிறார் டிராகுலா.

அப்படியும் ஒரு மனிதர் (ஜானி) ஹோட்டலுக்குள் வந்துவிடுகிறார். ஜானியை முதலில் பூதம் எனச் சொல்லி டிராகுலா சமாளித்தாலும், இறுதியில் அனைவருக்கும் உண்மை தெரிந்து, ஜானியும் மேவிஸும் மணந்து கொள்கிறார்கள். இது தான் முதல் பாகம்.

இருவருக்கும் டென்னிஸ் என்ற மகன் பிறக்கிறான். ஜானி ஊரான கலிஃபோர்னியாவில் டென்னிஸை வளர்ப்பதா, இல்லை மேவிஸின் இடமான டிரான்ஸில்வேனியாவில் அவனை வளர்ப்பதா என விரிகிறது இரண்டாம் பாகம்.

இந்த மாதம் வெளியாகவிருக்கும் மூன்றாம் பாகம், இன்னும் ஜாலியாகவும் காமெடியாகவும் இருக்கிறது. இந்த பாகம் முழுக்க கப்பலில் நடக்கிறது. முழுக் குடும்பமும் சுற்றுலா செல்கிறது. அங்கு டிராகுலாவுக்கு எரிக்கா என்கிற பெண் மீது ஈர்ப்பு வருகிறது. ஆனால், டிராகுலாவுக்கு, எரிகாவின் குடும்பத்துக்கும் முன் பகை இருக்க, டிராகுலா இறுதியில் எரிகாவைக் கரம் பிடித்ததா என்பதே கதை. ஹோட்டல் டிரான்ஸில்வேனியா படங்களின் சுவாரஸ்யமே அதன் வசனங்களும் கதாப்பாத்திரங்களின் தோற்றங்களும்தான். மறையும் பூதங்கள், பெரிய சைஸ் பூதங்கள், அவை பேசும் காமெடி வசனங்கள், முகபாவனைகள் எனச் சில நிமிடங்கள் பார்த்தாலே, சிரித்துவிடுவோம்.

இந்தப் பாகத்தில் ஹோட்டலுக்குப் பதிலாகக் கப்பல் என்பதால், புது இடம், புது மனிதர்கள் என இன்னும் நகைச்சுவையாக இருக்கிறது டிரான்ஸில்வேனியா. பேய்ப் படம் என்று பயப்படாமல், குடும்பத்துடன் பார்த்து 3D-யில் மகிழுங்கள் குட்டீஸ்...