Published:Updated:

``மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வருவாங்கனு நம்புறேன்!"- தேர்தலுக்கான தூதராக நடிகை அபிநயா

``மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வருவாங்கனு நம்புறேன்!"- தேர்தலுக்கான தூதராக நடிகை அபிநயா
``மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வருவாங்கனு நம்புறேன்!"- தேர்தலுக்கான தூதராக நடிகை அபிநயா

ட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, அம்மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. இதற்கான பிராண்ட் அம்பாசிட்டராக நியமிக்கப்பட்டிருக்கும் நடிகை அபிநயா, அப்பணிகள் குறித்து பகிர்ந்துகொண்டபோது.... 

``தங்கள் உடல்நலப் பாதிப்புகளால், மாற்றுத்திறனாளிகள் பலரும் தேர்தலில் பெரும்பாலும் வாக்களிக்க வரமாட்டார்கள். இந்தநிலையை மாற்ற, தெலங்கானா மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நிறைய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதற்காக, என்னை பிராண்ட் அம்பாசிட்டாகவும் நியமிச்சிருக்காங்க. மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்பு உணர்வு கொடுக்கிற விஷயங்களைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் எனக்குச் சொல்றாங்க. அதன்படி, பல பகுதிகளும் நேரடியாகச் சென்று, மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்கணும்; தங்கள் உரிமையைப் பயன்படுத்திக்கணும்னு வலியுறுத்துறேன். இதனால நிறைய மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிப்பாங்கனு நம்புறேன். தவிர, கல்வி மற்றும் மருத்துவத்துறையிலயும் இப்போ விழிப்பு உணர்வு கொடுக்கிறேன்" என்பவர் தன் பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

``நடிப்புதான், என்னோட பிரதான செயல்பாடு. சினிமாவில் நடிக்கிறதால ரொம்ப மகிழ்ச்சியடைகிறேன். ஷூட்டிங் இல்லாதபோது ஃபேமிலி நபர்களோடு நேரத்தைச் செலவிடுகிறேன். குதிரைப் பயிற்சிக்கும் போறேன். எனக்கிருக்கும் பேச்சுத்திறன் பிரச்னையால், ஆரம்பத்தில் டயலாக்கை உள்வாங்கி நடிக்க ரொம்ப சிரமப்படுவேன். நிறைய பயிற்சி எடுத்து, இப்போ சிரமமின்றி நடிக்கிறேன். என் டயலாக் ஸ்கிரிப்டை படிச்சும், டைரக்டர் நடிச்சுக்காட்டுறதைப் பார்த்தும் நடிச்சுடுறேன். சந்தோஷமா நடிக்கிறேன். இப்போ, தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் தலா ஒரு படம் நடிச்சு முடிச்சிருக்கேன். தமிழில் நடிக்கப் பேச்சுவார்த்தைப் போயிட்டிருக்கு" என்கிறார் அபிநயா.