Published:Updated:

கரீனாவை திருமணம் செய்தபோது மகளின் மனநிலை! - சயிஃப் அலிகான் ப்ளாஸ்பேக்

கரீனாவை திருமணம் செய்தபோது மகளின் மனநிலை! - சயிஃப் அலிகான் ப்ளாஸ்பேக்
கரீனாவை திருமணம் செய்தபோது மகளின் மனநிலை! - சயிஃப் அலிகான் ப்ளாஸ்பேக்

சயிஃப் அலிகான் - கரினா கபூர் திருமணத்தின்போது தன் தாய் அம்ரிதா தனக்கு உடை அணிவித்து அலங்காரம் செய்ததாக சயிஃப் மகள் சாரா தெரிவித்துள்ளார். 

PhotoCredits : Twitter/‏@PatahapaKE

1980- களில் இந்தியில் பிரபல நடிகையாக இருந்த அம்ரிதா சிங் என்பவர் நடிகர் சயிஃப் அலிகானை 1991-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாரா அலிகான் மற்றும் இப்ராஹிம் அலிகான் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். பின்னர் இருவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு விவாகரத்தானது. இதையடுத்து பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூரை காதலித்து 2012-ல் திருமணம் செய்துகொண்டார் சயிஃப். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. 

ஸ்டார் வோல்ட் சேனலில் இந்த வாரம் நடந்த காஃபி வித் கரண் -6 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சயிஃப் அலிகானும் அவரின் மகள் சாரா கானும் கலந்துகொண்டனர். இருவரும் அப்பா, மகள் இடையே இருக்கும் உறவு குறித்தும் கரீனா- சயிஃப் திருமணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூறினர். முதலில் பேசிய சயிஃப், ‘ நான் கரீனாவை திருமணம் செய்துகொள்ளும்போது சாரா மிகவும் உற்சாகமாக இருந்தார். அவர் திருமணத்துக்கு வரவும் விரும்பினார். என் திருமணத்துக்கு முன் அம்ரிதாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அது எப்போதும் மறக்கமுடியாது. நான் அம்ரிதாவுக்கு அனுப்பும் முன் அதை கரீனாவும் படித்தார். அவர் எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளார்” எனத் தெரிவித்தார். 

இதையடுத்து, தன் தாய் அம்ரிதாவை பற்றி நிறைய விஷயங்களைத் தெரிவித்தார் சாரா கான். அப்போது, `சயிஃப் அலிகான் - கரீனா கபூர் திருமணத்தின்போது தன் தாய் அம்ரிதாதான் தனக்கு உடை அலங்காரம் செய்து அனுப்பிவைத்தார்' எனக் கூறியுள்ளார்.