Published:Updated:

விஷால் நடிக்கும் `அயோக்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

உ. சுதர்சன் காந்தி.
விஷால் நடிக்கும் `அயோக்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
விஷால் நடிக்கும் `அயோக்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான 'இரும்புத்திரை' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் விஷால் நடித்து வரும் படம் `அயோக்யா'. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் - காஜல் அகர்வால் நடித்து வெளியான 'டெம்பர்' படத்தின் தமிழ் ரீமேக்தான் 'அயோக்யா'.

இதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த வெங்கட் மோகன் இயக்கி வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். தவிர, கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன்னி லியோன் ஒரு பாடலுக்கு மட்டும் தோன்ற இருக்கிறார். சாம் சி.எஸ் இசையில் உருவாகும் இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. `இரும்புத்திரை' படத்தில் ராணுவ வீரனாக நடித்த விஷால், இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஷால். இது தற்போது வைரலாகி வருகிறது.