Published:Updated:

`கஜா' புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவும் சினிமா பிரபலங்கள்!

`கஜா' புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவும் சினிமா பிரபலங்கள்!
`கஜா' புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவும் சினிமா பிரபலங்கள்!

`கஜா' புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவும் சினிமா பிரபலங்கள்!

'கஜா' புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, நெற்பயிர் என விவசாயப் பயிர்கள் புயலால் சாய்ந்துள்ளன. அதேபோல் ஆடு, மாடுகள் இறந்துள்ளன. மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, தமிழக அரசு ஒருபுறம் நிவாரணம் வழங்கிவந்தாலும், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகச் சென்று உதவிகள் வழங்கிவருகின்றனர்.

அந்த வகையில் திரைப் பிரபலங்களும் டெல்டா மாவட்ட மக்களுக்கு  நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து மொத்தம் 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர். நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் சென்னையிலிருந்து லாரிகளில் பல லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான உடனடி நிவாரணப் பொருள்கள் வழங்கியுள்ளார். புயலால் சேதமடைந்த மரங்கள் இருந்த இடத்தில் நட்டு வைக்க தென்னை, பலா போன்ற மரக்கன்றுகள் வழங்கப்படும் என்றும் அந்த களப்பணிகளை தன் ரசிகர்கள் ஈடுபடுவார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூபாய் பத்து லட்சமும் தனது ரசிகர் மன்றம் சார்பாக ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களும் வழங்கியுள்ளார். தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து திரைப் பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

அடுத்த கட்டுரைக்கு