சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

விக்ரம் அடுத்து `கருடா’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தை இயக்கவிருப்பது இயக்குநர் திரு. படத்தில் விக்ரமோடு் நடிக்கவிருப்பவர் காஜல் அகர்வால். ‘சாமி-2’ முடிந்ததும் இந்தப் படம் தொடங்கும் என்கிறார்கள். சிறப்பு சீயான்!

இன்பாக்ஸ்

ஸ்டீன் பீபருக்குக் கல்யாணம். சீக்கிரமே தன் காதலியும் பிரபல நடிகையுமான ஹெய்லி பால்ட்வினை மணக்கவிருக்கிறார். சரியாக ஏழாம் தேதி ஏழாம் மாதம் காத்திருந்து திருமண அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த நாளில் அறிவிக்கவேண்டும் என்பது ஜஸ்டின் அம்மாவின் ஆசையாம். அம்மா செல்லம்!

நா.முத்துக்குமார் கடைசியாகப் பாடல் எழுதிய படம்  `சர்வம் தாளமயம்’.  அவர் மருத்துவமனை செல்வதற்கு முதல்நாள் தான் இயக்குநர் ராஜீவ் மேனன் நா.முத்துக்குமாரைச் சந்தித்து ஒரே சிட்டிங்கில் பாடலை எழுதி வாங்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப்பாடல் படத்தின் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளதாம். ``அவரின் கைப்பட எழுதிய கடைசி வரிகளை வாங்கிய பெருமை கிடைத்தது.  வேதனையிலும் சிறு மகிழ்ச்சி. அந்த அற்புத வரிகளை  ரஹ்மானின் இசை வேறு தளத்துக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது!’’ என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜீவ் மேனன். பேரன்பின் ஆதி ஊற்றே!

னைவி துர்காவுடன் லண்டனுக்குச் சென்றிருக்கிறார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின். விம்பிள்டன் போட்டிகள் நடைபெறுவதால் பார்வை யாளராகக் கலந்துகொண்டார். சென்ற இடத்தில் முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜையும் சந்தித்துப் பேசினார். இதை ட்விட்டரில் ஆர்வத்தோடு பகிர்ந்துகொள்ள, ஸ்டாலினின் மஞ்சள் சட்டை, நெட்டிசன்களால் செமையாகக் கலாய்க்கப்பட்டது. மஞ்சள் மகிமை!

இன்பாக்ஸ்

வெள்ளப்பெருக்கினால் தாய்லாந்துக் குகையில் சிக்கிக்கொண்டு 18 நாள்கள் தவித்து மீட்கப்பட்ட கால்பந்தாட்டச் சிறுவர்களை வரலாறு மறக்கவே மறக்காது. இருள் நிறைந்த குகையில் 18 நாள்கள் நம்பிக்கையோடு போராடி மீட்கப்பட்ட பையன்களின் கதை சீக்கிரமே திரைப்படமாக இருக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் ஹாலிவுட்டில் தொடங்கிவிட்டன. கூடவே இந்தக் குகையை மியூசியமாக மாற்றவும் முடிவெடுத்திருக்கிறது தாய்லாந்து அரசு. இந்த மீட்புப் போராட்டத்தில் எண்ணற்ற வீரர்கள் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து ஈடுபட்டனர். இவர்களில் மரணம் அடைந்தவர் சமன் குணன். அவருக்கு உலகெங்கும் இருந்து அஞ்சலிகள் குவிந்துகொண்டிருக்கின்றன. சலாம் சமன்!

இன்பாக்ஸ்

மிழ்நாட்டு அம்மா மெஸ் பாணியில் ஆந்திராவிலும் அண்ணா மெஸ் தொடங்கியிருக்கிறார்கள். இங்கே மூன்றுவேளையும் உணவு ஐந்து ரூபாய்க்கு வழங்கப்படவுள்ளது. ஆந்திராவாடுகள் மொத்தமாகக் கடைகளில் குவிந்து ஆதரவு தர, மேலும் கடைகளைத் திறக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் சந்திரபாபு நாயுடு. அம்மா மெஸ் மாதிரி கைவிட்ராதீங்க!

இன்பாக்ஸ்

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர், சச்சினுடன் ட்விட்டரில் செய்த சாட்டிங் இந்த வார வைரல் ஹிட். சிறிய ஓய்வுக்குப் பிறகு விம்பிள்டனில் ஃபெடரர் கம்பேக் கொடுக்க, ‘விம்பிள்டன் முடிந்ததும் இருவரும் டென்னிஸ் - கிரிக்கெட் பற்றிய குறிப்புகளைப் பரிமாறிக்கொள்வோம்’ என்று லிட்டில் மாஸ்டர் ட்விட்டரில் எழுதினார். ‘எதுக்கு வெயிட் பண்ணணும்? இப்பவே ஸ்டார்ட் பண்ணுவோம்’ என்று ஜாலியாக ரிப்ளை செய்தார் ஃபெடரர்.  அவரின் தீவிர ரசிகரான சச்சின், ஒவ்வொரு வருடமும் விம்பிள்டன் போட்டிகளைத் தவறாமல் நேரில் பார்த்துவிடுவார். இந்த ஆண்டு நேரில் செல்ல முடியாததற்கு வருத்தமும் தெரிவித்துள்ளார்.  சாட்டிங் ஜாம்பவான்கள்!

‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ சிவா, அடுத்து இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். ரகளையான காமெடி த்ரில்லர் ஜானர் படமாம். படத்தில் அவர் மிர்ச்சி சிவாவாகவே வருகிறார். நான் யாருமில்ல...

இன்பாக்ஸ்

`ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ படத்துக்குப் பிறகு பாலிவுட் பக்கம் ஒதுங்காமல் இருந்த தனுஷ், தற்போது ‘ராஞ்சனா’ இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் புதுப்படமொன்றில் கமிட் ஆகியிருக்கிறார். `ராஞ்சனா’ படத்தின் பார்ட்-2 தான் இது என்கிறார்கள். முதல் பாகத்தில் ‘உயிர்த்தெழுவேன்’ எனச் சொல்லி மரித்துப்போகும் குந்தன் குமார் பாத்திரம் இரண்டாம் பாகத்தில் உயிர்த்தெழுவது போலவும், காசி நகரில் அரசியல்வாதியாக உருவாவது போலவும் கதை பின்னப்பட்டி ருக்கிறதாம். கூடவே தனுஷ் இரண்டாவது முறையாக இயக்குநர் ஆகும் படத்தின் சூட்டிங்கும் சத்தமில்லாமல் சென்னையில் தொடங்கிவிட்டதாம். பிஸி ஸ்டார்!