சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க!”

“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க!”

அய்யனார் ராஜன்

கோத்தகிரியில் பிறந்த டட்லியை பாலிவுட் நன்கு அறியும். ஷாருக்கான், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், சஞ்சய் தத் என மும்பை ஸ்டார்கள் அத்தனை பேருடனும் பணிபுரிந்துவிட்டவர். ‘தில்வாலே’ ‘கோல்மால்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ என நீள்கிறது டட்லியின் ஹிட் படப் பட்டியல். ‘ஜுங்கா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க!”

“கோடம்பாக்கம் வர ஏன் இவ்வளவு தாமதம்?”

‘`கோத்தகிரி மலையில் இருக்கிற ஜக்கநாரை நான் பிறந்த கிராமம். என் அண்ணன் போஜன் சென்னையில ஃபிலிம் இன்ஸ்ட்யூட் பக்கத்துல தங்கியிருந்தார். சில இன்ஸ்ட்யூட் மாணவர்கள் அங்க அவருக்கு அறைத் தோழர்களா இருந்தாங்க. அவங்க கூடப் பழகினதுல, என்னை சினிமாப்பக்கம் அனுப்பணும்ங்கிற ஆசை அவருக்கு வந்திருக்கு. அப்படித்தான் ஃபிலிம் இன்ஸ்ட்யூட் வந்தேன். இன்ஸ்ட்யூட்ல என் நண்பர்களா இருந்த திருச்செல்வம், விக்ரமாதித்யன்லாம் இன்னைக்கு மெகா சீரியல்கள்ல பிசியா இருக்காங்க.

நான் படிப்பு முடிஞ்சதும் கொஞ்ச நாள் ரவி யாதவ் சார்கிட்ட அசிஸ்டென்டா இருந்துட்டு, பிறகு டெல்லி போனேன். அங்க நட்டி அறிமுகம் கிடைச்சது. அவர்தான் தனக்கு பாலிவுட்ல சான்ஸ் வந்ததும், என்னையும் அங்க கூட்டிட்டுப் போனார்.

அனுராக் காஷ்யப்பின் முதல் படமான ‘பாஞ்ச்’ங்கிற அந்தப் படமே நான் முதன் முதலா ஒர்க் பண்ணின படம். பிறகு ரோஹித் ஷெட்டி அறிமுகம் கிடைக்க அப்ப இருந்து அவரோட படங்கள்ல தொடர்ந்து ஒர்க் பண்ணிட்டு வந்தேன். இடையில ஒரு முறை பிரபுதேவாவை மீட் பண்ண, ‘சிங் இஸ் ப்ளிங்’ சான்ஸ் வந்தது. அந்தச் சமயத்துலதான் கோகுல் (ஜுங்கா இயக்குநர்) ஃப்ரெண்ட்ஷிப் கிடைச்சது. அந்த நட்பு இப்ப என்னைத் தமிழ் சினிமாவுக்குக் கூட்டி வந்திருக்கு. தமிழ்ல முன்னாடி கிடைச்ச வாய்ப்புகள் பல காரணங்களால கைநழுவிப்போச்சு. இந்த முறை அப்படி எதுவும் நடக்காம வந்துட்டேன். ‘ஜுங்கா’ விஜய் சேதுபதி இதுவரை பண்ணிய படங்கள்லயே வித்தியாசமானதா இருக்கும்னு எனக்குத் தோணுது.’’

“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க!”

‘பாலிவுட் டு கோலிவுட்’ பயணத்தை விவரித்தவர் ‘ஜுங்கா’ அனுபவங்களையும் பேசினார்.

‘`ஐம்பது சதவிகிதத்துக்கு மேல பாரிஸ்ல ஷூட்டிங். மழையும் குளிரும் எல்லோராலயுமே தாங்க முடியலை. ஹீரோயின் சாயிஷா மைனஸ் 5 டிகிரி குளிர்ல ஸ்வெட்டர் இல்லாம சிம்பிள் காஸ்ட்யூம்ல க்ளைமேக்ஸ்ல நடிச்சிட்டிருந்தப்ப மயங்கிட்டாங்க. வேற ஒருத்தரா இருந்தா அந்த நேரம் ஷூட்டிங் கேன்சலாகியிருக்கும். ஆனா அவங்க சின்ன பிரேக் எடுத்துட்டு நடிச்சுக் கொடுத்தாங்க. ‘நம்மூர்தான் நமக்கு லாயக்கு; இனிமேலெல்லாம் நம்மூரைத் தாண்டிக் கிளம்பக் கூடாது போல’ன்னார் விஜய் சேதுபதி.

அவரைப் பத்திச் சொல்லணும்னா, என்னோட இந்தி சினிமா அனுபவத்துல சொல்றேன், பாலிவுட் பக்கம் மட்டும் வந்தா இவரை வேற லெவல்ல வெச்சுக் கொண்டாடுவாங்க. பாலிவுட் ரசிகர்கள் மிகவும் விரும்புகிற முகமா இவர் முகம் இருக்கு.’’

“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க!”

“இந்தி சினிமாவுக்கும் தமிழ் சினிமாவுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்ந்தீர்கள்?”

``தமிழ் சினிமா புரொஃபஷனலா இருக்கு. மும்பையில அது கொஞ்சம் கம்மி. ஆனா படப்பிடிப்புக்கான வசதிகள் சென்னையைவிட மும்பையில தாராளம்.’’

“ரஜினி கமலின் அரசியல் என்ட்ரியை இந்தி சினிமா எப்படிப் பார்க்கிறது?”

‘`தென்னிந்தியாவுல அதுவும் குறிப்பா தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில சின்ன மூவ் நடந்தாலும் உடனே அது குறித்து அங்கே பேச ஆரம்பிச்சிடுவாங்க. சென்னையில ஒரு படத்துக்குப் பூஜை போட்டாலே, உடனே அந்தப் படத்துக்கான டப்பிங் ரைட்ஸ் பத்தின பேச்சு அங்க கிளம்பிடும். சினிமாவையே இப்படிக் கவனிச்சிட்டிருக்கிறவங்க அங்க இருந்து அரசியல் மூவ்னா, அதுவும் ரெண்டு துருவங்களே மூவ் ஆகிறதை கவனிக்காமலா இருப்பாங்க? ரெண்டு பேர் அரசியலையுமே ரொம்பவே எதிர்பார்க்குது பாலிவுட்.’’