சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
கடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்

விவசாயத்தின் அவசியத்தையும் ஆணவக்கொலை எதிர்ப்பையும் குடும்ப உறவுகளின் மகத்துவத்தையும் பேசுகிறான் ‘கடைக்குட்டி சிங்கம்’.

கடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்

`பெரிய்ய்ய்ய்ய’ குடும்பத்தின் கடைக்குட்டி கார்த்தி. விவசாயம் செய்து வயலும் வாழ்வுமாக இருக்கிறார். அந்தப் பயணத்தில் ஒரு காதலும் சாதிவெறிக் கும்பலும் குறுக்கிடுகிறது. தொடர்ந்து வரும் அடுத்தடுத்த பிரச்னைகளிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

கிராமத்து ‘விவசாயி’ குணசிங்கமாக பக்காவான வில்லேஜ் ரோலில் கார்த்தி.  நடிப்பில் இறங்கி அடித்திருக்கிறார். அதுவும், க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் வரும் கோயில் சீன். கலங்க வெச்சிட்டீங்க கார்த்தி! ஹீரோயின்களில் சாயிஷா பளிச். ஆனால் கிராமத்து பாந்தத்திலும் எளிமையிலும் அவரைவிட  பிரியா பவானிசங்கரும், அர்த்தனா பினுவும்தான் மனதை அள்ளுகிறார்கள். மெளனிகா, யுவராணி, தீபா, இந்துமதி, ஜீவிதா, சரவணன், மாரிமுத்து, இளவரசு, ஸ்ரீமன் என அக்காக்களும் மாமன்களும் அந்த கேரக்டர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.  படத்தின் கதையோட்டத்துக்கு முக்கியமான  சத்யராஜின் கேரக்டரை அதிகம் பயன்படுத்தாமல் வீணடித்திருக்கிறார்கள். சூரியின் நகைச்சுவை சிரிக்கவைக்கிறது.

கடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்

இசை... அதே வழக்கமான இமான். சோழ மண்டலத்தின் வனப்பைப் போட்டிபோட்டு திரையில் கொண்டு வந்திருக்கிறது வேல்ராஜின் கேமராவும் ரூபனின் எடிட்டிங்கும்.

கடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்விவசாயத்தின் மகத்துவத்தை வசனங்களிலும் சாதிவெறிக் கொடூரத்தைக் காட்சிகளிலும் சித்திரித்த இயக்குநர் பாண்டிராஜுக்குப் பாராட்டுகள். ஆனால், ‘ஆம்பளையா இருந்தா வாடா’, ‘சண்டாளா’ போன்ற வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

க்ளைமாக்ஸ் காட்சியில் திடீர் திடீரென்று சொந்தங்கள் திருந்தும் காட்சியில் சீரியல் வாடை. ஆங்காங்கே கொஞ்சம் அலுக்க வைத்தாலும் கலகலப்பிலும் கருத்து சொன்ன வகையிலும் ஈர்க்கிறது இந்த சிங்கம்.

- விகடன் விமர்சனக் குழு