சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்!

‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்!

எம்.குணா

‘லிங்கா’ படத்துக்குப் பிறகு தன் வழக்க மான ஃபார்முலாவில் இருந்து விலகி வயதுக்கேற்ற கதாபாத்திரம், ஹீரோயின், வித்தியாசக் கதைகள் என தன் படங்களைப் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார் ரஜினி. ‘கபாலி’, ‘காலா’ படங்களைத் தொடர்ந்து `2.0’ படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்து கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரை படம் குறித்து எந்தத்தகவலும் வெளிவராத நிலையில்... ரஜினியின் புதியபடத்தில் என்ன ஸ்பெஷல் என அறியக்கிளம்பினோம். கிடைத்த தகவல்களின் எக்ஸ்க்ளூஸிவ் தொகுப்பு இது.

‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்!

* படத்தில் ரஜினிக்கு, கல்லூரி மாணவர்களை உத்வேகப்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்தும் கேரக்டர். அமைதி வாத்தியாராக மட்டும் அல்லாமல் ஆக்ரோஷமாகவும் சண்டை போடுகிற மாதிரி அவருடைய பாத்திரம் உருவாக்கப்பட்டிக்கிறது.

* கபாலிக்கும், காலாவுக்கும் திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் நற்பெயர் கிடைத்திருந்தாலும் ரஜினியின் ரசிகர்களுக்கு அது போதவில்லை. பழைய `மாஸ்’ ரஜினியைப் பார்க்கவே ஒவ்வொரு முறையும் காத்திருந்தார்கள். கார்த்திக் சுப்பராஜ் படம் அந்தக் குறையை போக்கும். இது ‘தளபதி’, பாட்ஷா’ ஆகிய படங்களின் க்ளாஸும் மாஸும் கலந்த கலவையாக இருக்குமாம்.

* படத்தில் ரஜினி கறுப்புத்தாடியும், கோட் சூட்டுமாக கம்பீரமாகத் தோன்றவிருக்கிறார்.

* பகலில் ரேஞ்சர் கல்லூரியின் ஹாஸ்டல் வார்டனாகவும், இரவில் அதிரடி சரவெடி டானாகவும் நடிப்பதாகத் தகவல் உலவுகிறது. கல்லூரிக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகளுடன் ரஜினி பயங்கரமாக மோதும் மூன்று சண்டைக்காட்சிகளை கம்போஸ் செய்திருக்கிறார் சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின். 

* ஜூன் மாதம் டார்ஜிலிங் புறப்பட்ட படக்குழு அங்கே காட்டுப் பகுதியிலுள்ள ரேஞ்சர் கல்லூரியில் படப்பிடிப்பை நடத்தியது. இதற்காக சென்னையில் இருந்து 400 பேர், மும்பையில் இருந்து 200 பேர் என 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் டார்ஜிலிங் அழைத்துச் செல்லப்பட்டனர்.

* டார்ஜிலிங்கில் ரஜினி நடிக்கும் பாடல் காட்சி ஒன்றை, டான்ஸ் மாஸ்டர் ஷெரிஃப் வடிவமைத்து இருக்கிறார். அனேகமாக இது ஓப்பனிங் பாடலாக இருக்கலாம்.

* ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். இருவரும் நடிக்கும் காட்சிகளை டார்ஜிலிங்கில் படமாக்கி இருக்கின்றனர். படத்தில் ரஜினிக்கு சிம்ரன் மனைவி இல்லை. முன்னாள் காதலியாக நடிக்கிறார் என்கிறார்கள்.

* வில்லன் விஜய் சேதுபதி.  முதல் இரண்டு ஷெட்யூல்களிலும் அவர் இல்லை. லக்னோவில்தான் அவருடைய காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

* முக்கியமான கேரக்டரில் பாபி சிம்ஹா. அவரின் அப்பாவாக ‘ஆடுகளம்’ நரேன். ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் பாபிசிம்ஹாவுக்கு ஜோடி.

‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்!

* ரஜினி 65 நாட்களுக்குமேல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். பாபிசிம்ஹாவின் கால்ஷீட் படம்முழுக்க இருக்கிறது, விஜய்சேதுபதி 20 நாள்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

* டார்ஜிலிங் கல்லூரி தவிர வெளி இடத்தில் வீடு செட், டேராடூனில் ஒரு ரிசார்ட்டை சிம்ரன் வீட்டுக்கான செட்டாக மாற்றியது என வெரைட்டியான செட்களை ஆர்ட் டைரக்டர் சுரேஷ் அமைத்துத் தந்திருக்கிறார். இவர் சாபுசிரிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.

* டேராடூன் படப்பிடிப்புக்குப் பிறகு ஆகஸ்ட் 10-ம்தேதி முதல், சென்னை பூந்தமல்லியில் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. அதற்காக அங்கே மதுரையை நகலெடுத்ததுபோல் ஒரு பிரமாண்ட அரங்கை அமைத்து வருகிறார்கள். சென்னையில் அங்கு படப்பிடிப்பு முடிந்த பின்னர் லக்னோவில் படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்கிறார்கள். 

* ரஜினியின் ஆன்மிக அரசியல் என்ட்ரிக்கு ஏற்றவகையிலான வசனங்கள் படத்தில் இருக்கும் என்கிறார்கள். அதற்கேற்றபடி மாணவர்களுக்கு  அவர் கொடுக்கிற அட்வைஸ்கள் எல்லாம் அரசியல் பன்ச்களாக இருக்குமாம்!