பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

• விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள ‘96’ படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று யூ டியூபில் டிரெண்டிங்கில் உள்ளது. டீஸர் காட்சிகளில் வரும் த்ரிஷாவின் நடிப்பை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.

• நடிகை சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படம், ஆஸ்திரேலியாவில் நடக்கும் மெல்போர்ன் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கிறது. குறிப்பாக, சிறந்த நடிகை, சிறந்த படம் போன்ற பிரிவுகளில் போட்டியிடவிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

• அறிமுக இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் சைக்கோ த்ரில்லர் கதையில் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அவர், எழுத்தாளர் கேரக்டரில் நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ஹைலைட்

மந்தா நடிக்கும் ‘யூ டர்ன்’ படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் வெர்ஷன்களின் படப்பிடிப்பு நிறைவுபெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுவருகின்றன. விரைவில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் ஆகியவை வெளியாகும். இதில் சமந்தா புலனாய்வுப் பத்திரிகையாளராக நடித்துள்ளார்.

மிஸ்டர் மியாவ்

வைரல்

‘ஐ
எம் எ ஸ்டார்’ என்று சொல்லி விளையாட்டாக எடுத்த ஃபன் வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ப்ரியங்கா சோப்ரா. அந்த வீடியோவை 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள். இதை ப்ரியங்காவின் ரசிகர்கள் வெறித்தனமாக ஷேர் செய்துவருகின்றனர். 

மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

டோ
லிவுட்டை பரபரப்பாக வைத்திருந்த ஸ்ரீரெட்டி லீக்ஸ், கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர்மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி. இது, தமிழ் சினிமாவில் பரபரப்பான சூழலை உருவாகியுள்ளது.

• அறிமுக இயக்குநரின் த்ரில்லர் கதையில் நடிக்கும் ஹன்சிகா, கென்யாவுக்கு ஜாலி ட்ரிப் சென்றுள்ளார். அங்குள்ள விலங்குகள் சரணாலயத்தில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் போட்டு லைக்குகளை அள்ளிவருகிறார்.

• தமிழில் ‘வட சென்னை’, ‘விஸ்வரூபம் 2’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ள ஆண்ட்ரியா, தற்போது சரண் தேஜ் இயக்கி நடிக்கும் ‘ஆயுஷ்மான் பவ’ என்ற தெலுங்கு படத்தில் பாப் பாடகியாக நடிக்கவிருக்கிறார்.

• அஞ்சலி நடித்தும் வரும் ‘லிசா’ படத்தில் யோகி பாபு முக்கியமான கேரக்டரில் நடிக்கப்போகிறார்.

• சென்னையில் நடைபெற்று வரும் ‘சர்கார்’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த ஷெட்யூலுக்காக அமெரிக்கா பறக்கிறது ‘சர்கார்’ படக்குழு. 

• உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியைக் காண ரஷ்யா போயிருக்கும் ஸ்ரேயா, ‘இங்கு நம் நாட்டுக் கொடியும் பறக்க வேண்டும் என எத்தனை பேருக்கு ஆசை இருக்கிறது? ஒரு நாள் நம் கனவு நனவாகும்’ என்ற வாசகத்துடன், தான் ஸ்டேடியத்தில் இருக்கும் போட்டோவைப் பதிவிட்டுள்ளார்.

மிஸ்டர் மியாவ்

• பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் டாப்ஸி, ‘‘சும்மா வந்துபோகும் கேரக்டராக இல்லாமல், அழுத்தமாக இருக்கும் கதைகளையே தேர்வுசெய்து நடித்துவருகிறேன். ஜெனிஃபர் லாரன்ஸைப்போல அதிரடியான வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்’’ என்கிறார்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு