Published:Updated:

`சீதக்காதி’ வில்லன் யார் தெரியுமா?

`சீதக்காதி’ வில்லன் யார் தெரியுமா?
`சீதக்காதி’ வில்லன் யார் தெரியுமா?

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் விஜய் சேதுபதியை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் `சீதக்காதி.’ இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முதியவர் வேடத்தில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் விஜய் சேதுபதி.

அதைத் தொடர்ந்து வெளியான மேக்கிங் வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக நடிகர் வைபவ்வின் அண்ணன் சுனில் நடித்துள்ளார். வழக்கமான வில்லனாக இல்லாமல் நகைச்சுவை கலந்த வில்லனாக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இந்தக் கேரக்டரில் நடிக்க தயாரிப்பாளர் சி.வி.குமாரிடமும் பாடகர் மனோவிடமும் அணுகியுள்ளார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். ஆனால், அது கைகூடாமல் போக, இவரை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒரு பிறந்தநாள் விழாவில் சுனிலை பார்த்த பாலாஜி தரணிதரன், அவரிடம் நடிக்க கேட்டுள்ளார். ஆரம்பத்தில் அவர் தயங்க, பின்பு ஒப்புக்கொண்டாராம். இதற்காக சில வாரங்கள் அவருக்கு நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு பின் படத்தில் நடித்துள்ளாராம்.