Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

கோலிவுட் பிரபலங்கள் பலர்மீது பாலியல் புகார் சொன்னதால் தன்னை விஷால் மிரட்டுவதாகக் குற்றம்சாட்டிய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, இப்போது விஷாலிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ‘‘நடிகைகளுக்கு நடக்கும் இதுபோன்ற அநீதிகளைத் தட்டிக்கேட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்” என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ‘நடிகையர் திலகம்’ படத்துக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் தன் சம்பளத்தை அதிகரித்திருக்கிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால், இதை மறுத்திருக்கும் கீர்த்தி, ‘‘எனக்குப் பணத்தைவிட நல்ல படங்கள்தான் முக்கியம்’’ என்று கூறியிருக்கிறார். 

• எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடிக்கும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற அனிமேஷன் படத்தில், இரண்டாவது ஹீரோயினாக சாயீஷா நடிக்கிறார். அதற்கு அவரிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு, அவரது உருவத்தை டிசைன் செய்து படத்தில் நடிக்கவைத்துள்ளனர்.

• ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 11-ம் தேதி நடக்கும் இந்தியத் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருக்கும் ராணி முகர்ஜி, அங்கு இந்தியத் தேசியக் கொடியை ஏற்றுகிறார். ‘‘இந்தத் தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாததாக இருக்கும்’’ என்று பரவசப்படுகிறார் ராணி.

மிஸ்டர் மியாவ்

வைரல்

‘சர்கார்’ படப்பிடிப்பில் லேடி கெட்டப்பில் கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோவை யோகி பாபு தனது சோஷியல் மீடியா பக்கங்களில் அப்லோடு செய்திருக்கிறார். அந்த வீடியோவை பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

• ஸ்ருதி ஹாசன் தான் பாடிய ‘கண்ணழகா’ பாடலை, புது மெட்டு அமைத்து இசைக்குழுவுடன் பாடித் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். அவரின் ரசிகர்கள் இதை ஷேர் செய்துவருகின்றனர்.

• ‘பிச்சைக்காரன்’ படத்துக்குப் பிறகு சசி இயக்கவிருக்கும் படத்தில், சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். படத்திற்கு இசை, ஜி.வி.பிரகாஷ். ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

ஹைலைட்

‘‘மும்பை நடிகைகளுக்குக் கிடைக்குற மரியாதையைவிட நமக்கு ஒருபடி குறைவாத்தான் கிடைக்கும். வடநாட்டுப் பொண்ணுங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர்ற சினிமா துறையினருக்கு, ஏன் நம்ம ஊர் பொண்ணுங்களை சரியாப் பார்த்துக்கத் தெரியலைங்கிற வருத்தம் எனக்குள் நிறையவே இருக்கு’’ என ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

மிஸ்டர் மியாவ்

• வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை சதா, பாலியல் தொழில் செய்யும் பெண்களைப் பற்றிய படத்தில் நடித்துள்ளார். ‘டார்ச் லைட்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், பல உண்மைச் சம்பவங்களும் பேசப்பட்டுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism