Published:Updated:

"நயன்தாரா எனக்குக் கொடுத்த பர்சனல் அட்வைஸ்!" - 'நாயகி' பப்ரி கோஷ்

ன் டி.வி 'நாயகி' சீரியல் புகழ் நடிகை பப்ரி கோஷ், சினிமாவிலும் பிஸியாகிவிட்டார். தன் சினிமா மற்றும் பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்தார்.

" 'சர்கார்' படத்துல சின்ன ரோல்ல நடிச்சிருந்தேன். 'விஸ்வாசம்' படத்தில் நடிச்சது மறக்க முடியாத அனுபவம். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் அஜித் சார், நயன்தாரா, நான், தம்பி ராமையா சார் ஆகியோர் 'டம்ஸ் ராஜ்' கேம் விளையாடுவோம்; பெரியவங்க சின்னவங்கங்கிற வித்தியாசம் இல்லாம அன்பாகப் பழகுவோம். கடைசி நாள் ஷூட்டிங்கின்போது, 'லைஃப்ல எல்லாம் வரும்; போகும். நான் நிறைய விஷயங்களை மிஸ் பண்ணிட்டேன். நீ இப்போ இருக்கிற மாதிரி எப்போதும் சந்தோஷமா இரு. இதுதான் நல்ல குணம்'னு நயன்தாரா எனக்கு அட்வைஸ் கொடுத்தாங்க. இப்போ, அரவிந்த் சுவாமி சார் படத்துல நெகட்டிவ் ரோல்ல நடிக்கிறேன். சீரியல் ஷூட்டிங் பிஸியா போனாலும், சினிமாவுலயும் அதிகம் கவனம் செலுத்துறேன்.
 
என்னோட பூர்வீகம், கொல்கத்தா. ஆக்டிங் கரியருக்காக, சென்னையில வசிக்கிறேன். இங்க, சீரியல் மற்றும் சினிமாவில் நடிக்கிறதால, ரெண்டு மாதத்துக்கு ஒருமுறைதான் ஊருக்குப் போக முடியுது. அதனால, என் குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்றேன். தினமும் ரெண்டு முறையாவது என் அம்மாகிட்ட போன்ல பேசினால்தான், அந்த நாள் எனக்கு முழுமையடையும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரை சுத்தமா தமிழ்த் தெரியாது. இப்போ, நல்லா தமிழ் பேசுறேன். நிறைய அனுபவங்களை சென்னை எனக்குக் கத்துக்கொடுத்திருக்கு. மகிழ்ச்சியா நடிச்சுக்கிட்டு இருக்கிறேன்" என்று புன்னகைக்கிறார் பப்ரி கோஷ்.