தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

நான் நானாக இருப்பதே நான்! - சயிஷா

நான் நானாக இருப்பதே நான்! - சயிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
நான் நானாக இருப்பதே நான்! - சயிஷா

கண்ணுக்கினியாள்ஆர்.வைதேகி்

கிழ்ச்சியும் அதிர்ச்சியும் கலந்த மனநிலையுடன் பேசுகிறார் நடிகை சயிஷா. மகிழ்ச்சிக்குக் காரணம், அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றி. அதிர்ச்சிக்குக் காரணம், சென்னைச் சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை.

‘`தினமும் காலையில டீ குடிக்கும்போது நியூஸ் பேப்பர் படிக்கிறது என் வழக்கம். சென்னையில 11 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம் பத்திப் படிச்சதும் மனசு தாங்கலை. தொடர்ந்து குழந்தைகள் மேல நிகழ்த்தப்படும் குற்றங்கள் வருத்தத்தைத் தருது. சட்டங்கள் கடுமையாக்கப்படணும். அது மட்டும் போதாது. மக்கள் இன்னும் அதிக விழிப்பு உணர்வோடு இருக்கணும். குழந்தைங்களைப் பத்திரமா பார்த்துக்கோங்க...’’ - மும்பையில் இருந்தாலும் தமிழ் மக்களின் வாழ்வியல் மீதான அக்கறை தெரிகிறது சயிஷாவின் பேச்சில். இருக்காதா பின்னே? வாழ வைத்துக்கொண்டிருப்பவை தமிழ்நெஞ்சங்கள் அல்லவா?

நான் நானாக இருப்பதே நான்! - சயிஷா

‘` ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துல நடிச்ச பிறகு அந்த அன்பு இன்னும் அதிகமாகியிருக்கு. அதுக்குக் காரணம் என்னை வியக்க வெச்ச கிராமத்து மனுஷங்க.  இவ்வளவு அன்பா இருக்க முடியுமானு அன்பால திக்குமுக்காட வெச்சிட்டாங்க. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துல என் கேரக்டர் பெயர் கண்ணுக்கினியாள். அந்தப் படத்தைப் பார்த்துட்டு, என் ரசிகர் ஒருத்தர் தன் குழந்தைக்கு அந்தப் பெயரை வெச்சிருக்கிறதா சொன்னபோது நெகிழ்ந்துட்டேன். வெளியில இருந்துட்டு விவசாயம் அழிஞ்சிட்டிருக்குன்னும், விவசாயிகள் பாவம்னும் கவலைப்படறதோடு நிறுத்திக்கிறோம். விவசாயமும் விவசாயிகளும் இல்லைனா மனித வாழ்க்கையே இல்லைங்கிறதை உணர்வுபூர்வமா ஃபீல் பண்ண வெச்ச படம் இது. விவசாயிகளின் அருமையைப் புரியவெச்ச படமும்கூட...’’ - விட்டால் விவசாயிகள் சங்கத்தின் மகளிரணித் தலைவியாகிவிடுவார் போல.

‘` ‘சிட்டி பொண்ணான நீ எப்படி வில்லேஜ் கேர்ள் கேரக்டர்ல நடிக்கப் போறே...’னு என் ஃப்ரெண்ட்ஸ்கூடக் கேட்டாங்க. வீட்டுக்குள்ள ரொம்ப சிம்பிளான லைஃப் ஸ்டைலில் வளர்ந்தவள் நான். கண்ணுக்கினியாளுக்கும் சயிஷாவுக்கும் கேரக்டரில் பெரிசா வித்தியாசம் கிடையாது. சின்னச்சின்ன விஷயங்கள்லயே திருப்தியடைஞ்சிடறாங்க கிராமத்து மக்கள். கிட்டத்தட்ட நானும் அப்படித்தான். என் கலர், தோற்றத்தையெல்லாம் தாண்டி, என்னையும் அவர்களில் ஒருத்தியா ஏத்துக்கிட்டாங்கனுதான் சொல்லணும்...’’-  வில்லா டு வில்லேஜ் அனுபவம் பேசும் சயிஷா, விஜய் சேதுபதியுடன் ‘ஜுங்கா’, ஆர்யாவுடன் ‘கஜினிகாந்த்’ மற்றும் சூர்யா - கே.வி.ஆனந்த் இணையும் அடுத்த படம் என பிசி.

சயின்ஸ் ஸ்டூடண்ட் சயிஷா, பாலிவுட் ஜோடி திலீப்குமார் - சாய்ரா பானு வம்சத்தைச் சேர்ந்த ஆறாம் தலைமுறை அழகி.

‘`கதக், ஒடிஸி, லாட்டின் அமெரிக்கன் டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டேன்.  யாருமே எதிர்பார்க்காத நேரத்துல திடீர்னு நடிகையாகிட்டேன். தெலுங்கு, ஹிந்தி, தமிழ்ல நடிச்சிட்டேன். நினைச்சுப் பார்த்தா எல்லாமே கனவு மாதிரி இருக்கு...’’ காஜல் கண்கள் இன்னும் விரிகின்றன.

அப்புறம்?

‘`நான் பக்கா வீட்டுப் பறவை. அம்மா செல்லம். ஷூட்டிங் இல்லாதபோது என் ஃபர்ஸ்ட் சாய்ஸ் டான்ஸ். கேக் செய்யறது ரொம்பப் பிடிக்கும். டிராவல் பண்ணுவேன். ஸ்விம்மிங் பிடிச்ச விஷயம். இப்போ தமிழ் கத்துக்கிட்டிருக்கேன். ‘அப்படியா’ங்கிற வார்த்தை அவ்வளவு பிடிக்குது. நடிகை யான பிறகு என் லைஃப் பெரியளவுல மாறலைனுதான் சொல்வேன். நான், நானா இருக்க முயற்சி பண்றேன்!’’

பிக் பாஸ் பார்க்கிறாரோ?