Published:Updated:

“கதைக்குத் தேவை இருந்ததால - ஹா... ஹா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“கதைக்குத் தேவை இருந்ததால - ஹா... ஹா!
“கதைக்குத் தேவை இருந்ததால - ஹா... ஹா!

மா.பாண்டியராஜன்

பிரீமியம் ஸ்டோரி

“ ‘நம்ம படம் அஞ்சு மணிஷோவா’ன்னு நானே ஆச்சர்யப்பட்டு இருந்தப்ப, சிம்பு போன் பண்ணி, ஒரு மணி நேரம் பேசினார்.  ‘ஆடியன்ஸ் ரொம்ப என்ஜாய் பண்றாங்க.    முதல் சீன்ல இருந்து படம் முடியற சீன் வரைக்கும் எந்த இடத்திலேயும் ஃப்ரீயா விட்டுடாம, நல்லா நடிச்சிருக்க’னு சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்ரதர்...’’  - ‘தமிழ்ப்படம் 2’ வெற்றியில் உற்சாகமாக இருந்த சிவாவைச் சந்தித்தேன்.

“கதைக்குத் தேவை இருந்ததால - ஹா... ஹா!

“ `தமிழ்ப்படம் - 2’ ஆரம்பிக்கும்போதே எல்லாப் படங்களையும் கலாய்க்கணும்னு லிஸிட் எடுத்திட்டீங்களா... ஒரு படத்தையும் விட்டுவைக்கலையே..?”

`` ‘தமிழ்ப்பட’மும் மத்த படங்கள் மாதிரி ஒரு படம்தான். இதிலேயும் கதை இருக்கு; முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் கனெக்ட் இருக்கு; இதில் இவங்களை எல்லாம் கலாய்க்கணும்; அதுக்காக ஒவ்வொரு சீன் வைக்கணும்னு தனியா சீன் பண்ணுனா, அது துண்டு துண்டா தெரியும். அப்படிக் கலாய்க்கணும்னு நாங்க எதுவும் பண்ணலை. இந்தப் படத்தோட சீன்களுக்கு நடுவுல வேற சில பட சீன்களின் சாயல் வரும்போது அந்தப் படத்தைக் கலாய்க்கிற மாதிரி இதில் பண்ணியிருப்போம். அப்படிக் கலாய்க்கிறதுக்குத் தகுந்த மாதிரி சில சீன்களும் வச்சு, அது படத்தோட திரைக்கதையைப் பாதிக்காத மாதிரியும் சி.எஸ்.அமுதன் எழுதியிருக்கார். இந்த மாதிரி கதை எழுதுறது ரொம்ப கஷ்டம் ப்ரதர். மற்ற படங்களைக் கலாய்ச்சுப் படம் பண்றது ஈஸினு எல்லாரும் சொல்லுவாங்க. அப்படி ஈஸியா இருந்தா நிறைய படங்கள் வந்திருக்கணும்ல. இது ரொம்ப கஷ்டமான ஜானர் ப்ரதர்.’’

“விஜய் - முருகதாஸ், அஜித் - சிவா மாதிரி சிவா - அமுதன் காம்போவும் ஹிட்டுனு சொல்றாங்களே..?”

‘’எங்களைவிட ஹிட்டான காம்போக்கள் எல்லாம் இருக்கு. ஸ்ஃபூப் ஜானர்ல வேற யாரும் படம் பண்றது இல்லை; நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ரெண்டு ஸ்ஃபூப்  படங்கள் பண்ணதால அப்படிச் சொல்லுவாங்க. ஆனால், இதைக் கேட்க ஜாலியா இருக்கு.’’

“முதல் பாகத்துல படங்களை மட்டும்தான் கலாய்ச்சீங்க... இந்தப் படத்தில் அரசியல்வாதிகளையும் விட்டுவைக்கலயே..?”

 “கதைக்குத் தேவையா இருந்ததால.... (அவரே சிரிக்கிறார்) படத்துல அது தனியா தெரியலைல்ல? அப்பறம் என்ன ப்ரதர். அதுக்கும்  அரசியலுக்கும் சம்பந்தம் இல்ல. தியானம் பண்றது ரொம்ப நல்ல விஷயம். மத்தபடி நாங்க  எதுக்கு அரசியல்வாதிகளைக் கலாய்க்கப்போறோம்?’’

“முதல் பாகத்தோட காமெடியெல்லாம் எவர்கிரீனா இருந்தது. ஆனா, இதில் எல்லாமே டிரெண்டிங் காமெடியா இருக்கே... இன்னும் சில வருஷங்கள் கழிச்சு இந்தப் படத்தைப் பாக்குறவங்களுக்குப் புரியாதுங்கிறதைப் பற்றி யோசிக்கலையா..?”

``ஸ்கிரிப்ட் படிச்சப்பவே நானும் யோசிச்சேன். ஒரு அஞ்சு வருஷம் கழிச்சு இந்தப் படத்தைப் புதுசா பாக்குறவங்களுக்கு இந்தக் காமெடி எதை வெச்சுப் பண்ணியிருக்காங்கங்கிற குழப்பம் வரும்தான். ஆனா, இப்போ இருக்குறவங்க எல்லாரும் டிரெண்டிங்  காமெடியைத்தானே ரசிக்கிறாங்க.’’

“கதைக்குத் தேவை இருந்ததால - ஹா... ஹா!

`தமிழ்ப்படம்’ பண்ணுனதுக்கு அப்பறம் உங்களால சீரியஸ் படங்கள் பண்ண முடியலைங்கிற வருத்தம் இருக்கா..?

 “ஐயோ... அப்படியெல்லாம் இல்லை ப்ரதர். மக்கள் எதை என்ஜாய் பண்ணிப் பார்க்கிறாங்களோ அதை மட்டும் பண்ணலாம்கிற எண்ணத்தில்தான் இப்படியான படங்கள் பண்ணிட்டிருக்கேன். பர்சனலா இருக்கிற கஷ்டங்களை மறந்து, ஜாலியா இருக்கணும்னுதான் மக்கள் படம் பார்க்க வராங்க. அதனால, அவங்களுக்குத் தேவையானதைக் கொடுக்குறோம்கிற திருப்தியில்தான் வேலை செஞ்சுட்டிருக்கேன். எனக்கு வர்ற படங்களும் இப்படித்தான் வருது. நீங்க சொல்ற மாதிரி புது முயற்சிகள் பண்ணணும்னா அதை நம்மளே காசு போட்டு எடுக்குற படத்திலதான் பண்ணணும். அந்த ஐடியா எனக்கு இல்லை.’’

“படங்களைத் தவிர்த்து வெளியிலும் உங்களை நீங்க வெகுளியாகவே காட்டிக்கிறது ஒரு நடிகரா உங்களுக்கு சரினு தோணுதா..?”

 ``என்னோட எந்தப் படத்தை நீங்க எடுத்துக்கிட்டாலும், நான் நடிச்ச கேரக்டர் எல்லாம் என்னைத்தான் பிரதிபலிக்கும். நான் மட்டும் ஜாலியா இருக்கிறதோட, என்னைச் சுத்தி இருக்குறவங்களும் ஜாலியா இருக்கணும்னு நினைக்கிறேன். நான் வீட்டுக்குள்ள போயிட்டா என் அம்மாவுக்கு மகனா, என் மனைவிக்குக் கணவரா இருப்பேன். வெளியில வந்துட்டா நான் ஆக்டர் சிவாதான். எல்லாரையும் என்டர்டெயின் பண்ணணும். Comedy is a serious business-னு சொல்லுவாங்க. அவ்வளவு சீரியஸாதான் இதைப் பண்ணிட்டிருக்கேன்.’’

“பல நடிகர்களோட மெனக்கெடல் வெளியில தெரியுது; மக்கள் பாராட்டுறாங்க. ஆனால், உங்களோட மெனக்கெடல் வெளியில தெரியலையேனு ஃபீல் பண்ணியிருக்கீங்களா..?”

`` ‘இங்க பாரு... எவ்வளவு கஷ்டப்பட்டு காமெடி பண்றான்’னு சொன்னா நல்லாவா இருக்கும்? கஷ்டத்தை வெளியில காட்டிக்காம நடிக்கிறதுதானே நடிப்பு. அதனால நடிக்கிறது வெளியில் தெரியாம நடிச்சிட்டிருக்கேன்.’’

“நீங்க ஒரு குறிப்பிட்ட டீமுக்குள் மட்டுமே படம் பண்ணிட்டிருக்கீங்கங்கிற ஃபீல் இருக்கே..?”


``வெங்கட் பிரபு சார், புஷ்கர் காயத்ரி, சுந்தர்.சி சார்னு மாறி மாறிதான் பண்ணியிருக்கேன். என்னைப் பற்றி நல்லா தெரிஞ்ச, என்னோட ஜானருக்கு செட்டான ஆள்களா இருந்தா இன்னும் ஃப்ரீயா, நல்லா வொர்க் பண்ண முடியும். அதனால வெங்கட் பிரபு படங்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பண்ணியிருக்கேன். அதான் பார்க்குறவங்களுக்கு அப்படி ஒரு ஃபீல் வந்திருக்கும்.’’

“கதைக்குத் தேவை இருந்ததால - ஹா... ஹா!

“உங்களோட முதல் படத்திலிருந்து இப்போ வரைக்கும் வெயிட் போடாமலும், வெயிட் குறையாமலும் எப்படி ஒரே மாதிரி இருக்கீங்க..?”

``சிரிக்காம இந்தக் கேள்வியை என்கிட்ட கேட்டதுக்கு தேங்க்ஸ் ப்ரதர். என்னை  சிக்ஸ்பேக் வைங்க, வெய்ட் குறைங்கன்னு யாரும் சொன்னதில்லை. அதனால என் இஷ்டத்துக்கு நான் இருக்கேன்.”

“ ’பார்ட்டி’, மீண்டும் வெங்கட் பிரபுவோட சேர்ந்து இன்னொரு படம்... அதில் என்ன ஸ்பெஷல்..?”

`` ‘பார்ட்டி’ படத்தில்  முதல்முறையா சத்யராஜ் சார்கூட நடிச்சிருக்கேன். நிறைய ஜானர்கள்  மிக்ஸ் பண்ணி இது வேற மாதிரியான படமா இருக்கும். வெங்கட் பிரபு  படத்துல பிரேம் ஜி இல்லாம நான் நடிச்ச முதல் படம் இது. அவர் இல்லாம ஷூட்டிங் ஸ்பாட் ரொம்ப ஜாலியா இருந்தது. வெங்கட் சார்கிட்டேயும், ‘பிரேம் ஜி இல்லாம வொர்க் நல்லா போயிட்டிருக்கில்ல சார்’னு சொன்னேன். ஆனா, பிரேம் மியூசிக்ல மிரட்டிட்டார். ஆல்பம் நல்லா வந்திருக்கு.’’

“ஃபேமிலி..?”

``பெரிய ஃபேமிலி. அஞ்சு அக்கா, ஒரு அண்ணன். நான்தான் கடைசிப் பையன். என்கூடப் பிறந்த ஆறு பேரும் செட்டில் ஆகிட்டாங்க. அப்பா இல்லை. நான் என் அம்மா, என் மனைவி ப்ரியா மூணு பேரும் சென்னையிலதான் இருக்கோம்.’’

“முதல் பாகத்தில் உங்க டான்ஸ் ரொம்ப ஃபேமஸ்... இதுல ஆடினதுக்கு என்ன ரெஸ்பான்ஸ்?”

``க்ளாஸிக்கல் டான்ஸ் என் ரத்தத்துலேயே இருக்கு; அது கடவுள் எனக்குக் கொடுத்த வரம். படம் பார்த்தப்பறம் எனக்கும் சதீஷுக்கும் நிறைய க்ளாஸிக்கல் டான்ஸ் ஆஃபர்ஸ் வருது.  அதுவும் என்னை டான்ஸ்ல சதீஷ் மிஞ்சிட்டார். இப்படியே எழுதுங்க... சரியா?”

ப்ளீஸ்...வேணாம்...விட்டுருங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு