Published:Updated:

“இப்ப நான் பிஸிதான் ப்ரோ!”

“இப்ப நான் பிஸிதான் ப்ரோ!”
பிரீமியம் ஸ்டோரி
“இப்ப நான் பிஸிதான் ப்ரோ!”

தார்மிக் லீ

“இப்ப நான் பிஸிதான் ப்ரோ!”

தார்மிக் லீ

Published:Updated:
“இப்ப நான் பிஸிதான் ப்ரோ!”
பிரீமியம் ஸ்டோரி
“இப்ப நான் பிஸிதான் ப்ரோ!”
“இப்ப நான் பிஸிதான் ப்ரோ!”

‘மூடர்கூடம்’ படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் திரைத்துறையில் கால் பதித்தவர் நவீன். அடுத்த படமான ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ ரிலீஸுக்கு ரெடி. மூன்றாவது பட வேலைகளில் பிஸியாக இருந்தவரை சந்தித்தேன்.

‘` ‘மூடர்கூடம்’ படத்துக்கு அப்புறம் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?’’

“‘மூடர்கூடம்’ படத்துக்குப் பிறகு ‘கொளஞ்சி’னு ஒரு படம் தயாரிச்சேன். ஃபேமிலி என்டர்டெயினர். என்னுடைய பேனர்ல வர்ற முதல் படம்ங்கிறதுனால, முழுப்படத்துக்கும் கூடவே இருந்து வொர்க் பண்ணினேன். இப்போ அந்தப் படம் ரிலீஸுக்குத் தயாரா இருக்கு. அதுக்கு நடுவுலதான், ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்துடைய வேலையை ஆரம்பிச்சேன். டீசருக்கே நல்ல ரெஸ்பான்ஸ். இப்போ விஜய் ஆண்டனி நடிக்கிற படத்துடைய வொர்க்கும் போயிட்டிருக்கு. இப்ப நான் பிஸிதான் ப்ரோ.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இப்ப நான் பிஸிதான் ப்ரோ!”

“ ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ன மாதிரியான கதைக்களம்?”

“ ‘மூடர்கூடம்’ ஒரு வீட்டுல நடக்குற படம்னா, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ வெவ்வேறு நாடுகள்ல ட்ராவல் ஆகுற படம். அந்தப் படம் சிம்பிளா இருந்தா, இந்தப் படம் பிரமாண்டமா இருக்கும். அதுல ஆக்‌ஷன் இல்லேன்னா, இதுல ஆக்‌ஷன் அதிகமா இருக்கும்... இப்படி நிறைய விஷயங்கள்ல கவனம் செலுத்தினேன். சுவிஸ், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலினு கிட்டத்தட்ட ஏழு ஐரோப்பிய நாடுகள்ல ஷூட் பண்ணியிருக்கோம். என்டர்டெயின்மென்ட்டும் இருக்கு. மெசேஜும் இருக்கு!”

“படத்துல யார் யாருக்கு எந்த மாதிரியான கேரக்டர்?”


“அலாவுதீன் கையில, அற்புத விளக்குக்குப் பதிலா ஒரு கேமரா கிடைச்சா என்ன ஆகும்ங்கிறதுதான் கதை. நான், கயல் ஆனந்தி தவிர, இந்தப் படத்துல நடிச்ச எல்லோரும் புது முகங்கள். தயாரிப்பாளர் நந்தகோபால் இந்தப் படத்துல வில்லனா நல்ல பர்ஃபார்ம் பண்ணிருக்கார். நான்தான் படத்துல அலாவுதீன். இது ஒரு ஃபேன்டஸி படமா இருக்கும்.’’

“இப்ப நான் பிஸிதான் ப்ரோ!”

“ ‘மூடர்கூடம்’ படம் வெளியான சமயத்துல ‘அந்தப் படம் வேற படத்துடைய காப்பி’ங்கிற மாதிரி விமர்சனம் வந்தது. இந்தப் படத்துக்கும் அப்படி வருமா?”

“சக்கரம் ஏற்கெனவே கண்டுபிடிச்சிட்டாங்க. அந்தச் சக்கரத்தை வெச்சு நம்ம என்ன பண்றோம்ங்கிறதுதான் விஷயம். உலகத்துல இன்ஸ்பிரேஷன் இல்லாம எதுவுமே இல்லை. படித்த புத்தகங்கள், பார்த்த படங்கள், சந்தித்த மனிதர்கள்... இவையெல்லாம்தான் நமக்குள்ள இருக்கிற ஒரு விஷயத்தை வெளிக்கொண்டுவரும். அதைச் சரியா பண்ணுனா, அது உங்களுடைய ஒரு படைப்பா இருக்கும். உங்க படைப்புல நீங்க  என்ன சொல்றீங்க, அதை எப்படிக் கடத்தறீங்கங்கறதுதான் விஷயம். அதை மூடர்கூடம் சரியா செஞ்சது. அலாவுதீனின் அற்புத கேமராவும் செய்யும்.”

“இப்ப நான் பிஸிதான் ப்ரோ!”

“ ‘மூடர்கூடம்’ல உங்ககூட நடிச்ச சிந்துவையே கல்யாணம் பண்ணிட்டீங்க. காதல் திருமண வாழ்க்கை எப்படி இருக்கு?”

“ சிந்து, ஹைதராபாத்ல டீச்சரா வொர்க் பண்ணிட்டிருந்தாங்க. முன்னாடி எந்தப் படங்கள்லேயும் நடிச்சது இல்லை. . ‘மூடர்கூடம்’ படத்துடைய கதைப்படி ஒரு முஸ்லிம் பொண்ணு வேணும். படத்துடைய பட்ஜெட் வேற ரொம்ப கம்மி. அப்போ  நடிகர் ராஜாஜியுடைய நண்பர் மூலம் சிந்து எங்களுக்கு அறிமுகமானாங்க. படமும் நல்லபடியா முடிஞ்சது. அவங்ககிட்ட பர்சனலா போய், ‘எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. உங்களுக்கு ஓகேனா சொல்லுங்க, வீட்டுல வந்து பொண்ணு கேட்குறேன்’னு ப்ரொபோஸ் பண்ணுனேன். ஓகே சொன்னாங்க. அவங்க வீட்லயும் பேசினேன். அப்புறம் நல்லபடியா கல்யாணமும் முடிஞ்சது. சிந்து கராத்தேல பிளாக் பெல்ட் வேற வெச்சிருக்காங்க. நான் கையைத் தூக்குறதுக்குள்ள எனக்கு ரெண்டு அடி விழுந்துரும். வாழ்க்கை ரொம்ப ஜாலியா போகுது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism