Published:Updated:

கூடுகள் நிரம்பிய வாழ்க்கை!

கூடுகள் நிரம்பிய வாழ்க்கை!
பிரீமியம் ஸ்டோரி
கூடுகள் நிரம்பிய வாழ்க்கை!

கார்த்தி

கூடுகள் நிரம்பிய வாழ்க்கை!

கார்த்தி

Published:Updated:
கூடுகள் நிரம்பிய வாழ்க்கை!
பிரீமியம் ஸ்டோரி
கூடுகள் நிரம்பிய வாழ்க்கை!
கூடுகள் நிரம்பிய வாழ்க்கை!

ரக்கிளையிலிருந்து விழும் கூடொன்றை எடுத்து மரத்தில் வைத்தபடி தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் சிறுவயது ஜோஷ்வா. முறிந்த கிளையிலிருந்து விழும்  ஒவ்வொரு கூட்டுக்கும் ஓர் உதவிக்கரம் தேவைப்படுகிறது. அஞ்சலி மேனன் இயக்கியிருக்கும் ‘கூடே’ திரைப்படம், முறிந்த கிளைகளின் கூடுகளாலும், உதவிக்கரம் நீட்டும் மனிதர்களாலும் நிரம்பியிருக்கிறது.

கூடுகள் நிரம்பிய வாழ்க்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!பிருத்விராஜின் தங்கையாக, மரபுவழி நோயினால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில்,  நான்காண்டுகளுக்குப் பின்னர் நஸ்ரியா நடித்திருக்கிறார். தன் கவிதைக்குக் கிடைக்கும் சிறு அங்கீகாரத்துக்குக் குதூகலமாகும் காட்சி ஆகட்டும், தன் காதலனை மீண்டும் சந்திக்கும்போது நேசத்துடன் அருகில் சென்று அமர்வதாகட்டும், ஒவ்வொருமுறையும் ‘பசிக்குது’ எனச் சொல்லிவிட்டு அவர் செய்யும் லூட்டி ஆகட்டும்... எல்லாமே அதகளம்.

கூடுகள் நிரம்பிய வாழ்க்கை!

நஸ்ரியாவைச் சந்திக்கும் முதல் காட்சியில் அதிர்ச்சியும், தங்கையுடன் இவற்றைப் பேசலாமா, கூடாதா எனத் தயக்கமும் வாஞ்சையுமாக வெளிப்படும் பிருத்வியின் நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். பிருத்வியின் பால்ய காலக் காதலை உயிர்ப்பிக்க நஸ்ரியா உதவும் காட்சிகள் அற்புதக் கவிதைகள். பார்வதியை முதல்முதலாகப் பள்ளியில் கண்டவுடன் பார்வையைத் தவிர்ப்பதும், அடுத்த காட்சியில் அவரைக் காணாமல் தவிப்பதும், தங்கையின் அறிவுரையை ஏற்று பார்வதியின் இக்கட்டாண தருணத்தில் அசட்டுத்தனத்துடன் கேள்வி கேட்டு, பின் புரிந்துகொண்டு அரவணைப்பதும், பார்வதியின் வீட்டுக்குச் சென்று அவமானத்துடன் திரும்புவதும் எனப் படம் நெடுகிலும், பிருத்வி இஸ் பேக்!

மீண்டும் ஓர் அழுத்தமான கதையில் பிருத்வியுடன் இணைந்துள்ளார் பார்வதி.  படம் முழுக்க பார்வதி பேசும் வசனங்களை ஒரு Sticky Note-ல் எழுதிவிடலாம். ஆனால், அந்த மென்சோக முகமும், சின்னச் சின்னத் தலையசைப்புகளும், மனதைக் கல்லாக்கிக்கொண்டு காட்டும் உடல்பாவனைகளும் அவரது பாத்திரத்துக்கு வலுச்சேர்க்கின்றன.

கூடுகள் நிரம்பிய வாழ்க்கை!

அஞ்சலி மேனனின் முந்தைய படமான ‘பெங்களூர் டேஸ்’ போலவே, இந்தப் படத்திலும் கதையின் மையத்துக்குத் தேவையில்லாத பாத்திரங்கள், படத்தின் நீளத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள். என்றாலும், சிக்கலான மனிதர்கள், அவர்களுக்குள்ளும் சமயங்களில் எழும் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் எனப் படம் பேசும் மனிதம் அழகு. உறவின் விரிசலில், சிக்கலில் கனம் கூடும்போதெல்லாம் திரைக்கதையில் அஞ்சலி நகைச்சுவையைத் தூவிச்செல்கிறார். கேரள - நீலகிரி நிலப்பரப்புகளை தன் கேமராவில் அதே அழகியலுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் லிட்டில் ஸ்வயம்ப்.

சலனமற்ற ஏரியில் நிலா வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டே உங்கள் ‘கூடவே’ இருக்க வேண்டுமென நினைக்கும் பிரியமானவருடன்  துடுப்பை இயக்கிப் பயணிக்கும் அனுபவம் தரவல்லது இந்தக் `கூடே’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism