பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

‘அவெஞ்சர்ஸ்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவரும்  ஸ்கார்லெட் ஜொஹன்ஸன் அடுத்து ‘Rub & Tug’ என்ற  படத்தில்  நடிக்க ஒப்பந்தமானார். இதில் ஒரு திருநங்கைக் கதாபாத்திரத்தில் நடிக்க விருக்கிறார்.  ‘ஹாலிவுட்டில் மூன்றாம் பாலின நடிகர்கள் ஏராளமாக இருக்கும்போது ஏன் ஒரு பெண் நடிகரை நடிக்க வைக்கவேண்டும்?’ என்று எதிர்ப்பு கிளம்பி யுள்ளதால், ஸ்கார்லெட் அப்படத்திலிருந்து விலகி யுள்ளார். உணர்வுகளுக்கு மதிப்பளி!

இன்பாக்ஸ்

ன்றைய தேதியில் ஹாலிவுட் படங்களில் மோஸ்ட் வான்டட் இந்திய நடிகை என்றால் அது பிரியங்கா சோப்ராதான். பிஸி பேபியான பிரியங்கா பாதிநாள்கள் அமெரிக்காவில்தான் இருக்கிறார். ஜூலை 18-ம் தேதி மீடியாக்கள் பிரியங்காவின் பிறந்தநாளை ஸ்பெஷல் எடிஷன்கள் போட்டுக் கொண்டாடித் தீர்த்தாலும் சத்தமே இல்லாமல் தன் பிறந்த நாளை மும்பை பாந்த்ராவில் இருக்கும் தன் வீட்டில் கொண்டாடியிருக்கிறார்.  சிம்பிளே சிறப்பு!

இன்பாக்ஸ்

ஜூலை 20-ம் தேதி புரூஸ்-லீ நினைவுநாள். ஹாங்காங்கில் இருக்கும் புரூஸ்-லீயின் நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்திருக்கிறார் ஜாக்கி சான். `என் இன்றைய வாழ்க்கைக்குக் காரணம் என் குரு புரூஸ்-லீ தான். விரைவில் அவர் வாழ்க்கையைப் படமாகத் தயாரித்து நடிக்கவிருக்கிறேன். அதுதான் என் வாழ்நாள் கனவு!’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், புரூஸ்லீயாக நடிக்கப்போவது ஜாக்கி இல்லையாம். அவர் மகன் ஜெய்சி சான். குட்டிப்புலி!

இன்பாக்ஸ்

ருவழியாக முன்னாள் காதலர்களும் இந்நாள் சண்டைக்கோழிகளுமான கங்கனா ரணாவத் - ஹ்ரித்திக் ஜோடி மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளனர். மீடியாக்களுக்குத் தொடர்ந்து நெகட்டிவ் நியூஸ்கள் கொடுத்துக்கொண்டிருந்த இருவரையும் இணைத்தது யார் தெரியுமா? ஹ்ரித்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன். தன் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக இருவரையும் வரவழைத்து, சந்திக்க வைத்திருக்கிறார். இதனால், மனைவி சூசனை டைவர்ஸ் செய்துவிட்டுத் தனியாக வாழும் ஹ்ரித்திக்கும் கங்கனாவும் மீண்டும் காதலில் விழுந்துள்ளனர் எனக் கிசுகிசு வர ஆரம்பிக்க, `எங்களுக்குள் இருப்பது உண்மையான நட்பு மட்டுமே!’ என இருவரும் சேர்ந்து பேட்டி கொடுத்துள்ளனர். முதல்ல இப்படித்தான் ஆரம்பிச்சாங்க!

இன்பாக்ஸ்

பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தைத் தயாரித்து  நடித்து வரும் தனுஷ், தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடித்துவருகிறார். இதனை அடுத்து ‘றெக்க’, ‘வா டீல்’ படங்களை இயக்கியுள்ள ரத்தின சிவா இயக்க, தாணு தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். லிஸ்ட் பெரிசாகிட்டே போகுதே!

இன்பாக்ஸ்

குறுகிய காலத்தில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்த இந்திப் படவுலகின் இளம் கதாநாயகி ஆலியா பட், தான் பயன்படுத்திய ஆடைகளை ‘மி வார் ட்ரோப் சு வார்ட்ரோப்’ என்ற எக்ஸ்போ மூலம் விற்று அந்தப் பணத்தின் மூலம் மின்சார வசதியே சென்றடையாத, கர்நாடக மாநில `கிக்கேரி’ என்ற கிராமத்துக்கு சூரிய மின் விளக்குகள் அமைத்துக் கொடுத்திருக்கிறார். படங்களே பார்க்காத கிக்கேரி மக்களுக்கு, இப்போது ஆலியாதான் ‘பவர்’ ஸ்டார். ஆஹா ஆலியா!

இன்பாக்ஸ்

லிட்டில் மாஸ்டரின் வாரிசு கிரிக்கெட் அரங்கத்துக்குள் கால் வைத்துவிட்டார்.  இந்தியா-இலங்கை 19 வயதுக்குட் பட்டோர் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறார் அர்ஜுன் டெண்டுல்கர். இடது கை வேகப்பந்துவீச்சாளர். ரன் அப், கையைச் சுழற்றுவது, பாலை ரிலீஸ் செய்வது என பௌலிங்கில் அச்சு அசல் வாசிம் அக்ரம்தான். ‘சச்சினின் மகன்’ என்றே எல்லோரும் அடையாளப்படுத்த, தன்னைத் தனித்துவமாக நிலைநிறுத்தத் போராடுகிறார் அர்ஜுன். அசத்து ராஜா!

இன்பாக்ஸ்

‘பாகுபலி-2’ படத்துக்குப் பிறகு யோகப் பயிற்சிகளில் தன் முழு நேரத்தையும் செலவழித்து வருகிறார் அனுஷ்கா. அவ்வப்போது அடுத்த படத்துக்கான கதைகளையும் கேட்டுவருகிறார். ஹாரர் கதைகள் தனக்கு ஓர் அடையாளமாக மாறிவிட்டதாகவும், தற்போது ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றும், கதை சொல்பவர்களிடம் அழுத்தமாய்ச் சொல்கிறார். உங்ககிட்ட இருக்கா அப்படி ஒரு கதை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு