பிரீமியம் ஸ்டோரி

• கேத்ரீன் தெரஸா, பெயரிடப்படாத படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்துவருகிறார். நிறையத் தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதால் அவர், முறையாகத் தமிழ் கற்றுவருகிறாராம். இனி,  கேத்ரீன் தெரஸாவை கோலிவுட்டில் பார்க்கலாம்.

மிஸ்டர் மியாவ்

• ‘கடவுள்’ படத்தின் அடுத்த பாகமான ‘கடவுள் 2’ என்ற படத்தை இயக்கிவருகிறார் இயக்குநர் வேலு பிரபாகரன். இதில் பாரதிராஜா, சீமான் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

மிஸ்டர் மியாவ்

• அமெரிக்கவாழ் இந்தியர்கள் அமைப்பு நியூயார்க்கில் நடத்தும் இந்தியச் சுதந்திரதின விழாவின் அணிவகுப்பில், சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசனும் ஸ்ருதிஹாசனும் கலந்துகொள்கின்றனர். 

• தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை, அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார், திஷா பதானி. அந்த வகையில், மஞ்சள் நிற பிகினியில் திஷா இருக்கும் புகைப்படத்திற்கு மில்லியன் லைக்ஸ்! 

மிஸ்டர் மியாவ்

• தமிழில் ஒருசில படங்களில் நடித்த நிவேதா தாமஸ், தெலுங்கில் பிஸியாக இருந்தார். பின், படிப்பில் கவனம் செலுத்திவந்த அவர், மீண்டும் திரைப்பயணத்தைத் தொடங்க உற்சாகமாக இருக்கிறார். தமிழில் அதிகப் படங்களில் நடிக்க வேண்டும் என்று கதைகளைக் கேட்டு வருகிறார். 

ஹைலைட்

‘யு
டர்ன்’ ரீமேக், ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் உதவி இயக்குநரான கிரிசய்யா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தா. அந்தப் படத்தில், சமந்தாவுக்கு கார் டிரைவர் வேடமாம்.

மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

ட வாய்ப்புகள் தருவதாகச் சொல்லித் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என நடிகர்கள்மீது புகார் கூறிவரும் ஸ்ரீரெட்டி, “என் பழைய வாழ்க்கையைப் புரிந்துகொண்டு என்னை உண்மையாகக் காதலிக்கும் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன்” என்று கூறியுள்ளார்.

மிஸ்டர் மியாவ்

வைரல்

‘அ
ர்ஜுன் ரெட்டி’ கெட்அப்பில் தான் இருக்கும் புகைப்படத்தைத் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார், சிவகார்த்திகேயன். அந்தப் புகைப்படத்திற்கு இணையத்தில் செம ரெஸ்பான்ஸ்.

ன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றுப் படம், அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ளது. விரைவில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. “நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் ஆவலாக உள்ளேன். இது உங்களுக்குப் பிடிக்கும்” என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார், சன்னி்.

மிஸ்டர் மியாவ்

ருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் படத்தின் ஷூட்டிங், தென்காசியில் தொடங்கிப் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தற்போது மலேசியா பறந்திருக்கிறது படக்குழு.

‘ம
துபானக்கடை’ பட இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கவிருக்கும் ஒரு படத்தின் ஹீரோவாக சிபிராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு