Published:Updated:

தற்கொலை செய்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.50,000 நிதி! - பாரதிராஜா, அமீர் வழங்கினர்

தற்கொலை செய்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.50,000 நிதி! - பாரதிராஜா, அமீர் வழங்கினர்
தற்கொலை செய்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.50,000 நிதி! - பாரதிராஜா, அமீர் வழங்கினர்

சில நாள்களுக்கு முன்பு கஜா புயல் தமிழகத்தைத் தாக்கியது. இதனால் பல விவசாயக் குடும்பங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின. குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன. அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இழந்து தவித்து வருகின்றனர். பல சமூகப் போராளிகள், தன்னார்வ அமைப்புகள் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். தமிழ்த் திரைப்பட நடிகர்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பியும் உள்ளனர். 

தற்கொலை செய்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.50,000 நிதி! - பாரதிராஜா, அமீர் வழங்கினர்

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜனுக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலங்கள் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள தென்னை மற்றும் தேக்கு மரங்கள் கஜா புயலால் அடியோடு வீழ்ந்து சேதமானது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான விவசாயி தற்கொலை செய்துகொண்டார். இவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இயக்குநர்கள் வெற்றிமாறன், பாரதிராஜா மற்றும் அமீர் உள்ளிட்டோர் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். இது தவிர 50,000 நிதியுதவியும் கொடுத்துள்ளனர்.