Published:Updated:

மனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்! - இயக்குநர் பாண்டிராஜ்

மனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்! - இயக்குநர் பாண்டிராஜ்
பிரீமியம் ஸ்டோரி
மனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்! - இயக்குநர் பாண்டிராஜ்

நேர்காணல்சுட்டி ஸ்டார்ஸ்

மனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்! - இயக்குநர் பாண்டிராஜ்

நேர்காணல்சுட்டி ஸ்டார்ஸ்

Published:Updated:
மனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்! - இயக்குநர் பாண்டிராஜ்
பிரீமியம் ஸ்டோரி
மனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்! - இயக்குநர் பாண்டிராஜ்

‘பசங்க' என்ற செம ஜாலியான படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து, இன்று `கடைக்குட்டி சிங்கம்' வரை பல ஹிட் படங்களைக் கொடுத்தவர், பாண்டிராஜ். இந்த ஆண்டு, `பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்' பயிற்சித் திட்டத்தின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட இயக்குநரிடம் நாங்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்...
   
``முதல் படமாக சின்னப் பசங்களை வெச்சு எடுக்கணும்னு ஏன் தோணுச்சு?''

``ஓர் இயக்குநர் தனக்கான தனி அடையாளத்தை முதல் படத்தில் வெளிப்படுத்தணும். அப்போ, பார்த்தீங்கன்னா, என் நண்பரான இயக்குநர் சிம்புதேவன், `இம்சை அரசன் 23-ம் புலிகேசி'னு வடிவேல் சாரை ஹீரோவாக்கி மன்னர் காலத்துப் படமாக ஒரு காமெடி படம் பண்ணினார். அதுவரை, வெலியாகிக்கொண்டிருந்த படங்களின் வகைகளிலிருந்து ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. மக்கள் ரசிச்சு ஹிட் ஆக்கினாங்க. அப்படி, ஒவ்வொரு புது இயக்குநரும் ஒரு புது லைனில் அசத்தினாங்க. நாம என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அப்போ, குழந்தைகள் படம் வர்றதே ரொம்ப அபூர்வமா இருந்துச்சு. அப்படியே, குழந்தைகள் படம்னு சொல்லிட்டு வந்தாலும், அதில் பெரியவங்க கேரக்டர்கள்தான் அதிகம் இருக்கும். குழந்தைகளையே மையமாக்கி, அவங்களின் சந்தோஷங்கள், பிரச்னைகளைப் பிரசாரமா இல்லாமல் ஜாலியா சொல்ல முடிவுபண்ணினேன். `பசங்க' பிறந்துச்சு."

மனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்! - இயக்குநர் பாண்டிராஜ்

‘‘நீங்க உங்க ஸ்கூல் நாளில் எப்படிப்பட்ட மாணவர்?''

‘‘நான் லாஸ்ட் பென்ச் ஸ்டூடன்தான். வருஷம் முழுக்க அரட்டை அடிச்சு நண்பர்களோடு விளையாடிட்டு, எக்ஸாம் டைமில் படிச்சு, 35, 36 என பார்டர் மார்க்கில் பாஸ் பண்ணிடுவேன். என்னைப் பற்றி அப்பாவிடம் புகார் மேலே புகார் போகும். அப்பா பயங்கரமா திட்டுவார். அதுக்கு அப்புறமா என்னைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்க ஆரம்பிச்சேன்.''

மனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்! - இயக்குநர் பாண்டிராஜ்

‘‘டைரக்டர் ஆகணும் என்கிற எண்ணம் எப்படி வந்துச்சு?''

‘‘என் சொந்தக்காரரில் ஒருவர், படிப்போ, வசதியோ இல்லாத ரொம்பச் சாதாரணமானவர். ஆனால், அவர் குடும்ப விழாக்களில் இருந்தால், எல்லோரும் அவரையே சூழ்ந்துட்டு இருப்பாங்க. எல்லோரும் அவரை எதிர்பார்த்துட்டிருப்பாங்க. காரணம், ரொம்ப நகைச்சுவையா பேசி அந்த இடத்தையே கலகலப்பா வெச்சுப்பார். ஆக, மத்தவங்க மனசுல இடம் பிடிக்கணும்னா அவங்களைச் சிரிக்க வைக்கணும்னு தெரிஞ்க்சுகிட்டேன். எட்டாவது படிக்கும்போது, ஸ்கூலில் ஒரு நாடகத்தில் நடிச்சேன். வெள்ளைக்காரன் வேஷம். யோசிச்சுப் பாருங்க. என் நிறத்துக்கு வெள்ளைக்காரன் வேஷம்னா, அப்போ என் ஊருல இருந்த மத்த பசங்க எல்லாம் எந்த நிறத்துல இருந்திருப்பாங்கன்னு. அப்போதிலிருந்து டைரக்டர் ஆகும் ஆசை என் மனசுல வந்துருச்சு. அதுபற்றி எதுவுமே தெரியாது. 'நான் டைரக்டரா மட்டும்தான் ஆவேன்னு முடிவெடுத்துட்டேன். சென்னைக்கு வந்து ஏவிஎம் ஸ்டூடியோவில் செக்யூரிட்டியா இருந்தேன், `பாக்யா’ பத்திரிகையில் வேலை செய்தேன். இப்படிப் பல வேலைகள் செய்தாலும், என் இலக்கு டைரக்டர் ஆகறதா மட்டுமே இருந்துச்சு. எல்லா வேலைகளையும் நேசிச்சு செஞ்சேன். படிப்படியா என் இலக்கு நோக்கிப் போனேன்.''

மனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்! - இயக்குநர் பாண்டிராஜ்

‘‘உங்க அப்பா, அம்மா எதுவும் சொல்லலையா?''

‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன் நான். என் அப்பாவுக்கு, நான் சொந்தமா ஒரு சைக்கிள் கடை வெச்சுக்கிட்டா போதும் என்பதுதான் அதிகப்படியான ஆசையா இருந்துச்சு. சினிமா பற்றி என் அப்பா, அம்மாவுக்கு எதுவும் தெரியாது. சென்னையில் நான் கஷ்டப்படுறேனேன்னு அவங்களுக்கு ரொம்பக்  கவலையா இருந்துச்சு. ஒருகட்டத்தில், அவங்க ஆசைக்காக மறுபடியும் ஊருக்குப் போய் அண்ணனின் சைக்கிள் கடையிலே வேலை செஞ்சேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம் சென்னைக்கு வந்துட்டேன். நான் நல்லா வந்துடுவேன்னு அவங்க முழுசா நம்பினாங்க. ஆனால், என் முதல் படம் வெளியானபோது அதைப் பார்க்க அவங்க உயிரோடு இல்லை. அப்பா, அவருக்கு ஒரு வாட்ச் கேட்டார். அப்போ,  என்னால  அதைக்கூட வாங்கிக்கொடுக்க முடியலை. இப்போ, வசதி இருக்கு. ஆனால், அப்பா இல்லை. அந்த வருத்தம் எனக்கு எப்பவும் உண்டு. நீங்க, உங்க வாழ்க்கை இலக்கில் கவனமா இருங்க. அதேநேரம் அம்மா, அப்பாவோடு நிறைய நேரம் செலவிடுங்க. அவங்க அன்புக்கு ஈடாக எதுவுமில்லை.''

‘‘உங்க வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணம் எது?''

‘‘என்னுடைய ‘பசங்க' படத்தில், ஸ்கூலில் பசங்களுக்குள் பெரிய சண்டை நடக்கும். அப்போ, சிறுமி மனோன்மணியம் ஓடிப்போய் தேசியகீதத்தை ஒலிபரப்பும். எல்லோரும் சண்டையை நிறுத்திட்டு எழுந்து நிற்பாங்க. இந்தக் காட்சிக்கு தியேட்டரிலும் எல்லோரும் எழுந்து நிற்பாங்க என எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி நடக்கலை. அதேநேரம், சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் பல நாடுகளின் படங்களுடன் பசங்க படமும் கலந்துக்கிச்சு. அங்கே அந்தக் காட்சி வந்தபோது, பல வெளிநாடுகளைச் சேர்ந்தவங்க எழுந்து நின்னு மரியாதை செலுத்தினாங்க. எனக்கு கண் கலங்கிருச்சு. அது, மறக்கமுடியாத தருணம். அதுதான் எனக்கான பெரிய விருதாகப் நினைக்கிறேன்.''

‘‘வேற இயக்குநர்கள் அவங்க படத்தில் உங்களை ஹீரோவாக நடிக்கக் கூப்பிட்டால் நடிப்பீங்களா?''

‘‘ஹா... ஹா... பயப்படாதீங்க. தமிழ் மக்களுக்கு அவ்வளவு பெரிய சோதனைகளை நான் கொடுக்க மாட்டேன். இப்பவும், வெவ்வேறு கேரக்டர்களில் நடிக்க, சில இயக்குநர் நண்பர்கள் கேட்கிறாங்க. ஆனால், `இப்படி நடி'னு ஒருத்தருக்கு ஈஸியா சொல்லிக் கொடுத்துடலாம். அதையே நாம செய்றது கஷ்டம். என்னால், ரெண்டு நிமிஷத்துக்குமேலே போட்டோவுக்கு போஸ் கொடுக்கத் தெரியாது.''

‘‘ `பசங்க' படத்துக்காக தேசிய விருது வாங்கியபோது எப்படி இருந்துச்சு?''

‘‘தேசிய விருது வாங்குறதுக்கு டெல்லிக்குப் போறதுக்கு முன்னாடி நாளில், எனக்கு முதல் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் பார்த்துட்டு விமானம் ஏறிட்டேன். விருதுடன் திரும்பி வந்ததும் அதை என் மகன் கழுத்தில் மாட்டினேன். அந்த நிமிடங்களை என்னால் மறக்கவே முடியாது.''

‘‘சினிமாவிலிருந்து நிறையப் பேர் அரசியலுக்கு வர்றாங்க. அதுமாதிரி நீங்களும் வருவீங்களா?''

``நாம எல்லோருமே அரசியலில்தான் இருக்கோம். நாம செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் இருக்கு. நம்ம எல்லோருக்குமே அரசியல் தெரிஞ்சிருக்கணும். அது ரொம்ப முக்கியம். ஆனால், கட்சியில் இருந்துதான் செய்யணும்னு இல்லை. ஒவ்வொருத்தரும் அவங்க சார்ந்த வேலை, சேவைகளின் வழியே சமூகத்துக்குப் பயன்படும் அரசியல் செய்யணும். நான் சினிமா மூலமா செய்றேன். என்னுடைய ஒவ்வொரு படத்திலும், அந்த அரசியல் இருக்கும். இப்போ, `கடைக்குட்டி சிங்கம்' படத்திலும் விவசாயம், குடும்பப் பாசத்துடன் அரசியலும் இருக்கு. இப்படித்தான் சமூகத்துக்கான பங்களிப்பா என் அரசியல் இருக்கும்.''

‘‘நீங்க எடுத்த படங்களிலேயே ரொம்பப் பெஸ்ட்டுனு என எதைச் சொல்வீங்க?''

‘‘என் ஒவ்வொரு படத்தையுமே நான் பெஸ்ட்டா நினைச்சுதான் எடுக்கிறேன். என் குழந்தைகள் எல்லோருமே எனக்கு பெஸ்ட்டுதான். இப்போ எதுன்னு கேட்டீங்கன்னா, 'கடைக்குட்டி சிங்கம்'னு சொல்வேன். ஏன்னா, அப்போதானே நீங்க எல்லோரும் போய்ப் பார்ப்பீங்க''. (சிரிக்கிறார்)

 மேலும், பல கேள்விகளுக்குச் சளைக்காமல் பதில் அளித்த இயக்குநர் பாண்டிராஜ், ``உங்க இலக்கு எது எனத் தீர்மானிச்சு அதை நோக்கிப் போங்க. அதுக்கு இடையில் சந்திக்கும் எல்லா விஷயங்களையும் நேசிச்சுச் செய்யுங்க. பாடப்புத்தகம் மட்டுமே வாழ்க்கை இல்லை. அதைத் தாண்டி நிறைய புத்தகங்கள் படிங்க. உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களைக் கவனிங்க. அவங்களோடு அன்பா பழகுங்க. அவங்களைப் படிங்க. என் படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டருமே அப்படி என்னைச் சுற்றியிருக்கும் நிஜ மனிதர்கள்தான். அப்படி மனிதர்களைப் படிக்க ஆரம்பிச்சுட்டீங்கன்னா நீங்கதான் வெற்றியாளர். ஆல் தி பெஸ்ட்'' என்று வாழ்த்தினார்.

படங்கள்: ப.சரவணகுமார், வ.யஷ்வந்த்