Published:Updated:

`2.0 ரிலீஸ்' - குழப்பம் தீர்ந்ததா?!

தார்மிக் லீ
`2.0 ரிலீஸ்' - குழப்பம் தீர்ந்ததா?!
`2.0 ரிலீஸ்' - குழப்பம் தீர்ந்ததா?!

ஷங்கர் - ரஜினி கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம், 2.0. கஜா புயலால் படம் சொன்ன தேதியில் (29-11-2018) வெளியாகுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.

2010-ம் ஆண்டில் வெளியான 'எந்திரன்' படம் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருந்தார், இயக்குநர் ஷங்கர். முழுக்கவே 3டி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்துக்கான கிராஃபிக்ஸ் வேலைகள், உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் தமிழ்நாட்டைத் தாக்கிய கஜா புயலால் படம் சொன்ன தேதியில் வெளியாகுமா அல்லது தள்ளிப் போகுமா என்ற கேள்வியும் குழப்பமும் எழுந்தது.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்தனர். தற்போது வெளியாகியிருக்கும் செய்திப்படி, படத்தைச் சொன்ன தேதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் யார் யார் படத்தை வெளிடுகிறார்கள் என்ற தகவலும் வெளிவந்ததுள்ளது. கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் அன்புச்செழியன், செங்கல்பட்டில் அருள்பதி, சென்னையில் எஸ்.பி.ஐ சினிமாஸ், சேலத்தில் சிவா, மற்ற பகுதிகளில் சீனிவாசன் அல்லது காளியப்பன் ஆகியோர்கள் படத்தை வெளியிடுகிறார்கள். திருச்சியில் லைக்கா நிறுவனமே படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதைத் தொடர்ந்து படம் வரும் 29-ம் தேதியன்று நிச்சயம் வெளியாகும் எனத் தெரிகிறது.