Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

• ரன்வீர் கபூர் - தீபிகா படுகோன் திருமணம், வரும் நவம்பர் மாதம் நடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தை இத்தாலியில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். எனவே, ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ்டர் மியாவ்

• ‘‘நடிகர்,  கிரிக்கெட் வீரர், இப்போது டாக்டர் என என்னைப் பற்றி வரும் ஆதாரமற்ற செய்திகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். இப்போது என் காதல் சினிமா மட்டும்தான். எங்கிருந்து இதுபோன்ற வதந்திகள் கிளம்புகின்றன என்பது புரியவில்லை’’ என வருந்துகிறார் தமன்னா.

• சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி எழுதிப் பாடி பிரபலமான பாடலை ‘சார்லி சாப்லின் 2’ படத்தில் பயன்படுத்தியுள்ளனர். அந்தப் பாடலுக்கு பிரபுதேவாவும் நிக்கி கல்ராணியும் நடனமாடியுள்ளனர்.

மிஸ்டர் மியாவ்

•   விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், நெதர்லாந்தில் நடிப்புப் பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். நெதர்லாந்தில் வெளிநாட்டுப் பெண்ணுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபிக்களை தன் இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்துவந்தார். அந்தப் பெண்ணுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி, படத்தையும் பதிவிட்டார். ‘யார் அந்தப் பெண்?’ என இணையத்தில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. 

• ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் ‘காற்றின் மொழி’ படத்தை ஒரே ஷெட்யூலில் முடித்துவிட்டனர். படத்தின் டப்பிங் பணி ஆகஸ்ட் 6-ம் தேதியிலிருந்து தொடங்குகிறது. 

• கிருஷ்ணா, பிந்து மாதவி நடிக்கும் ‘கழுகு 2’ படத்தின் பாடல் காட்சிகள் தவிர, மற்ற காட்சிகளை 28 நாள்களில் முடித்துள்ளனர். பாடல்களுக்கான படப்பிடிப்பு ஆகஸ்டில் நடக்குமாம். படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ்டர் மியாவ்

• சந்தானம் நடிக்கும் ‘தில்லுக்கு துட்டு 2’ படத்துக்கு ஹீரோயினை வலைவீசித் தேடிவந்தனர். ஒரு வழியாக, ஷ்ரிதா சிவதாஸ் எனும் மலையாள நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.

ஹாட் டாபிக்

ன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு, வெப் சீரிஸாக வெளியானது. பணம் கட்டிய சந்தாதாரர்கள் மட்டுமே இந்தத் தொடரைப் பார்க்க முடியும். ஆனால், பைரஸி மூலமாக அந்தத் தொடரை யார் வேண்டுமானாலும் பார்ப்பதுபோல் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது சன்னி லியோனுக்கும், படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

• த்ரிஷாவின் நடிப்பில் வெளியான ‘மோகினி’ படத்தின் கதை மாதவனுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். எனவே, இந்தக் கதையை இந்தியில் தயாரிக்கவிருக்கிறார் மாதவன்.

மிஸ்டர் மியாவ்

வைரல்

த்ரிஷா, தான் வேலைகளை எப்படி அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைக்கிறார் என்பதை, அனிமேஷன் கார்ட்டூன் வடிவில் ஒரு வீடியோவாக உருவாக்கி, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு பல லைக்குகளும் லவ் எமோஜிகளும் குவிந்துவருகின்றன.