Published:Updated:

‘நான் பலமுறை உங்களைத் தவறாக பேசியுள்ளேன்’ - தமிழ் ராக்கர்ஸால் வேதனையடைந்த விஜய் தேவரகொண்டா!

‘நான் பலமுறை உங்களைத் தவறாக பேசியுள்ளேன்’ - தமிழ் ராக்கர்ஸால் வேதனையடைந்த விஜய் தேவரகொண்டா!
‘நான் பலமுறை உங்களைத் தவறாக பேசியுள்ளேன்’ - தமிழ் ராக்கர்ஸால் வேதனையடைந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த ஹாரர், த்ரில் திரைப்படம் ‘டாக்ஸிவாலா’. ராகுல் சங்கிரிட்யான் இயக்கியுள்ள இப்படத்தை, ஃபன்னி வாஸ், வம்சி கிருஷ்ண ரெட்டி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. 

‘நான் பலமுறை உங்களைத் தவறாக பேசியுள்ளேன்’ - தமிழ் ராக்கர்ஸால் வேதனையடைந்த விஜய் தேவரகொண்டா!

இப்படம் திரையரங்கில் வெளியாவதற்கு இரண்டு வாரங்கள் முன்பே இணையத்தில் வெளியிடப்பட்டது. இருந்தும், இது தேவரகொண்டாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளி வருகிறது. டாக்ஸிவாலா படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. அப்போது தன் படம் முன்னதாகவே இணையத்தில் வெளியானது குறித்து மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார் விஜய் தேவரகொண்டா. 

அவர் பேசும் போது, “டாக்ஸிவாலா என்ற படத்தை ஒரு வருடத்து முன்பே தொடங்கி அதற்கு புது இயக்குநர், புது தயாரிப்பாளர், புது இசையமைப்பாளர், என மொத்த குழுவும் திரையுலகுக்குப் புதிதாக இந்த படத்தின் மூலம் இணைந்திருந்தோம். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இப்படி ஒரு படம் வரப்போவதாக ஃபர்ஸ்ட் லுக் பொஸ்டர் வெளியானது. அதன் பிறகு ஜூன் மாதத்தில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த படத்துக்காக அனைவரும் மிகவும் கடுமையாக உழைத்திருந்தோம். கீதா கோவிந்தம் மற்றும் நோட்டா படங்களுக்கு முன்பே இதை நான் கையில் எடுத்து அதற்கான படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. டாக்ஸிவாலா மிகச் சிறந்த கதை அம்சம் கொண்டதால் அதற்கான கிராஃபிக்ஸ் வேலைகள் அதிகம் தேவைப்பட்டது. இதனால் முன்னதாகவே வெளியாக இருந்த படம் கிராஃபிக்ஸ்மூலம் இன்னும் மெருகேற்றப்பட்டது. அனைத்தும் முடிந்து படம் ரிலீஸாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே இணையத்தில் வெளியாகி எங்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. 

டாக்ஸி வாலா படத்தின் லிங்கை பலரும் ஷேர் செய்து அனைவரும் பார்த்துவிட்டு இந்தப் படம் நன்றாக இல்லை இது திரையங்கில் வெளியானாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறாது என பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகள் சொல்ல தொடங்கினர். இதில் இருந்து வெளிவரமுடியாமல் எங்கள் படக்குழுவினர் தவித்தனர். பிறகு முன்னணி நடிகர்களான சூர்யா, பிரபாஸ், சரண், துல்கர் சல்மான் போன்றவர்களுக்கு எங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊக்கமளித்தனர். எப்படியும் இதைத் திரையரங்கத்தில் வெளியிட்டே ஆகவேண்டும் என்ற நோக்கில் பல கஷ்டங்களை தாண்டிக் கடந்த 17-ம் தேதி இந்தப் படத்தை வெளியிட்டோம். தற்போது நான் நிற்கும் இடம் டாக்ஸிவாலா படத்தின் வெற்றி கொண்டாட்டம். இதற்கு ரசிகர்கள் நீங்கள்தான் காரணம். படம் இணையத்தில் வெளியானபோது விஜய் தேவரகொண்டாவின் வாழ்க்கை முடிந்துவிட்டது. அவனின் கெரியர் அவ்வளவுதான் அவர் திரையுலகைவிட்டு திரும்பிச் செல்லலாம் என்ற நிலையில் என்னை மீண்டும் வெற்றியில் நிற்கவைத்த என் ரசிகர்களுக்கு நன்றி. நான் பலமுறை உங்களைத் தவறாக பேசியுள்ளேன் ஆனால் அதற்கு தற்போது வருந்துகிறேன் என் படத்தை இணையத்தில் வெளியிட்ட பைரஸிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ராக்கர்ஸ், ரூலர்ஸ், டாட் இன், டாட் காம் போன்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வளவு சிரமங்களையும் தாண்டி நம் அனைவரின் ஒற்றுமைதான் இந்த வெற்றிக்குக் காரணம். என் படக் குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் மீண்டும் நன்றி” எனப் பேசினார்.