இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியை சிங்கப்பூரில் உள்ள பிரபல மௌண்ட் எலிசபெத் மருத்துவமனை கையில் எடுத்திருக்கிறது. அவருடைய ஆல்பங்கள், சில திரைப்படப் பாடல்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன. சில இசைக்கோப்புகளை பிரத்யேகமாக இந்தத் தொகுப்புக்காகப் போட்டுக் கொடுத்திருக்கிறார் இசைஞானி! விருந்தே மருந்து!

பிரபல நட்சத்திர ஆடை வடிவமைப்பாளர் ஜோடி ஃபால்குனி, ஷேன் பீக்காக் சமீபத்தில் டெல்லியில் நடந்த INDIA COUTURE WEEK 2018-ல் கலந்துகொண்டார்கள். தங்கள் நிகழ்ச்சியின் இறுதி அலங்கார அணிவகுப்பில் கரீனா கபூரை இறக்கினர். அரங்கம் அதிர கரீனா உலோக வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பொன் நிற ஆடையை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அவர் அணிந்து வந்த ஆடை மொத்தம் 30கிலோ எடையைக் கொண்டது. தங்கத்தாரகை!

`குலேபகாவலி’ படம் காமெடியிலும் ‘மெர்க்குரி’ நடிப்பிலும் நல்ல பெயர் வாங்கிக்கொடுத்த உற்சாகத்தில் சற்று வெயிட் போட்டிருக்கிறார் பிரபுதேவா. ஷூட்டிங்கில் இருக்கும் `யங் மங் சங்’, `சார்லி சாப்ளின் 2’-ல் காமெடி ட்ராக் அதிரிபுதிரியாம். அதோடு அறிமுக இயக்குநர் முகிலின் `பொன் மாணிக்கவேல்’ படத்தில் முதல்முறையாக போலீஸ் யூனிஃபார்ம் மாட்டியிருக்கிறார். அதோடு இரண்டு இந்திப்படங்களுக்கும் ஹீரோவாக கால்ஷீட் தந்திருக்கிறார். மாஸ்டர் இனிமேல் பிஸியோ பிஸிதான். ப்ளாஸ்டர்!

பார்பரா மோரியை ஞாபகம் இருக்கிறதா? 2010-ல் ரிலீஸான பாலிவுட் படம் `கைட்’டில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு ஜோடி போட்டு பிரெஞ்சு கிஸ் கொடுத்தவர். மெக்ஸிகோவில் தற்போது செட்டில் ஆகியிருக்கும் இவருக்கு 2010-ம் வருடம் கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக விழிப்பு உணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டு கவனம் ஈர்க்கிறார் பார்பரா. அமெரிக்க வாழ் இந்திய நடிகை நம்ரதா சிங் குஜ்ரால் ‘1 எ மினிட்’ என்ற ஆங்கில ஆவணப் படம் ஒன்றை எடுத்துள்ளார். அதில் பாசிட்டிவாக கேன்சர் சிகிச்சையை அணுகுவது குறித்துப் பேசியுள்ளனர். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நடிகைகளுடன் பேசி எல்லோரையும் ஒருங்கிணைத்தவர்தான் இந்த பார்பரா மோரி. சொல் அல்ல செயல்!

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. என்.டி.ஆர் கதாபாத்திரத்தில் அவர் மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். என்.டி.ஆரின் மனைவி வேடத்தில் பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.படத்தின் இரண்டு பாடல் காட்சிகளில் வித்யாபாலன் ஹார்மோனியம் வாசிக்க வேண்டிய சூழல் இருப்பதால், அவர் தற்போது தீவிரமாக ஹார்மோனியம் வாசிக்கும் பயிற்சி எடுத்துவருகிறார்.  பலே பயோபிக்!

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்துவரும் விக்ரம் அடுத்து ‘தீரன்’ எச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். விஜய், அஜித் இருவரில் யாருக்கு வினோத் படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே, ஹை-ஆக்ஷன் த்ரில்லர் ஒன்றை விக்ரமுக்காக இயக்கவிருக்கிறார் எச்.வினோத். படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தைத் தொடங்குவதற்கு முன், ராஜேஷ். எம்.செல்வா இயக்கத்தில் அக்ஷராவுடன் இணைந்து நடிக்கிறார் விக்ரம். சீயான் அதிகாரம்!