Published:Updated:

`இப்படியொரு கொடூரத்த ஒரு பொம்பளைகிட்ட நா பாத்ததேயில்ல’ - `அக்னி தேவ்’ டிரெய்லர்!

`இப்படியொரு கொடூரத்த ஒரு பொம்பளைகிட்ட நா பாத்ததேயில்ல’ - `அக்னி தேவ்’ டிரெய்லர்!
`இப்படியொரு கொடூரத்த ஒரு பொம்பளைகிட்ட நா பாத்ததேயில்ல’ - `அக்னி தேவ்’ டிரெய்லர்!

பாபி சிம்ஹா நடித்துள்ள `அக்னி தேவ்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

'மசாலா படம்', 'உறுமீன்' ,`திருட்டுப் பயலே 2', 'சாமி ஸ்கொயர்' உள்ளிட்டப் படங்களில் நடித்து முடித்த பிறகு பாபி சிம்ஹா தற்போது நடித்து வரும் படம் `அக்னி தேவ்'. இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும், சதீஷ் முக்கிய பாத்திரம் ஒன்றிலும், மதுபாலா வில்லி வேடத்திலும் நடித்துள்ளனர். 'சென்னையில் ஒரு நாள்' படத்தை இயக்கிய ஜான்பால் ராஜன் மற்றும் சாம் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை சியாண்டோ ஸ்டூடியோ தயாரித்துள்ளது

படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. அரசியல் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இதில், பாபி சிம்ஹா போலீஸாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழுக்குத் திரும்பியுள்ள மதுபாலாவின் நடிப்புக்கு தீணி போடும் படமாக அவரது கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரைலரிலும் அந்த அளவுக்கு மதுபாலாவின் வசனங்கள், காட்சிகளில் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.