ஹாட் டாபிக்
‘‘பத்திரிகையாளர்கள் முன்னிலையில், ஸ்ரீரெட்டி தன் நடிப்புத் திறமையை நிரூபித்தால் பட வாய்ப்பு வழங்கத் தயார்’’ என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட ஸ்ரீரெட்டி, தான் டப்ஷ்மாஸ் செய்த வீடியோக்களை, ‘இது லாரன்ஸ் மாஸ்டருக்காக’ என்ற கேப்ஷனுடன் அவ்வப்போது தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார்.
• ராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு, ‘60 வயது மாநிறம்’ எனப் பெயரிட்டுள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• லண்டனில் ஷூட்டிங்கில் இருக்கும் ஸ்ரேயா, பிங்க் நிற கவர்ச்சி உடையில் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை அவரின் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.
• ‘தாதா 87’ படத்துக்குப் பிறகு, ‘பிக் பாஸ்’ ஆரவ்வை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார், இயக்குநர் விஜய்ஸ்ரீ. இப்படத்தின் ஹீரோயினாக ஒரு மலையாளப் பெண் நடிப்பதாகத் தெரிவித்திருந்தார் அவர். ‘அந்தப் பெண் ஓவியாவாக இருக்காதா’ என எதிர்பார்த்துக் காத்திருக்கிறது, ஓவியா ஆர்மி.

ஹைலைட்
‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜூங்கா’, ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டுக்கு நெருக்கமாகிவிட்டார், நடிகை சயீஷா. தமிழில் அதிகப் படங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன், சென்னையில் வீடு வாங்கிக் குடியேறத் திட்டமிட்டிருக்கிறாராம் சயீஷா.

வைரல்
‘கீக்கீ’ என்ற பாடலுக்கு ஓடும் காரிலிருந்து கீழே இறங்கி நடனமாட வேண்டும் என்ற டாஸ்க்கை ஏற்று, அதனைச் சிறப்பாக முடித்துள்ளார் நடிகை ரெஜினா கஸான்ட்ரா. பாவாடை தாவணியில் அவர் இருக்கும் இந்த வீடியோ, இணையத்தில் செம வைரல்.

• குளிர்பான விளம்பரத்தில் ரன்வீர் சிங்கும் மகேஷ்பாபுவும் இணைந்து நடித்துள்ளனர். அந்தப் படப்பிடிப்பின்போது அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.