Published:Updated:

ஜான்வி கபூர், மெளனி ராய், சாரா அலிகான்... பாலிவுட்டின் அசத்தல் அறிமுகங்கள்!

ஜான்வி கபூர், மெளனி ராய், சாரா அலிகான்... பாலிவுட்டின் அசத்தல் அறிமுகங்கள்!
News
ஜான்வி கபூர், மெளனி ராய், சாரா அலிகான்... பாலிவுட்டின் அசத்தல் அறிமுகங்கள்!

2018- ம் ஆண்டு, பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய கட்டுரை.

2018-ம் ஆண்டில் இதுவரை வெளியாகியிருக்கும் `தடக்', `பேட் மேன்', `கோல்ட்', `அக்டோபர்' போன்ற பல நல்ல பாலிவுட் படங்களுக்கு விருதுகள் காத்திருக்கின்றன. அப்படியான பல முக்கியப் படங்களில் இந்த வருடம் புது முகங்கள் நடித்திருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பிரபலங்களின் வாரிசுகளே! அவர்களைப் பற்றிய ஒரு ஷார்ட் ஸ்வீட் அறிமுகம் இது.  

சாரா அலி கான்:

`இந்தப் பொண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறோமே?' எனப் பார்க்கும் அனைவருக்கும் தோன்றலாம். கரெக்ட், சினிமா உலகில் அறிமுகமாகியிருக்கும் பாலிவுட் வாரிசு சாரா அலிகான், சைஃப்  அலி கானின் மகள். அலி கானின் முதல் மனைவியான அம்ரிதா சிங்குக்குப் பிறந்த குழந்தை இவர். இவரது ரிலேஷன்ஷிப்தான் தற்போது பாலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது. `ஆகாஷ் வாணி', `சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி' போன்ற பல ஹிட் படங்களில் நடித்த கார்த்திக் ஆர்யானின் கேர்ள் ஃபிரெண்ட் சாரா. தற்போது இவர் `கேதர்நாத்' படம் மூலமாக பாலிவுட்டுக்கு அறிமுகமாகவிருக்கிறார். கேதர்நாத்துக்குப் புனித யாத்திரையின் போது மலரும் ஒரு காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. சாராவுக்கு இணையாக சுஷாந்த் சிங் நடிக்கிறார். வருகிற டிசம்பர் 7-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. அடுத்ததாக, ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக `சிம்பா' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜான்வி கபூர்: 

ஜான்வி கபூருக்கு ஸ்ரீதேவியின் மகள் என்ற ஒற்றை அடையாளமே போதும். மராட்டியில் தேசிய விருது பெற்ற `சாய்ராட்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான `தடக்' படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். அடுத்ததாக, `ராம் லீலா', `பாஜிராவ் மஸ்தானி', `பத்மாவத்' ஆகிய படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஜான்வி நடிக்கவிருக்கிறார். இதில், இவருக்கு ஜோடியாக கார்த்திக் ஆர்யான் நடிக்கிறார். தவிர, சிம்பு நடிக்கவிருக்கும் படத்தின் மூலம் தமிழுக்கும் ஜான்வி கபூர் அறிமுகமாகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், அதை ஜான்வியே மறுத்திருக்கிறார்.  

இஷான் கத்தர் : 

ஜான்வி கபூருக்கு ஜோடியாக நடித்த `தடக்' படம் மூலம் பிரபலமானவர் இஷான் கத்தர். இவரது முதல் படம் படமான `பியாண்ட் தி க்ளவுட்ஸ்'ல் நடித்ததற்கு சிறந்த அறிமுக நடிகர் விருதினைப் பெற்றார். மேலும், `ஹாஃப் விடோ' படத்தில் இயக்குநர் தனுஷ் ரென்சுவிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார். `ஜப் வி மெட்', `உட்தா பஞ்சாப்' ஆகிய படங்களில் நடித்த ஷாஹித் கபூரின் தம்பி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆயுஷ் ஷர்மா :

நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் கணவர்தான், ஆயுஷ் ஷர்மா. `லவ்யாத்ரி' (Loveyatri) படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் `சல்மான் கான் ஃபிலிம்ஸ்' தயாரிப்பில் உருவானது. ஆயுஷ் ஷர்மா - அர்பிதா கான் தம்பதியருக்கு அகில் எனும் இரண்டு வயதுக் குழந்தை இருக்கிறது.  

பனிதா சந்து : 

இந்தியாவில் பிறந்து லண்டனில் வளர்ந்த மாடல், பனிதா சந்து. பல இந்தி விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் நடித்து பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர். வருண் தவானுடன் சேர்ந்து `அக்டோபர்' படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த `ஷியுளி' (Shiuli) கதாபாத்திரம் வசனங்களே இல்லாமல் உணர்ச்சிகளை யதார்த்தமாகக் கடத்தியிருந்தது. ஸ்டார் ஹோட்டல் மாடியிலிருந்து தவறுதலாக கீழே குதித்து உயிருக்குப் போராடி வரும் ஷியுளி எப்படி மீண்டு வருகிறாள் என்பதுதான் இப்படத்தின் கதை. மாடல் உலகிலிருந்து சினிமாவுக்குள் நுழைய அதிகம் யோசித்த பனிதாவுக்கு, இவரது முதல் படமே பெரும் சவாலாக அமைந்தது. இப்போது இவர் லண்டனில் மேற்படிப்புக்காகப் பெற்றோருடன் வசித்து வருகிறார். 

மௌனி ராய் : 

2006-ம் ஆண்டிலிருந்து டிவி சீரியலில் நடித்து வரும் பிரபலம், மௌனி ராய். `பிக் பாஸ்', `காமெடி நைட்ஸ்', `டான்ஸ் தீவானே' ஆகிய  ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர். இவர், அக்ஷய் குமார் நடித்து வெளியான `கோல்ட்' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது இவர் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிக்கும் `பிரம்மாஸ்த்ரா' திரைப்படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து போமன் இராணி, ராஜ்குமார் ராவ் நடிக்கும் `மேட் இன் சைனா' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.