Published:Updated:

`96 படம் என்னை அடித்துச் சென்றுவிட்டது' - கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பூரிப்பு

`96 படம் என்னை அடித்துச் சென்றுவிட்டது' - கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பூரிப்பு
`96 படம் என்னை அடித்துச் சென்றுவிட்டது' - கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பூரிப்பு

விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்த '96 படத்தை புகழ்ந்துதள்ளியுள்ளார், இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். 

விஜய் சேதுபதி, த்ரிஷா முதல்முறையாக இணைந்து நடித்த படம் '96. இந்தப் படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்க, `நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படம், சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ளது. நிறைய நாளுக்கு அப்புறம் சூப்பரான லவ் சப்ஜெக்ட் படம்' என்று பலரையும் ஃபீல் பண்ணவைத்த காவியம் '96. இந்தப் படத்தைப் பார்த்த பலர் 'இப்படி ஒரு ஜானு - ராம் நமக்கில்லையே!' என்று புராணங்கள் பாடிக்கொண்டிருக்கின்றனர். பல அழகான தருணங்களை இந்தப் படம் நினைவுபடுத்தி, வெளியானது முதல் இன்றுவரை பலரையும் தங்களின் பழைய நினைவுகளில் கட்டிப்போட்டுவைத்துள்ளது. இந்தப் படத்தில் உள்ள ‘காதலே காதலே’ பாடல் பலரது ரிங்டோனாக தற்போதும் ஒலித்துவருகிறது. தீபாவளியன்று இந்தத் திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன் பின்னரும் '96 படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய கிரிக்கெட் வீரருமான தினேஷ் கார்த்திக் இந்தப் படத்தை பார்த்துவிட்டு, தன் ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்துதள்ளியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “  ‘96  என்ன ஒரு அழகான படம். நான் இதை மிகவும் விரும்புகிறேன். காதலே காதலே ரசனையான பாடல். ஒவ்வொரு ஃபிரேமும் பாடலும் மிக அருமை. நான் சமீபகாலமாக விஜய் சேதுபதியின் ரசிகனாக இருந்து வருகிறேன். ஆனால், '96 படம் என்னை அடித்துச் சென்றுவிட்டது.  கோவிந்த் வசந்தாவின் காதலே... காதலே... பாடலை திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன். வாஷிங்டன் சுந்தர், முகுந்த் அபினவ், பாசு போன்றவர்களும் இந்தப் படத்துக்கு பெரிய ரசிகர்கள். என்ன சொல்கிறாய் அஷ்வின்” என அஷ்வினை டேக் செய்து தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.