Published:Updated:

“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை!”

“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை!”

நா.சிபிச்சக்கரவர்த்தி - படங்கள்: தினேஷ் பாபுராஜ்

“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை!”

நா.சிபிச்சக்கரவர்த்தி - படங்கள்: தினேஷ் பாபுராஜ்

Published:Updated:
“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை!”

மிழ்சினிமாவின் அபூர்வமான எளிய நட்சத்திரம், விதார்த். வித்தியாசமான கதைக்களங்கள், புதுமையான கதாபாத்திரங்கள் எனத் தேடித் தேடி நடித்துக்கொண்டிருப்பவர். அவரை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தபோது... 

“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை!”

“ ‘விதார்த் வித்தியாசமான கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்’னு உங்களுக்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கீங்க. இந்த அடையாளத்தை திட்டமிட்டுதான் உருவாக்குனீங்களா, அதுவாகவே அமைந்ததா?”

“நான் எப்போதுமே நல்ல சினிமாக்களைத் தேடிக்கிட்டிருப்பேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கதைகள் கேட்பேன். எனக்குப் பெரிய நடிகர்களோடு சேர்ந்து நடிக்கிற மாதிரி நிறைய கதைகள் வரும். இல்லைனா பெரிய தயாரிப்புக் கம்பெனிகளில் இருந்து கதைகள் வரும். அப்படி வரும் கதைகளெல்லாம் வழக்கமான கதைகளாகவே இருக்கும். ‘முழுக்க முழுக்க நல்ல கதைனா பண்ணுவோம். இல்லைனா சும்மாகூட இருப்போம்’னு எப்பவே முடிவு பண்ணிட்டேன். அந்த முடிவுதான், இப்படி ஒரு அடையாளத்தை எனக்குக் கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்.

“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை!”

ஒரு சினிமா, நல்ல சினிமாவா உருவாகி வர்றது அந்த இயக்குநர் கையில்தான் இருக்கு. ஒரு சிறந்த இயக்குநர் இருந்தார்னா, ஒரு சுமாரான கதையைக்கூட நல்ல திரைக்கதை மூலமா ரசிக்க வைக்க முடியும். ஆனால், ஒரு நடிகனோட கையில் ஒரு நல்ல கதையைத் தேர்வு செய்து, நடிக்கலாம் என்ற முடிவு மட்டும்தான் இருக்கு. அதை நாம சரியா செஞ்சாலே போதும்னு நினைக்கிறேன்.”

“நடிப்புக்கு ஹோம் வொர்க் செஞ்சுட்டுதான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போவீங்களா?”
 
“(சிரிக்கிறார்). நடிப்புக்காக நான் ஹோம் வொர்க் பண்ணுன படம்னா அது, ‘குற்றமே தண்டனை’தான். அதுவும் என் கண் அசைவுக்காக ஹோம் வொர்க் பண்ணுனேன். ஆனா, ‘காற்றின் மொழி’ படத்தைப் பொறுத்தவரைக்கும் நான் ஹோம் வொர்க் செஞ்சு நடிக்கலை. நாளைக்கு என்ன எடுக்கப் போறாங்கனு கேட்டுட்டு, அந்த சீனை முதல்நாளே பலமுறை படிப்பேன். ‘காற்றின் மொழி’ படத்தில் ‘நடிப்பின் சிங்கம்’ (ஜோதிகா) இருக்காங்க. அவங்ககூட சேர்ந்து நடிக்கும்போது, கொஞ்சம் முன்னாடியே தயாரா இருக்கணும்ல! அதனாலதான் இப்படி. முதல்நாளே படிக்கும்போது சில ஐடியா தோணும். அதை காலையில் போய் ராதாமோகன் சார்கிட்ட டிஸ்கஸ் பண்ணுவேன். இதைப் போட்டினு சொல்ல முடியாது. அந்தக் காட்சியை இன்னும் சிறப்பா கொண்டு வரணும் என்ற ஆசைதான்.”

“ ‘காற்றின் மொழி’ படத்தில் உங்க கதாபாத்திரம் என்ன?”

“ஜோதிகா மேடத்துக்குக் கணவரா நடிக்கிறேன். கணவன் மனைவிக்குள்ள நடக்கிற நிகழ்வுகள்தான் கதை. இந்த மாதிரி ஒரு கதாபாத்திரம் இதுவரை நான் பண்ணுனதில்லை. அழகான, அன்பான கணவரா நடிச்சிருக்கேன். இந்தப்படம், குடும்பப்பாங்கான கதைகளில்கூட விதார்த் நல்லா நடிப்பார்னு ஒரு அடையாளத்தைக் கொடுக்கும்னு நம்புறேன்.”

“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை!”

“ஜோதிகா என்ன சொல்றாங்க, உங்க படங்களெல்லாம் அவங்க பார்த்திருக்காங்களா?”

“ஜோதிகா மேடத்துடன் நடிக்கும்போது ஆரம்பத்தில் எனக்குத் தயக்கமா இருந்தது. பெரிய நடிகை அவங்க... ஆனால், ரொம்ப கேஷூவலா மத்த நடிகர்களுக்கு அவங்க கொடுக்கும் ஸ்பேஸ்... இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு நல்ல நடிகைங்கிறதைத் தாண்டி அவங்க ஒரு நல்ல மனுஷின்னுதான் சொல்லணும். ஷூட்டிங் ஸ்பாட்ல அவங்க போன் பேசி நான் பார்த்ததே இல்லை. கிளிசரின் இல்லாம அழும் சீன்ல நடிக்கிறாங்க. அந்தக் காட்சியைச் சொன்னதும், அப்படியே உள்வாங்கிக்கிறாங்க. தினந்தோறும் ஜோதிகா மேடம் என்னை ஆச்சர்யப்படுத்திக்கிட்டே இருக்காங்க.”

“ `ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் ஒன் லைன் என்ன?”

“ஒரு புதையல் கிடைக்கும். அதை யார் யார் எடுத்துக் கொண்டாடுறாங்க என்பதுதான் கதை. நகைச்சுவையை இப்படி ஒரு பரிமாணத்துல காட்ட முடியுமானு ஆச்சர்யப்படப்போறீங்க. ஏன்னா, படத்துல நாங்க யாரும் காமெடி பண்ண மாட்டோம், சீரியஸா இருப்போம். ஆனால், படத்தோட ஓப்பனிங்ல இருந்து படம் க்ளைமாக்ஸ் வரை காமெடியாதான் இருக்கும்.

இந்தப் படத்தில் எந்த வேலைக்கும் போகாம வெட்டியா ஊர் சுத்துற பையனா நடிக்கிறேன். ஆனால், உள்ளே வேறு ஒரு பரிமாணத்துல என் கேரக்டரை டிசைன் பண்ணியிருப்பாங்க. படத்தில் ஒரு ஊரே சேர்ந்து நடிச்ச மாதிரி இருக்கும், அவ்வளவு கதாபாத்திரங்கள் இருக்கு. ‘கோவை அன்னம்’னு ஒரு பொண்ணு பிரமாதமா நடிச்சிருக்காங்க. யாரு இந்தப் பொண்ணுனு கேட்குற அளவுக்குத் தனித்தன்மையோடு நடிச்சிருக்காங்க. ‘ஹலோ’ கந்தசாமிக்கு இந்தப் படம் முக்கியமானதா இருக்கும். இயக்குநர் முருகய்யா இத்தனை பேரை வெச்சுக்கிட்டு இவ்வளவு சீக்கிரத்தில் படத்தை முடிச்சுக் கொடுத்திருக்கார். கதையோடு இணைந்த காமெடி படத்துல அதிகமா இருக்கும்.” 

“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை!”

“வேற என்னென்ன  படங்கள் பண்ணிட்டிருக்கிங்க?”

“மலையாள இயக்குநர் ரபீஷ் வேலா இயக்கத்தில் ‘வண்டி’னு ஒரு படம் நடிச்சு முடிச்சிருக்கேன். நான்கு விஷயங்களை இணைக்கக் கூடிய நான்-லீனியர் கதை இது. அதிக செலவில் எடுத்திருக்கோம். படத்தோட எல்லா வேலைகளும் முடிஞ்சது. கூடிய சீக்கிரம் ரிலீஸாயிடும்.

அடுத்து பாலா சாரோட உதவியாளர் அறிவுநிதியோட இயக்கத்தில் ஒரு படம் பண்றேன். பொள்ளாச்சியில் ஒரு ஷெட்யூல் முடிஞ்சிருக்கு. பாலா சார் பட்டறையில் இருந்து வர்றவங்களுக்கு உணர்வுபூர்வமா படம் எடுக்கிறதை சொல்லித்தரணுமா என்ன?”

“நூற்றுக்கணக்கான கதைகளைக் கேட்டிருப்பீங்க, ஸ்க்ரிப்ட் படிச்சிருப்பீங்க... உங்களுக்கு என்னைக்காவது இயக்குநர் ஆகணும்னு ஆசை வந்திருக்கா?”

“நான் சில கதைகள் எழுதிக்கிட்டிருக்கேன். இப்பவே என்கிட்ட ஐந்து கதைகள் இருக்கு. எனக்குத் தோணும்போதெல்லாம் பேப்பர், பேனா எடுத்து எழுதிக்கிட்டிருப்பேன். அதை நாளைக்கே சினிமாவா எடுக்கப்போறீங்களானு கேட்டால், எனக்கே தெரியாது. டைரக்ஷன் பிடிக்கும். ஆனால், அதைவிட நடிப்பு ரொம்பப் பிடிக்கும். நமக்கு எது பிடிக்குமோ, அதை ஒழுங்கா செய்யணும்ங்கிறது மட்டும்தான் என் ஆசை. அதனால், நூறு சதவிகிதம் நான் டைரக்டர் ஆகமாட்டேன். ஏன்னா, ஒரு ஸ்க்ரிப்ட் உருவாக்க நான்கு மாதம், ஷூட்டிங் பண்ண நான்கு மாதம், அதை ரிலீஸ் பண்ண ரெண்டு மாதம்னு கிட்டத்தட்ட அந்தப் படத்துக்கே ஒரு வருடம் போயிடும். நான் அந்த ஒரு வருடத்தில் ஐந்து அற்புதமான படங்களில் நடிச்சிடுவேன். அதனால், அது தேவையில்லைனு நினைக்கிறேன்.”

அழகாய்ப் புன்னகைக்கிறார் விதார்த்.