பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“நான் இன்னும் குழந்தைதான்!”

“நான் இன்னும் குழந்தைதான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நான் இன்னும் குழந்தைதான்!”

சுஜிதா சென்

“ ‘யாரு ஹன்சிகாவா, குண்டா, கொழு கொழுனு குஷ்பு மாதிரி இருப்பாங்களே அவங்கதானே’னு கேட்பாங்க. அந்த பிம்பத்தை உடைக்கணும்னு நெனச்சேன். உடலோட சேர்த்து மனநிலையையும் ஆரோக்கியமா வெச்சுக்கிறதுல குறியா இருந்தேன். யோகா கத்துக்கிட்டேன். இப்போ உடல், மனம் ரெண்டுமே பயங்கர ஃபிட்.  நான் அடுத்தடுத்து நடிக்கிற கதாபாத்திரங்களுக்கும் இந்த எடை குறைப்பு உதவியா இருக்குது. ஆனா இப்ப, ‘ஏன் இவ்வளவு ஒல்லியானீங்க’னு நிறைய பேர் கேட்குறாங்க. இதுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?” - ஹன்சிகாவின் பேச்சில் அவ்வளவு குறும்பு. அடையாளம் தெரியாத அளவுக்கு எடை குறைத்திருக்கிறார். ஆனால் அதே அழகு!

“நான் இன்னும் குழந்தைதான்!”

“ஸ்குவாஷ் விளையாட்டு மூலமாதான் உடல் எடையைக் குறைத்தேன். டீனேஜ்ல இந்த விளையாட்டைப் பற்றி அதிகமா தெரிஞ்சுக்க ஆரம்பித்தேன். எனக்கு வெளியில்போய் விளையாடுறது, ஜாகிங் போறதெல்லாம் பிடிக்காது. சூரிய வெளிச்சமே தோல்ல படக்கூடாதுனு நினைப்பேன். அதனால ஜிம்ல அதிக நேரம் செலவிடுவேன். அதன் தொடர்ச்சி தான் ஸ்குவாஷ். தினமும் அரை மணி நேரம் ஸ்குவாஷ் விளையாடினா போதும், அது இரண்டு மணிநேரம் ஜாகிங் பண்றதுக்குச் சமம்”

“நான் இன்னும் குழந்தைதான்!”

“குழந்தைப்பருவத்துல இருந்து சினிமாவில் நடிச்சிட்டிருக்கீங்க... சினிமா இப்ப எப்படி இருக்கு?”

 ``நான் ரொம்ப நாள் துறையில இருக்குறதால நிறைய நண்பர்கள் இருக்காங்க.  சினிமா நல்ல முன்னேற்றமடைஞ்சிருக்கு. நிறைய வுமன்-சென்ட்ரிக் கதைகள் எனக்கு வந்துகிட்டிருக்கு. என்னால ஒரு படத்தை தனியா தாங்கிப்பிடிக்க முடியும்ங்கிற நம்பிக்கை இயக்குநர்களுக்கு இருக்குறதுதான் அதுக்கு காரணம். இப்போ அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கத்துல ஒரு வுமன்-சென்ட்ரிக் படத்துல கமிட்டாகியிருக்கேன்.”

“எப்போதுமே க்ளீன் கதாபாத்தி ரங்கள்லேயே நடிச்சிட்டி ருக்கீங்க. இயக்குநர் பாலா படங்கள்ல வர்ற அழுக்கான கதாபாத்திரங்கள் மாதிரியெல்லாம் ஹன்சிகாவைப் பார்க்க முடியாதா?”

“நான் இன்னும் குழந்தைதான்!”

“நான் பண்ற கதாபாத்திரங்கள் சின்னப் பசங்கள்ல இருந்து பெரியவங்க வரை எல்லாரும் ரசிக்கணும்னு விருப்பப்படுறேன். அழுக்கான கதாபாத்திரம் எனக்கு செட் ஆகாது. மேலும், தயாரிப்பாளர்களுக்கும் போட்ட காசு திரும்பக் கிடைக்கணும். அதனால க்ளீன் கதாபாத்திரங்களை மட்டும் ஏற்று நடிக்கிறது பெட்டர். இப்ப வரை நான் ஒரு கமர்ஷியல் ஹீரோயின்தான். இனிமேலும், அப்படித்தான்!”

“ஒவ்வொரு பிறந்தநாள்லயும் ஒரு குழந்தையைத் தத்தெடுக்குறீங்க. இந்த முடிவு உங்க வாழ்க்கையை எவ்வளவு மாத்தியிருக்கு?” 

“நான் இன்னும் குழந்தைதான்!”

“நான் என் கடைசி பிறந்தநாள்ல எந்தக் குழந்தையையும் தத்தெடுக்கலை. மும்பைப் புறநகர்ப் பகுதியில ஒரு முதியோர் இல்லத்தைக் கட்டிக்கிட்டிருக்கிறதுதான் அதுக்குக் காரணம். அதுக்காக காசு சேர்க்குறது, வேலைகள் பார்க்குறது மாதிரியான விஷயங்களிலேயே பாதிநேரம் செலவாயிடுது. வருடத்தின் முதல்நாளை என் குழந்தைகளோடுதான் கொண்டாடுவேன். அவங்களோடு சேர்ந்து கோயிலுக்குப் போவேன். நான் எப்பெல்லாம் அவங்களைப் பார்க்கப் போறேனோ, அப்பெல்லாம் அவங்க எனக்கு நிறைய கிஃப்ட், கார்ட்ஸ், லெட்டர்ஸ்னு எதையாவது செஞ்சு கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. அதையெல்லாம் பத்திரப்படுத்தி வெச்சிருக்கேன். என் பிறந்தநாள் அன்னைக்கு எவ்வளவு பெரிய பட ஷூட்டிங் போயிட்டிருந்தாலும், அதை அப்படியே விட்டுட்டு மும்பைக்கு வந்துருவேன். குழந்தைங்களோடதான் அந்த நாள் முழுக்க இருப்பேன். அவர்களுக்கான கல்விக்கட்டணம், உடைகள், அன்றாடச் செலவுகள்னு எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன். நான் பார்ட்டிகளுக்குப் போறதில்லை. நேரம் கிடைக்குறப்ப எல்லாம் குழந்தைகளுடன் இருப்பதையே விரும்புறேன்”

“இதையெல்லாம் உங்க குடும்பம் ஏத்துக்குதா?”

“நிச்சயமா. எனக்கான மிகப்பெரிய சப்போர்ட் என் அண்ணா பிரஷாந்த்தான். என் அம்மா டாக்டர், தோல் நிபுணர். அவங்க ஹாஸ்பிடல் வேலைகளை முடிச்சிட்டு என்னையும் பார்த்துகிட்டு இருக்காங்க. நான் சினிமாவுல என்ன பண்ண நினைக்கிறேனோ அதுக்கான முழு சுதந்திரமும் சப்போர்ட்டும் என் குடும்பத்துல இருக்கு. குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறதுலேயும் அப்படித்தான்!”

“நான் இன்னும் குழந்தைதான்!”

“கல்யாணம் எப்போ?”

“நான் இன்னும் ஒரு குழந்தைதான். கல்யாணம்ங்கிறது ரொம்ப தூரத்துல இருக்கு. அதை நோக்கிப் போகும் பாதையில நிறைய சவால்கள் இருக்கு. அதையெல்லாம் சாதிச்சுட்டுதான் கல்யாணம் பண்ணணும். ஸோ, இப்போதைக்கு சினிமாவில் சாதிக்கணும். குழந்தைகளை நல்லபடியா வளர்க்கணும், குடும்பத்தைப் பார்த்துக்கணும்ங்கிற எண்ணம் மட்டும்தான்.”